தனுஷின் வளர்ச்சியை பாராட்டும் வாசு..!

director p vaasu appreciates the growth of actor dhanush

இயக்குனர் பி வாசு அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என எல்லா மொழிகளிலும் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வெற்றி அடைந்துள்ளார். இவர் சின்னத்தம்பி, உழைப்பாளி, மன்னன், சந்திரமுகி என ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கியவர். இதில் சந்திரமுகி திரைப்படம் மட்டும் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் சாந்தி திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்தது.

சமீபத்தில் பி வாசு அவர்கள் அளித்த பேட்டியில் இப்போது இருக்கும் பல சினிமாக்களை இணையதள விமர்சகர்கள்தான் அழித்து வருகிறார்கள் என்றார். உதாரணத்திற்கு சின்னத்தம்பி படம் மட்டும் இப்போது வெளியிட்டிருந்தால் ஒரு கதாநாயகனுக்கு தாலியைப் பற்றி தெரியாதா என்ற லாஜிக்கை வைத்து இந்தப் படத்தை தோல்வி படமாக மாற்றி இருப்பார்கள் என்று கூறிய அவர் அவரின் மகன் சக்தி வெற்றி அடையாததை நினைத்து வருத்தப்பட்டார். பி வாசு அவர்கள் தொட்டால் பூ மலரும் என்ற திரைப்படத்தை தனது மகன் சக்தியை வைத்து இயக்கி இருந்தார். அந்த படம் பெரிய வெற்றி அடையவில்லை, அதைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த அவர் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். இதை வருத்தத்துடன் தெரிவித்து மகனை வைத்து திரைப்படம் எடுத்து வெற்றி அடைந்தவர்கள் ஒரு சிலரே அதில் விஜய் மற்றும் தனுஷ் தான் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார்கள். அந்த வகையில் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க – ரவுடி பேபி சாய் பல்லவி வாழ்க்கைமுறை.!

வாசு அவர்கள் தனுஷை புகழ்ந்து தள்ளினார். தனுஷின் வளர்ச்சி அபாரமானது அவரின் தந்தை மற்றும் அண்ணன் இயக்கத்தில் படத்தை நடிக்கத் தொடங்கி இப்போது முன்னணி இயக்குனர்கள் அனைவரின் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவரின் நடிப்பு மற்றும் திறமையை அளவிடுவது என்பது மிகக் கடினம். தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி உள்ளார் தனுஷ், என்று கூறினார்.

தனுசை புகழ்வதற்கு சான்றாகவே அவரும் தான் தேர்ந்தெடுக்கும் படங்களில் கதாபாத்திரத்தை மிகக் கச்சிதமாக நடித்து கொடுத்திருக்கிறார். பவர் பாண்டி படத்தில் தான் சிறந்த இயக்குனர் என்றும் நிரூபித்து விட்டார். இப்போது தனுஷ் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறார் தனுஷ்.

மேலும் படிக்க – இணையத்தை கலக்கும் அனுஹாசனின் வாழ்க்கை முறை.!

பி வாசு அவர்கள் சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த படத்தில் வேட்டையன் மற்றும் டாக்டர் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற செய்தி ஏதும் வெளியாகவில்லை இருந்தாலும் இந்த படத்திற்கு தயாரிப்பாளர்கள் ரெடியாக இருப்பதால் மிக விரைவில் சந்திரமுகி இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன