விரைவில் கர்ப்பமாக விரும்பும் பெண்கள் இந்த உடற்பயிற்சியை கண்டிப்பாக செய்யணுமாம்…!

  • by
do this exercise to get pregnant way faster

தாய்மை அடைவது என்பது பல பெண்களின் கனவாக இருக்கின்றது. ஆனால் அதற்கு ஏகப்பட்ட தடைகளும் நிலவி வருகிறது. இதை தடுத்து பெண்கள் கருவுற என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

கர்ப்பம் தரிக்கும் பெண்கள்

ஆரோக்கியமான பெண்கள் மிக எளிதில் கர்ப்பம் ஆகிறார்கள். ஆனால் ஒரு சில பெண்கள் தங்கள் எடுத்துக்கொள்ளும் தவறான உணவுகள் மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகளின் மிக எளிதில் கருவுற மாட்டார்கள். இது போன்றவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் தாங்கள் மிக எளிதில் கருத்தரிக்க முடியும். ஆனால் பெண்கள் உடற்பயிற்சிகள் செய்வதன் மூலமாக கருகலைப்பு ஏற்படும் என்று பலரும் சொல்வார்கள், இது அனைத்தும் எப்போது பெண்கள் அதிகமான எடை சுமக்கும் பொழுது மற்றும் உடல் வலிமைக்கு மேலான உடற்பயிற்சிகள் செய்யும் போது தான் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதுவே போதுமான அளவு நாம் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்வதன் மூலமாக உடல் ஆரோக்கியமாகவும் மற்றும் உடனடி கருத்தரிப்பும் ஏற்படும்.

மேலும் படிக்க – குழந்தைகளுக்கான பாரம்பரிய கஞ்சி வகைகள்..!

யோகா பயிற்சி

ஒரு சில பெண்களுக்கு மன அழுத்த பிரச்சனைகளினாள் கூட கருத்தரிப்பு தடைபடும். எனவே இவர்கள் தினமும் காலையில் யோகா பயிற்சி செய்வதன் மூலமாக மன அழுத்தம் குறைந்து, கரு உற்பத்தியாகும். இதன் மூலமாக மிக விரைவில் கர்ப்பமாகலாம். யோகா பயிற்சியில் குறிப்பிட்டுள்ள அனைத்து யோகங்களையும் முயற்சி செய்து உடல் வலிமையும், மனவலிமையும் அதிகரிக்கலாம். இதன் மூலமாக உடனடி கர்ப்பம் ஏற்படும். அதைத் தவிர்த்து கர்ப்பமான பிறகும் யோகா பயிற்சிகளை தொடர்ந்து செய்யலாம்.

பைலட் உடற்பயிற்சி

நம் உடல் பயிற்சியை செய்வதன் மூலம் நம் உடல் மிக விரைவில் சோர்வடையும். ஆனால் பைலட் பயிற்சி செய்யும் பொழுது நம் உடல் சோர்வு உடனடியாக அடையாமல் நம் வலிமையை அதிகரிக்கும். இதற்கு நாம் சாதாரணமாக கவர்ந்து படுத்துக்கொண்டு நம் கை முட்டிகளை கொண்டு எழுந்திருக்கவேண்டும். இப்படியே சில நிமிடங்கள் இருப்பதன் மூலமாக நம் உடலில் வியர்வை அதிகமாக வெளியேறும் இதனால் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி நம்மை புத்துணர்ச்சியாக வைக்கும்.

மேலும் படிக்க – அன்றாடகுளியல் ஆரோக்கித்தை அதிகரிக்கும்

வலு தூக்குதல்

கர்ப்பம் தரிக்கும் பெண்கள் அதிக எடை கொண்ட பொருட்களை தூக்கக் கூடாது என்பார்கள். அதற்கு ஏற்ப நம் உடற் பயிற்சிகள் செய்யும்போது குறைந்த எடையுள்ள பொருட்களைத் தூக்கி உடற்பயிற்சி செய்வது சிறந்ததாக இருக்கும். இது உங்கள் உடல் வலிமையை அதிகரித்து சுறுசுறுப்பாக வைக்க உதவும். இதன் மூலமாக கருத்தரிப்பு அதிகரிக்கும்.

நடைப்பயிற்சி

நடைப்பயிற்சி என்பது பெண்கள் எல்லா காலங்களிலும் செய்து வரலாம். கரு உற்பத்தி ஆகும் சமயங்கள் முதல் குழந்தை பிறக்கும் வரை நடைப்பயிற்சி அவர்களின் வாழ்க்கையின் அங்கமாக இருக்கிறது. எனவே திருமணமான பெண்கள் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது அவர்கள் உறுப்புகள் வலுவடைந்து, உடல் உறவு மேற்கொள்ளும் போது தேவையான ஆற்றல் அடைந்து உடனடி கருத்தரிப்பு ஏற்படுகிறது.

தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி செய்யும் பெண்களுக்கு 50% கருத்தரிப்பு ஏற்படுகிறது என்று ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க – வெண்மையான பற்களை வீட்டிலிருந்தபடியே எப்படி பெறலாம்.!

நீச்சல் பயிற்சி

தண்ணீரில் விளையாடுவது யாருக்குத்தான் பிடிக்காது. உடல் பயிற்சிகள் செய்யும்போது நம் உடல் உஷ்ணம் அதிகரிக்கும், அதிகப்படியான நீர் வெளியேற்றம் காணப்படும். அதுவே நீச்சலில் பயிற்சி செய்யும்போது நம்முடைய உடல் குளிர்ச்சியாகவும் நம்முடைய சோர்வு தன்மை குறைந்து சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். நீச்சல் பயிற்சி செய்யும் பெண்களின் உடல் தசைகள் வலுவடையும். அதே போல் அவர்களின் மன வலிமையும் உறுதியாகும். இதுபோன்ற நீச்சல் பயிற்சியை தினமும் செய்யும் பெண்களின் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதேபோல் நீச்சல் பயிற்சி பிரசவ சமயத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது.

எனவே பெண்கள் உடற்பயிற்சியை தங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக சேர்த்துக் கொள்வது மிக அவசியமாகும். அதேபோல் அருகில் இருக்கும் கடைக்கு செல்வதாக இருந்தாலும் அல்லது அலுவலகம் அருகில் இருந்தால் பெண்கள் முடிந்த வரை நடந்து செல்வது சிறந்ததாக இருக்கும். இல்லையெனில் ஏதேனும் மிதிவண்டிகளை பயன்படுத்தி அலுவலகத்திற்கு செல்லலாம். கர்ப்பம் தரிக்க வேண்டும் என்றால் அவர்கள் இது போன்ற வழிகளில் சரியாக கடைப்பிடித்து தங்களின் கர்ப்பத்தைத் தரிக்கும் வாய்ப்புகளை அதிகரியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன