கொரோனாவால் அதிகரிக்கும் இயந்திரப் பண பரிமாற்றம்..!

  • by
digital transactions increased due to corona virus

உலகம் முழுவதும் அதிக அளவில் பாதிப்பை உருவாக்கிய உள்ள இந்த கொரோனா வைரசினால் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் விழ்ச்சி அடைந்துள்ளது. இதைத் தவிர்த்து பண பரிவர்தனை அனைத்தும் முழுமையாக முடங்கியுள்ளது. எனவே மக்கள் அவசர தேவைகளுக்காக ஒருசில ரூபா தாள்களையே பயன்படுத்துகிறார்கள். இதை தவிர்த்து ஏராளமான மக்கள் இணையதளம் மூலமாக பணப் பரிமாற்றங்களை செய்து வருகிறார்கள், இது கொரோனாவுக்கு எதிராக மிகப் பாதுகாப்பான ஒரு முறையாகும். ஏனென்றால் நாம் பயன்படுத்தக்கூடிய பணத்திலிருந்து கூட இந்த வைரஸ் தொற்று பரவலாம்.

பணப் பரிமாற்றம்

இப்போதும் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் செல்லதவர்களுக்கு ஊதிய தொகைகளை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி விடுகிறார்கள். இதன் மூலமாக அவர்கள் தேவைக்கேற்ப செலவுகளை தங்கள் டெபிட் கார்ட் மூலம் செலுத்துகிறார்கள். இல்லையெனில் பேடிஎம், போன்பே அல்லது கூகுள் பே போன்றவைகள் மூலமாக பணப் பரிமாற்றங்களை செய்து வருகிறார்கள். இதனால் ரூபாய் நோட்டுகள் தேவைகள் முழுமையாக குறைந்துள்ளது.

மேலும் படிக்க – சித்திரையின் முக்கியத்துவம் அறிவோம் வாங்க

இந்தியாவின் நிலை

இந்தியாவின் பொருளாதார நிலையில் நடுத்தரத்தில் உள்ளவர்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே ரூபாய் நோட்டுகளை அதிகமாக பயன்படுத்தி வந்தார்கள், ஆனால் இவர்களின் வருமானம் முழுமையாக முடங்கி உள்ளதால் பணம் சம்பாதிக்கும் சூழல் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இதன் மூலமாக இவர்கள் பணத்தைக்கொண்டு எந்த ஒரு பொருட்களும் வாங்க வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். அதேபோல் அரசாங்கம் கொடுக்கும் பொருட்களை வைத்து தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு வருகிறார்கள். நடுத்தர இருப்பவர்கள் இப்போது டிஜிட்டல் பண பரிமாற்றத்திற்கு மாறி உள்ளார்கள். எனவே இந்தியாவில் டிஜிட்டல் மூலமாக கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கு மேல் பணப்பரிமாற்றங்களை நிகழ்ந்தி வருகிறது. இதன் மூலமாக வர்த்தகமும் முடங்காமல் சமநிலையில் இருக்கிறது.

எதிர்காலம்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டங்களில் ஏராளமான மக்கள் இயந்திரம் மூலமாகவே பண பரிமாற்றங்களை செய்து வருகிறார்கள். இவர்கள் பணத்தை அச்சடிக்கும் செலவுகள் அனைத்தையும் குறைத்து, அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகிறார்கள். இதே நிலை இந்தியாவிலும் தொடர்ந்தால் நம்முடைய பண பரிமாற்றமும் அதிகரிக்கும் அதே போல் நம்முடைய பொருளாதாரமும் வளர்ச்சி அடையும். ஆசியாவில் இருக்கும் ஏராளமான நாடுகள் இந்த வழிகளை பின்தொடர தொடங்கி விட்டார்கள். கொரோனா வைரஸ் தாக்குதலினால் இந்த வழியை இப்போது நாம் கடைபிடித்து வரும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளேம், இதை பின்தொடர்ந்தால் எல்லோரும் இயந்திரத்தின் மூலமாக தங்கள் வர்த்தகத்தையும் மற்றும் பணம் பரிமாற்றத்தையும் செய்வார்கள்.

மேலும் படிக்க – லாக்டவுன் செலிபிரட்டிகள் அலப்பரைகள் பாருங்க!

ஆனால் எந்திரத்தின் மூலம் பணப் பரிமாற்றம் செய்வதன் மூலமாக ஒரு சில தீமைகளும் நமக்கு நிகழலாம். ஹேக்கர் என்று அழைக்கப்படும் கணினி மூலமாக பணத்தை திருடுபவர்கள் இன்னும் தங்களால் கண்டுபிடிக்க முடிந்த வழிகளில் பணத்தை திருடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இது வங்கிகளை பாதிக்குமே தவிர மக்களை பெரிதாக பாதிக்காது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன