காதலர் தினத்தை வேறு வழியில் கொண்டாடுவது எப்படி?

  • by
different ways to celebrate valentine's day

காதலர் தினத்தன்று எல்லாரும் பார்க்குகளுக்கும், ஓட்டல்களுக்கு மற்றும் கடற்கரைக்கும் மக்களுக்கும் அலை மோதுவார்கள். இதனால் உங்கள் காதலர் தினத்தை இனிமையாகவும், தனிமையாகவும் கொண்டாட முடியாமல் போகும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எனவே இது போன்ற சமயங்களில் உங்கள் காதலி மற்றும் காதலன் மனம் புண்படாமல் அவர்களுடன் மிக அழகான மற்றும் தனிமையான ஒரு காதலர் தினத்தை கொண்டாட வேண்டுமென்றால் நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

கூட்டங்களை தவிர்த்திடுங்கள்

காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக மற்றவர்களைப் போல் நாம் சிந்திக்காமல் புதுமையாக சிந்திக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் சிந்திக்கும் அதே இடத்தை எல்லோரும் சிந்திக்கும் வகையில் இருந்தால் அங்கே கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் உங்கள் காதலர் தினம் ஒரு நினைவு நாளாக இருக்காது. எனவே எப்போதும் புது வழியில் சிந்தித்து அதற்கேற்ப காதலர் தினத்தை கொண்டாடுங்கள். காதலர் தினம் என்பது ஒருவருக்கொருவர் எந்த அளவு புரிந்து கொண்டிருக்கிறார்கள், அதற்காக எந்த விதமான இன்ப அதிர்ச்சியை கொடுக்கிறார்களோ அதை பொறுத்துதான் உங்கள் காதலர் தினம் அமையும்.

மேலும் படிக்க – நான் அறிந்த உலகத்தின் உத்தம காதலன்!

ஒன்றாக சேர்ந்து சமையுங்கள்

காதலர் தினத்தன்று எங்கேயாவது வெளியே சென்று உணவருந்தலாம் என்று நீங்கள் சிந்தித்து இருப்பீர்கள். ஆனால் அங்கே சென்று உங்கள் உணவு உங்கள் மேஜைகளில் வருவதற்கு ஏராளமான நேரங்கள் எடுக்கும் இதனால் உங்கள் பசியே பறந்து போய்விடும். எனவே அதை தவிர்ப்பதற்கு உங்கள் துணையுடன் வீட்டிலேயே புதிய உணவுகளை சமைக்கலாம். இதற்க்கு திட்டமிட்டு, அதற்கேற்ப இருவரும் ஒன்றிணைந்து சமைத்து உண்ணுங்கள். இதனால் ஏற்படும் அனுபவங்கள் உங்கள் காதலர் தினத்தை பல வருடங்கள் நினைவில் வைத்துக்கொள்ளும்.

பழைய நினைவுகள் உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்

பொதுவாக எல்லோரும் பிறந்தது ஒரு இடமாகவும், வளர்ந்தது ஒரு இடமாகவும் இருக்கும். அதிலும் இதற்கிடையில் அவர்களின் சிறு வயதை கழித்த இடம் ஒன்று இருக்கும். எனவே அந்த இடம் எது என்று கண்டு பிடித்து உங்கள் காதலியை அல்லது காதலனை அழைத்து செல்லுங்கள். அவர்களின் பழைய நினைவுகள் அனைத்தும் கண்ணில் தோன்றி காதலாக மாறி உங்களை எந்நிலையிலும் கைவிடாமல் காதலிப்பார்கள்.

மேலும் படிக்க – அன்பின் அடுத்த பரிமாற்றம் அழகிய முத்தம்

பாடல் மற்றும் நடனம்

உங்கள் உள்ளுக்குள் இருக்கும் கூச்சங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு காதலர் தினத்தன்று உங்கள் காதலியுடன் மனம் திறந்து பேசுங்கள். அதை தவிர்த்து ஒருவரை ஒருவர் தங்களுக்கு பிடித்த பாடல்களை பாடுங்கள் அல்லது பாட்டுப் போட்டியில் ஏதாவதில் கலந்து கொள்ளுங்கள். காதல் பாடல்களின் மூலமாக உங்கள் உள்ளுக்குள் இருக்கும் வார்த்தைகளை மற்றும் எண்ணங்களை வெளியிடுங்கள். அதைத்தொடர்ந்து ஒருவருக்கொருவர் தங்களுக்கு பிடித்த நடனத்தை ஆடும் படி கேட்டுக் கொள்ளுங்கள். இதிலிருந்து உங்கள் இருவருக்குள் இருக்கும் கூச்சம் குறைந்து இருவரும் ஒன்று என்ற உணர்வு தோன்றும் இதை பொது இடங்களில் செய்வதன் மூலமாக உங்களை விட ஒரு சிறந்த காதலர்கள் யாராகவும் இருக்க முடியாது. மற்றவர்கள் தங்களை என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி சிந்திக்காமல் உங்கள் காதலன் மற்றும் காதலி என்ன நினைக்கிறார் என்பதற்காக உங்கள் வாழ்க்கையை வாழ்ந்தால் இறுதிவரை உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்கும்.

காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக ஏகப்பட்ட புதிய வழிகள் இருக்கின்றன. எனவே அதை அறிந்து அதற்கேற்ப உங்கள் காதலர் தினத்தை கொண்டாடுங்கள். உறவினர்களின் வீடு, நண்பர்களின் வீடு, மிகப்பெரிய உணவுகளை உண்ணாமல் சிறிய உணவுகள் உண்வது. சாக்லேட், ஐஸ்கிரீம் போன்ற பரிசுகளை கொடுப்பது. கடைசிவரை மறக்காமல் இருப்பதற்கான செயலை செய்வது போன்றவற்றின் மூலமாக உங்கள் காதலர் தினத்தை அழகாக்குங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன