உங்களுக்கு சிகிச்சை தேவையா? இந்த 5 அறிகுறிகள் இருந்தால் நிச்சயம் நீங்கள் ஒரு சிகிச்சையாளரைப் பார்க்க வேண்டும்…!

  • by

சைக்கோதெரபி என்பது வாழ்க்கையின் பல சிக்கல்களுக்கு ஒரு அருமையான சிகிச்சையாகும், பல ஆயிரக்கணக்கான ஆய்வுகள் அதன் பயன்பாட்டை ஆதார அடிப்படையிலான சிகிச்சையாக ஆதரிக்கின்றன.

ஆனால் சில நேரங்களில் ஒரு நபருக்கு ஒரு சிகிச்சையாளரை எப்போது அணுக வேண்டும் என்று தெரியாது.

பின்வரும் தகவலை தெரிந்துகொண்ட பின்னர் உங்களுக்கு எந்த சிகிச்சையாளரை எப்போது அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற தெளிவு கிடைக்கும்.

மேலும் படிக்க -> மன அழுத்தமாக உணர்கிறீர்களா? உங்கள் மன அழுத்தத்தை கையாள உங்களுக்கு உதவ நாங்கள் உள்ளோம்…!

உங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க துயரம் ஏற்படும்:

ஒரு விதமான அமைதியின்மை, மனதில் படபடப்பு, செயலில் தடுமாற்றம், பசியின்மை, எப்போதும் எதோ சிந்தனை, ஒருவித அச்சம் இது போன்ற செயல்கள் ஒருவருக்கு வீட்டிலோ, பள்ளியிலோ அல்லது வேறு ஏதேனும் இடத்திலோ ஏற்பட்டால் அவர் சிக்கலில் உள்ளார் என்பது பொருள்.

இதுபோன்ற எண்ணங்கள் உங்களுடைய தினசரி வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். முன்பு நீங்கள் செய்த செயல்களை இப்பொழுது வழக்கமாக செய்ய முடியாமல் போகும் நிலைக்கு நீங்கள் தள்ளப்படலாம்;

அமைதியின்மை, மனப்பதற்றம், மற்றும் மனச்சோர்வு இவையெல்லாம் ஏற்பட்டு உங்கள் மகிழ்ச்சியை குலையவைத்திடும்.

நீங்கள் பிறருக்கு செய்த உதவி, உங்களுக்கு கிடைப்பதில்லை:

பிறருடைய துன்ப காலங்களில் நீங்கள் செய்த உதவி உங்களுக்கு தேவை என்கிற பொழுது உங்களுக்கு கிடைப்பதில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இதை எண்ணி உங்கள் மனம் கவலை படும்போது. பிரச்சனை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எப்போதும் யாரிடமும் உதவியை எதிர்பாராமல் இருப்பது மிகவும் நன்று. அப்படியே உதவி தேவைப்படும் பொழுது உதவி செய்வார் என்று நீங்கள் நம்புகின்ற நபரை அணுகுங்கள். பெரும்பாலும் உதவி தேவைப்படாத படி பார்த்துக் கொள்வது சிறந்தது.

மேலும் படிக்க -> உறவுகளில் உணர்வு துஷ்பிரயோகத்தின் எச்சரிக்கை அறிகுறிகள்!

உங்கள் நண்பர்கள் / குடும்பத்தினர்கள், உங்கள் புராணத்தை கேட்டு சோர்வடைதல்:

உங்களிடமிருக்கும் மனக் குமுறல்களை எப்போதும் உங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உங்களை சுற்றி உள்ளவர்களிடம் நீங்கள் அடிக்கடி கூறிக் கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு ஒருவிதமான சலிப்பு ஏற்படும்.

அந்த சலிப்பு பிற்காலங்களில் உங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தவும், வாய்ப்புள்ளது.ஆகவே உங்களுக்குள் இருக்கின்ற விஷயங்கள் உங்களை துன்பத்திற்கு உள்ளாக்கும் விஷயங்கள் அனைத்தையும் அனைவரிடமும் பகிர வேண்டிய அவசியமில்லை; எப்போது எதை யாரிடம் பகிர வேண்டும் என்கிற மனத் தெளிவை நீங்கள் பெற்றிருப்பது அவசியம்.

மனதை அமைதியாக வைத்துக்கொள்ள உங்களுக்கு பிடித்தமான செயல்களை நீங்கள் செய்வது சிறந்தது. பேச்சை குறைத்து செயலில் ஈடுபட்டு தீர்வை காண்பது தான் சிறந்தது.

மேலும் படிக்க -> ஊரடங்கின் போது தனிமை மற்றும் மேலதிக சிந்தனையை சமாளித்தல்…!

பிறரின் அறிவுரையை பற்றி சிந்தியுங்கள்:

நீண்ட நாட்களாக உங்களது செயலை கண்டு யாராவது உங்களிடம் அறிவுரை கூறினால் அதை பற்றி சிந்தியுங்கள். அதில் உண்மை இருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள்;

எப்பொழுதும் அறிவுரைகளைக் கேட்க உங்கள் காதுகளை தயாராக வைத்திருங்கள். எப்போதும் நீங்கள் செய்வது சரி என்ற எண்ணம் ஒருபோதும் கூடாது; ஆலோசனைகளை செவிமடுத்து கேளுங்கள் நல்ல செய்திகளை செவிமடுத்து கேளுங்கள்.

சந்தேகங்கள் இருந்தால் உங்களுடைய மேலாளர் அல்லது உங்களுடைய தலைமையிடம் சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெற்றுக் கொண்டு செயலில் முழு மனதாக ஈடுபடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன