தூங்குவதற்கு முன்பாக நாம் செய்ய வேண்டியவை..!

  • by
do these things before you are going to sleep

ஒவ்வொரு நாளும் நமக்கு தேவையான ஆற்றலைத் தருவது நம்முடைய தூக்கம் தான். நாம் மூன்றில் ஒரு பங்கை தூங்கிய கழிக்கிறோம். காலை முதல் மாலை வரை வேலை செய்துவிட்டு உணவருந்திவிட்டு உறங்குவதுதான் நம்முடைய கடமை. ஆனால் ஒரு சிலருக்கு தூக்கம் கண்ணைச் சுற்றிக் கொண்டு வரும் ஆனால் படுக்கையில் படுத்தால் தூக்கம் வராது. இது போன்றவர்கள் படுக்கையில் படுத்தவுடன் உடனடியாக தூக்கம் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை காணலாம்.

உடல் வெப்பத்தை குறையுங்கள்

கோடை காலத்தை விட குளிர்காலத்தில் நாம் அதிகமாக உறங்குவோம், இதற்குக் காரணம் குளிர்ச்சியான சூழ்நிலை தான். எனவே உங்கள் படுக்கையறையை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலமாக உங்களுக்கு உடனடி மற்றும் ஆழ்ந்த தூக்கம் உண்டாகும். வெயில் காலங்களில் நாம் காற்றோட்டமாக போர்வை எதையும் பயன்படுத்தாமல் தூங்கவேண்டும்.

மேலும் படிக்க – வைரஸ் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும் துளசி இலை.!

உறங்குவதற்கு முன்பு குளிப்பது நல்லது

உங்களுக்கு தூக்கப் பிரச்சினை இருந்தால் உறங்குவதற்கு முன்பாக குளிப்பது நல்லது. இது உங்கள் உடலில் இருக்கும் வெப்பங்கள் தளிர்த்து தூக்க உணர்வை அதிகப்படுத்தும். முடிந்தவரை சுடு தண்ணீரில் குளியுங்கள் இது உங்கள் உடல் உஷ்ணத்தை குளிக்கும்போது அதிகரித்தாலும் குளித்த பிறகு உங்கள் உஷ்ணம் அனைத்தையும் சுற்றியிருக்கும் ஈரப்பதம் உறிந்து விடும். எனவே உங்கள் உடல் குளிர்ச்சி அடைந்து நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும்.

தொலைபேசியை தவிருங்கள்

உறங்குவதற்கு முன்பாக உங்கள் தொலைபேசியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதனால் உங்கள் கண்கள் களைப்படைந்து தூக்கத்தை தாமதப்படுத்தும். அதை தவிர்த்து நீங்கள் ஒவ்வொரு நிமிடமும் தொலைபேசியை பார்க்கும்போது, நேரத்தை தான் உங்களுக்கு முதலில் தெரியும். இதனால் இவ்வளவு நேரம் கண்விழித்து இருக்கிறோமா என்ற மன உளைச்சல் உங்களுக்குள் உண்டாகும். எனவே இரவு தூங்கும் பொழுது கடிகாரம் மற்றும் தொலை பேசியை பார்ப்பதை தவிருங்கள்.

உடற்பயிற்சியைத் தவிருங்கள்

உடற்பயிற்சியை எப்போதும் நாம் அதிகாலையில் தான் செய்ய வேண்டும். ஒரு சிலர் வேலை நேரம் முடிந்த பிறகு உடற்பயிற்சிகள் செய்வார்கள். இது இவர்களின் தூக்கத்தை பாதிக்கும். எனவே மாலை அல்லது இரவு நேரங்களில் உடற்பயிற்சியை தவிருங்கள். அதேபோல் உங்களை கண் விழித்திருக்க உதவும் காபி, தேநீர், சாக்லேட் போன்றவைகளைத் தவிருங்கள்.

மேலும் படிக்க – பெரும் சத்துக்கள் நிறைந்த பேரிச்சை சாப்பிடுங்க

உறங்குவதற்கு வழி

எல்லாவற்றையும் சரியாக செய்த பின் தொடர்ந்தும் உங்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால் நீங்கள் உங்கள் படுக்கையில் படுத்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு உங்களை சாந்தப் படுத்தி கொள்ளுங்கள். பின்பு உங்கள் கண், மூக்கு, வாய், காது என எல்லா பகுதிகளையும் உங்கள் எண்ணத்தின் வாயிலாக உணருங்கள். இதை படிப்படியாக இருதயம், கைகால்கள், நரம்புகள் என எல்லாவற்றையும் உணர்ந்து அது சாந்தமாக இருக்கிறது என்று நம்ப வையுங்கள். இதை செய்த பிறகு இரண்டே நிமிடங்களில் உங்களுக்கு தூக்கம் வந்துவிடும்.

தூக்கத்தின் அற்புதத்தை உணர்ந்து அதை அதிகநேரம் எடுத்துக் கொள்ளாதீர்கள். அதிகபட்சமாக 8 மணி நேரம் தூக்கம் ஒருவருக்கு சிறந்தது, எனவே 8 மணி நேரம் என்று மற்ற சமயங்களில் தூங்கி விடாதீர்கள். இரவில் கிடைக்கப்படும் தூக்கம் தான் ஆரோக்கியமான தூக்கம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன