உடலுறவில் ஈடுபட்ட பிறகு தம்பதிகள் செய்ய வேண்டியவை

useful tips of things what to do after having sex for couples

ஓர் தரமான உடலுறவை வைத்து பிறகு ஆண் பெண் இருவரும் காம மயக்கத்தில் அப்படியே படுத்து விடுவார்கள் இது உங்களை பெரிதாக பாதிப்படைய செய்யும் உடலுறவு மேற்கொண்ட பிறகு நாம் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு அப்படியே படுப்பதை தவிர்த்து விட்டு உடனடியாக கழிவறைக்கு சென்று உங்களை சுத்தப்படுத்த வேண்டும் அதே போன்று உடலுறவை கொள்வதற்கு முன் நாம் கழிவறையைப் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் இதில் நாம் உடலுறவை மேற்கொ ண்ட பிறகு நாம் எதை செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்

சிறுநீர் கழிக்க வேண்டும்

உடலுறவை கொண்டபிறகு நாம் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் இதை செய்வதினால் உங்கள் பெண் உறுப்பு மற்றும் ஆணுறுப்பில் இருக்கும் பாக்டீரியாக்கள் வெளியேறிவிடும் இதனால் உங்களுக்கு எந்த ஒரு தொற்றுகள் வராமல் தடுக்க முடியும்.

மேலும் படிக்க – காதலர் தினத்தில் கலக்கலான திட்டங்களோட ஜமாயுங்க!

சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்

உங்கள் உறுப்புக்களை மென்மையான துணிகளைக் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் அதை எப்போதும் காய்ந்த நிலையில் வைப்பது நல்லது நாம் சிறுநீர் கழித்த பின் அதை கழுவி விட்டு சுத்தப்படுத்துவது மிக முக்கியம்

ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்

இரவு நேரங்களில் உடலுறவு மேற்கொண்டு விட்டு அப்படியே உறங்குவதை தவிர்த்து அந்நேரத்தில் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது நல்லது இந்த சமயங்களில் கிரான்பெர்ரி பழச்சாறை சாப்பிட்டால் உங்கள் உறுப்பில் தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்க முடியும் அதே போன்று கொஞ்சம் குடிநீரையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க – அவசர காதல் பேச்சுகள் ஆறா வடுக்களாகும்

ரத்தம் வருகிறதா என்று பார்க்க வேண்டும்

உடலுறவுக்குப் பின் உங்கள் உறுப்பில் ஏதாவது ரத்தக்கசிவு ஏற்படுகிறதா என்று பார்க்க வேண்டும் அப்படி ஏற்பட்டால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும் ஏனென்றால் உங்கள் உடம்பில் ஏதாவது பகுதிகள் சேதம் அடைந்திருந்தால் இதுபோன்ற ரத்தக் கசிவுகள் ஏற்படும்

ஆணுறையை பரிசோதியுங்கள்

உடலுறவுக்கு பின் உங்கள் ஆணுறையை பரிசோதித்து பாருங்கள் பெரும்பாலான உடலுறவின் போது ஆண்களின் ஆணுறைகள் கிழிந்து அவர்களுக்கு தெரியாமல் அவர்களின் விந்து பெண் உறுப்புக்குள் சென்று விடுகிறது இதனால் அவர்கள் பிற்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு அப்போதே உங்கள் ஆணுறை கிழிந்து இருக்கிறதா என்பதை கவனித்து அதற்கேற்ற திட்டங்களை வைத்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க – காதல் இப்படி சொல்லும் பொழுது இன்பம் பொங்கும்..!

குளியல்

நீங்கள் மிக வெப்பமாக உணர்ந்தீர்கள் என்றால் அந்த சமயத்தில் குளிப்பது மிகவும் நல்லது இது உங்கள் உடம்பை மற்றும் உள் உறுப்புகளை மிகவும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் இதை தவிர்த்து நம் உடம்பில் இருக்கும் அனைத்து பாக்டீரியாக்கள் மற்றும் தொற்று கிருமிகள் வெளியேறி அழிந்துவிடும்

இதன் பிறகு உடல் உறவுக்குப் பின் இதையெல்லாம் கவனித்து பாருங்கள் நமக்கு கிடைக்கும் சந்தோஷத்தை மட்டும் யோசித்து எதிர்காலத்தில் எந்த ஒரு பிரச்சனைகளிலும் சிக்கிக் கொள்ளாமல் இதில் சொல்லப்பட்டிருக்கும் அறிவுரைகளை பின்தொடர்ந்து உங்களை மேம்படுத்தி கொள்ளுங்கள்.

1 thought on “உடலுறவில் ஈடுபட்ட பிறகு தம்பதிகள் செய்ய வேண்டியவை”

  1. Pingback: காதலரின் பிறந்த நாளை இந்த வழியில் கொண்டாடுங்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன