இஞ்சியை இப்படியெல்லாம் கூட சாப்பிடலாமா???

  • by
இஞ்சி

கரோனா வைரஸ் பற்றிய அச்சம் இப்போது அதிகமாக இருக்கிறது. வைரஸ் பாதிப்பில் இருந்து நம்மை காத்துக் கொள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் உணவுகளையும் அதிகம் சேர்த்துக் கொண்டாலே போதும் எளிமையாக கரோனாவை வென்று விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மருந்தாக பயன்படக்கூடிய ஒரு மிகச்சிறந்த உணவுதான் இஞ்சி. இது வாந்தி, தலைச்சுற்றல் போன்றவற்றை சரி செய்வதுடன் செரிமானத்தையும் அதிகப்படுத்துகிறது. சளி, காய்ச்சல் இருமலுக்கு இந்த இஞ்சி சாறு சாலசிறந்தது.

இதை எவ்வாறெல்லாம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்??

இஞ்சி எலுமிச்சை ரசம் 

ரசம் என்றாலே தக்காளி புளியில்தான் நினைவில் வரும்.ஆனால், இப்போது இந்த எலுமிச்சை பழத்தில் வைக்கும் ரசத்தில் வைட்டமின் சி சத்து கொஞ்சம் தூக்கலாக தான் இருக்கும். இதை எவ்வாறு செய்வது வாணலியில் சிறிதளவு நெய் விட்டு அதில் கடுகு, சீரகம், பொடித்த மிளகு வெங்காயம் ஆகியவற்றை தாளித்து கொள்ள வேண்டும். அதனுடன் தக்காளி, இஞ்சி துருவல் உப்பு ,மஞ்சள் பொடி, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து பருப்பு தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவேண்டும். பின்பு இந்த கலவையை மல்லித்தழை கறிவேப்பிலை எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து இறக்க வேண்டும். இதை கொதிக்க விடக்கூடாது. நுரை கட்டி வரும்போது அடுப்பை அணைத்து விட வேண்டும்.

மேலும் படிக்க – பப்பாளி மற்றும் கருஞ்சீரகம் நம் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள்..!

இஞ்சி தயிர் பச்சடி 

கோடை காலத்தில் உடலை குளிர்ச்சி படுத்த நாம் தினசரி உணவில் இதை சேர்த்துக் கொள்ளலாம். தோல் நீக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் ,தேங்காய் துருவல் இவை மூன்றையும் மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும். இதனுடன் தயிர், உப்பு, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.

தாளிக்கும் கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொட்டுங்கள். தேவைப்படுபவர்கள் சிறிது மிளகாய் தூள் மேலாக தூவிக் கொள்ளலாம்.

இஞ்சியில் இனிப்பு ஊறுகாய்

குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்க வேண்டிய இஞ்சியை இவ்வாறு கொடுக்கலாம். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும். துருவிய இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கி, புளி விழுது வெல்லம் ,உப்பு ,மஞ்சள் தூள், பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளற வேண்டும். இது குழந்தைகளுக்கு சத்தான சிற்றுண்டி ஆக இருக்கும். இனிப்பாக இருப்பதால் வீணாக்காமல் குழந்தைகள் இதை சாப்பிடுவார்கள்.

இஞ்சிப் புளி தொக்கு

தக்காளி சாதம் ,லெமன் சாதம் போன்றவற்றிற்கு நாம் ஊறுகாய்க்கு பதிலாக இந்த இஞ்சி புளி தொகை பயன்படுத்தினால் சுவையாகவும் சத்தாகவும் இருக்கும். வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு அதனுள் நறுக்கிய இஞ்சி பச்சைமிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்க வேண்டும். உப்பு மஞ்சள்தூள் பெருங்காயம் புளி விழுது ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.

இஞ்சி தேநீர் 

மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு இந்த தேநீர் கொடுப்பதால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சிறிதளவு நீருடன் இரண்டு துண்டு இஞ்சி சிறிதளவு சீரகம் ,மிளகு, மல்லி இவற்றை ஒன்றிரண்டாக உடைத்து நீரினுள் போட்டு நன்கு கொதிக்க வைக்கவேண்டும். அதனுள் இனிப்பு சுவைக்காக வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். பின்பு வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

மேலும் படிக்க – வெந்தயத்தால் செய்யப்படும் ஷாம்பூ, அதன் பலன்கள்..!

இஞ்சி காய்கறி ஊறுகாய் 

நாம்  செய்யும் காய்கறி பொரியல்கள்  அனைத்தையுமே இஞ்சியை கட்டாயமாக சேர்த்துக்கொள்ளவேண்டும்.  தோல் நீக்கிய இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன் கேரட், பச்சை மிளகாய் உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து விட்டு அதில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை சேர்த்து வைக்க வேண்டும். ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி கடுகு பெருங்காயம் இரண்டையும் போட்டு தாளித்து  அந்த இஞ்சி கலவையில் கொட்டிவிட வேண்டும். இந்த ஊறுகாயை தயிர் சாதத்திற்கு சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம்.

மேலே கூறியுள்ள உணவுகளில்  அதிகமாக மிளகு சீரகம் இஞ்சி மஞ்சள் போன்ற நோய் எதிர்ப்பாற்றல் உணவுப் பொருட்களும் கிருமிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது இவை அனைத்தையும் நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் நிச்சயமாக நோய்த்தொற்று இல்லாமல் வாழ முடியும் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன