குடும்ப ஒற்றுமைக்கு தேவையானவை செய்யுங்க

  • by

குடும்ப ஒற்றுமை  அனைவருக்கும் அவசியமானது. குடும்பத்திலுள்ள அனைவருக்கும் தேவையான  அனைத்தும் குடும்ப உறுப்பினர்கள் மூலம மற்றும் கிடைக்கப் பெறலாம். 

கலந்துரையாடல்: 

குடும்பத்திலுள்லோர் எவ்வாறு ஒருவரையொருவர் கலந்துரையாடல் என்பது  அவசியம் ஆகும். மகிழ்ச்சியான குடும்பம் அமையும் பொழுது இல்லறம் இனிமையான அறமாகும். ஆனால் குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் கலந்துரையாடல் என்பது  எந்தளவிற்கு இருக்கின்றது என்பதை நாம் பரிசோதிக்க வேண்டும். 


குடும்ப நேரம்: 

இன்றைய காலத்தில் குடும்பத்திற்கான நேரத்தை நாம் ஒதுக்கீடு செய்தல் என்பது அவசியமானது ஆகும். நீங்கள் எந்தளவிற்கு குடும்பத்திற்காக நேரத்தை செலவிடுகிறீர்களோ அந்தளவிற்கு வாழ்கையானது சிறப்பு பெற்றதாக இருக்கும். 

குடும்பத்தில் நாம்  பெற வேண்டியது அன்பு மற்றும் அரவணைப்பு அதனை நாம் எவ்வ்வாறு அனுகின்றோம் என்பது அவசியம் ஆகும். குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நேரம் என்பது அவசியம் என்ன வேலை வேண்டுமானாலும் செய்  ஆனால் இந்த நேரம் என ஒரு நேரத்தை குடும்பத்திற்கு ஒதுக்க வேண்டியது அவசியம் ஆகும். குடும்ப உறுப்பினர்களுக்கான நேரம் ஒதுக்கும் பொழுது அதன் செயல்பாடு என்பது வேறு லெவலில் இருக்கும். 

குடும்ப பொறுப்பு: 

குடும்பத்தில் உள்ள பெரியவர்களுக்கு மட்டும் இருக்க வேண்டும் என்பதில்லை அது அனைவருக்கும் இருக்க வேண்டும். அந்த குடும்பத்திலுள்ள அனைவருக்கும் பொறுப்பான இருத்தல் நல்ல பயன் தரும். குடும்பத்தில் நிதி சம்மந்தமான விசயங்களில் தனியான பொறுப்பு  இருக்கும் பொழுது நீ பெரியவளா நான் பெரியவனா என்ற சிக்கல் எழாது. அதே நேரம் அண்ணன் தம்பிகள் ஒன்றாக இருக்கும் குடும்பத்தில் பணம் சம்மந்தமான பேச்சுவார்த்தையை தெளிவாக நடத்தும் பொழுது குடும்பத்தில் சிக்கல் வராது.  

மேலும் படிக்க: அன்றாடம் திட்டமிட்டு செயல்படுத்துங்கள்

கூட்டு குடும்பமோ தனி குடும்பமோ அனைவருக்கும் ஒன்று போல் மரியாதையானது கொடுக்க வேண்டும். அண்ணனுக்கு கொடுக்கும் மரியாதை நம்பிக்கையை  அந்த குடும்பத்திலுள்ள மற்ற தம்பிகளுக்கும் கொடுக்கபட வேண்டும். 


இயற்கையான இணைப்பு: 

போட்டியில்லாத உறவுகளை உருவாக்க வேண்டியது அவசியம் ஆகும். சித்தப்பா, பெரியப்பா  மகன்கள் யாராக இருந்தாலும் அன்பு அவசியம், அவர்களுக்குள் ஒப்பிடு என்பது தேவையற்றது ஆகும். ஒரு தாய் வீட்டுப் பிள்ளைகள் போல் அனைவரும் ஒன்றுப்பட்டு வாழ்வதை வலியுறுத்த வேண்டியது அவசியம் ஆகும். 

குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்திலும் குடும்ப உறுப்பினர்கள் தலையீடு அவசியம் ஆகும். குடும்பத்தினர் தலையிட்டு பொறுப்பாக தீர்த்து வைக்கும் எந்த ஒரு சிக்கலும்  சுமுகமாக தீர்க்கலாம். 

மேலும் படிக்க:மாதக் கடைசி வீட்டுக்கு புது பட்ஜெட் ரெடி பண்ணியாச்சா

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன