திருமணத்தடையை தீர்க்கும் ஆண்டாள்.!

do this andal fasting for marriage

திருமணத்திற்கான சரியான வயது வந்தவுடன் பல பேருக்கு திருமணயோகம் கிடைப்பதில்லை. இதற்காக அவர்கள் பல விரதங்கள் மற்றும் பல கோவில்களுக்கு செல்கிறார்கள். ஆனால் இது அனைத்தும் ஒரு தெளிவு இல்லாமல் அவர்களுக்கு தோன்றுவதெல்லாம் செய்வதனால் இதற்கான பலன்கள் அவர்களுக்கு கிடைப்பதில்லை. சிலருக்கு ஜாதக தோஷங்கள் மற்றும் கிரகங்களின் பார்வை சரியில்லாமல் இருந்தாலும் திருமணம் நடைபெறுவதில் தடைகள் இருக்கும். இதற்காக நாம் எந்த கோவில்களுக்கு அல்லது எந்த சாமியை தரிசிக்க வேண்டும் என்பதை பற்றிய தெளிவை இந்த பதிவின் மூலம் பெறலாம்.

திருமணத்தடை நீங்குவதற்காக நாம் மார்கழி மாதம் திருப்பாவை பாடி ஆண்டாளை தரிசனம் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் திருமணத்தடை நீங்கி உங்கள் மனதுக்குப் பிடித்தவரே கிடைக்கும். பெண்களுக்கு கண்ணனைப் போல் மனம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆண்டாள் பாடிய திருப்பாவையின் அர்த்தங்கள் கண்ணனே தன் கணவனாக வரவேண்டும் என வேண்டுவதாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க – கணபதி ஹோமம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள்..!

உலகத்தை ஆளும் கண்ணனையே தனக்கு கணவனாக வரவேண்டும் என்பதற்காக ஆண்டாள் மேற்கொண்ட விரதமே பாவை நோன்பு. ஆண்டாள் அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு தினமும் பெருமாள் அமர்ந்த கோவிலை கண்ணனின் வீடாக எண்ணிக்கொண்டு வழிபாடு செய்து வருவார்.

ஆண்டாள் எப்படி விரதமிருந்து தன் மனதிற்குப் பிடித்த திருமாலை திருமணம் செய்தாரோ இதேபோல் பெண்கள் தனக்கு பிடித்த கணவன் அமைய வேண்டும் என்று வேண்டி விரதம் இருந்தால் நிச்சயம் அவர்களுக்கும் திருமணம் நடக்கும். இந்த விரத நாட்களில் பால், நெய் சேர்த்த உணவு வகைகளை உண்ணக்கூடாது மற்ற எளிய வகை உணவுகளை சாப்பிட்டு விரதத்தை கடைபிடிக்கலாம்.

ஆண்டாள் தன் மனதிற்குப் பிடித்த பெருமானின் படத்தை வைத்து உதிரிப்பூவை காலையும், மாலையும் தூவி வழிபாடு செய்தார். ஆனால் மனம் மகிழ இதுபோன்ற வழிபாடுகளை செய்தீர்கள் என்றால் நிச்சயம் ஆண்டாள் உங்களுக்கு அருள்புரிந்து உங்கள் திருமணத்தில் இருக்கும் தடைகள் நீங்கி உங்களுக்கு திருமணம் பாக்கியம் தருவாள்.

மேலும் படிக்க – பிரணயமா செய்வதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்.!

இதை, பெண்கள் ஒவ்வொரு மாதமும் பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளை நினைத்து விரதம் இருப்பது நல்லது. திருமணமாகாத பெண்கள் திருப்பாவையில் இருந்து தினமும் ஒரு பாடலை பாடி பிராத்தனை செய்து வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும். பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளுக்கு மாலை சார்த்தி வழிபடுதலும் வாரணம் ஆயிரம் பாடலை பாடி வந்தால் பெண்களுக்கு அவர்கள் விரும்பிய கணவர்கள் கிடைப்பார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன