மனச ரிலாக்சா வைக்க இதை எல்லாம் யூஸ் பண்ணூங்க.!

do things to keep your mind relaxed

நமது மனம் என்பது குரங்கைப் போல் என முன்னோர்கள் கூறியுள்ளார்கள். குரங்கு எப்படி மரத்திற்கு மரம் தாவிக் கொண்டே இருக்குமோ நம் மனதும் அதேபோன்றுதான் தாவிக்கொண்டே இருக்கும். இதனால் மன நிம்மதியின்றி மன உளைச்சலுக்கு ஆளாவோம். அதுமட்டுமல்லாமல் நாம் செய்யும் வேளையில், மற்ற உறவுகளால் ஏற்படும் பிரச்சனைகள் என நமது மனம் உடனடியாக சோர்வடைகிறது. மனதை நாம் எப்போதும் உற்சாகமாக வைப்பதுதான் நல்லது இல்லையனில் இதனால் உங்களுக்கு பல உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்.

நாம் உற்சாகமாக இருந்தால்தான் நம்மை நெருங்கும் நோய்கள் விலகி செல்லும். இல்லையெனில் மிக எளிதில் நம்மை தொட்டுக் கொண்டு நம்மை வாட்டி வதைக்கும். இதை தவிர்ப்பதற்கு நாம் எப்போதும் சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருக்க வேண்டும். மன சோர்வை போக்கி நலமாக இருப்பதற்கு நாம் செய்ய வேண்டிய வழிகளை இந்த பதிவில் பார்ப்போம்.

மேலும் படிக்க – சைக்கிளிங் செல்வதினால் கிடைக்கும் பயன்கள்..!

எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது நல்லது. எல்லாம் எதிர்பார்ப்புகளும் பெரும்பாலும் ஏமாற்றங்களிலேயே முடிவடையும். இதனால் நமது மனம் உளைச்சலுகுள்ளாகி நிம்மதியை இழந்து விடுவோம். எனவே எதிர்பார்ப்பை தவிர்த்து நிம்மதியாக இருங்கள்.

புகை மற்றும் மதுப்பழக்கத்தை தவிருங்கள். ஒரு சிலர் மனக்கஷ்டத்தை போக்குவதற்காகதான் மது அருந்துகிறார்கள் என்பார்கள். ஆனால் உண்மையில் நாம் எப்போது மது மற்றும் புகைப் பழக்கத்தை அதிகரிக்கிறோமோ அப்போதிலிருந்து நமது நிம்மதி தடைபடுகிறது. இதனால் போதுமான அளவு உறக்கமும் நமக்கு கிடைப்பதில்லை, எனவே இதை உடனடியாக தவிருங்கள்.

யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் நமது மன சோர்வை போக்க முடியும். இதற்காக உங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து யோகா மற்றும் உடற்பயிற்சியை தினமும் காலையில் செய்யும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். இதன் மூலமாக மனச்சோர்விலிருந்து விடுபடலாம்.

ஆரோக்கியமான உணவு முறை மூலமாகவும் நமது மன சோர்வை போக்க முடியும். இதனால் பச்சைக் காய்கறிகள், பழங்களை சாப்பிடுவது நல்லது. மற்றும் ஆரோக்கியமற்ற உணவை முழுவதும் தவிர்த்திடுங்கள். ஒரு சிலர் மன அழுத்தத்தினால் அதிகமான உணவுகளை உட்கொள்வார்கள் இதுவே அவர்கள் உடல் பருமன் அடையும் வாய்ப்பை அதிகரிக்கும். இது போன்ற சூழல்களில் டயட் இருப்பது நல்லது.

மேலும் படிக்க – பலாப்பழத்தின் பயன்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

இரவு நேரங்களில் அதிகமாக கண் விழித்திருப்பதை தவிர்த்து சோர்வு ஏற்படும்போது உறங்குவது நல்லது. ஒரு நாளைக்கு குறைந்தது ஏழிலிருந்து எட்டு மணி நேரம் வரையாவது தூங்கவேண்டும். இதனால்தான் நமது உடல் வலிமை அடையும் எனவே இதை சரியாக கடைபிடிப்பது நல்லது.

உங்களுக்கு பிடித்த செயல்களை செய்யுங்கள். ஓவியம் வரைதல், விளையாடுவது, நண்பர்களுடன் உரையாடுவது என உங்களுக்கு பிடித்த பொழுது போக்கில் கவனத்தை செலுத்துங்கள் அதேபோல் கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காமல் எதிர்காலத்தைப் பற்றி யோசித்து உங்கள் வாழ்க்கைக்கான திட்டங்களை வகுத்துக் கொள்ளுங்கள். இதுவே உங்கள் மன உளைச்சல் பிரச்சனையிலிருந்து உங்களை காப்பாற்றும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன