பெண்கள் அணியும் பலாசோவில் இருக்கும் வகைகள்..!

  • by
different types of palazzo that women wear

சமீபத்தில் பெண்கள் அதிகமாக விரும்பி அணியும் ஆடைகளில் பலாசோ முதலிடத்தில் உள்ளது. இது மிகவும் சவுகரியமாக இருப்பதினாலும் மற்றும் அற்புதமான விதங்களில் கிடைப்பதனால் பெண்கள் இதை அதிகளவில் விரும்புகிறார்கள். கிட்டத்தட்ட பலாசோவில்  26 வகைகள் இருக்கின்றன. அதில் சிறந்த பலாசோகளை இங்கே காணலாம்.

லேயர் பலாசோ

லேயர் பலாசோ என்பது பெயருக்கு ஏற்றார் போல் பலவிதமான லேயர்களை கொண்டது தான் இந்த பலாசோ. இது ஒன்றுக்கும் மேற்பட்ட நிறங்களிலும் அல்லது ஒரே நேரத்தில் இரண்டு விதமான லேயர்களையும் கொண்டுள்ளது. இதை கோடைகாலங்களில் அதிகமாக பயன்படுத்துவார்கள்.

மேலும் படிக்க – சூரிய ஒளியால் ஏற்படும் கருமையை போக்கும் வழிகள்..!

பாக்கெட் பலாசோ

பாக்கெட் பலாசோ கல்லூரி பெண்கள் அதிகமாக பயன்படுத்த கூடிய ஒன்று. இது அழகாகவும், விதவிதமான வகைகளைக் கொண்ட பலாசோ. எனவே இதை கல்லூரி அல்லது வெளியே செல்வதற்கு பயன்படுத்தலாம்.

டெனிம் பலாசோ

இதுபோன்ற டெனிம் பலாசோ வெள்ளை நிற சட்டைகளை பயன்படுத்தி அணிந்தால் பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாகவும் மற்றும் உங்களின் தரத்தை உயர்த்தும் வகையில் இருக்கும். டெனிமின் அடர்த்தி அதிகமாக இருப்பதினால் குளிர் காலங்களில் இதை பயன்படுத்தலாம்.

ஸ்கர்ட் பலாசோ

ஸ்கர்ட் பலாசோ என்பது வேறொன்றுமில்லை, பெண்கள் அணியும் பலாசோ, பாவாடை வடிவில் இருக்கும். அவர்கள் நடக்கும் போது தான் அது பலாசோவாக தெரியும். அதுவரைக்கும் அவர்கள் சாதாரண பாவாடைகளை அணிந்து இருப்பதை போல் தோன்றும். இந்த ஆடையை நாம் எல்லா விதமான கொண்டாட்டங்களுக்கும் பயன்படுத்தலாம். இதுபோன்ற பாவாடையை காலின் கீழ் விதவிதமான அலங்காரங்களையும் செய்கிறார்கள்.

டயர்டு பலாசோ

இந்த பலாசோ இடையிடையே அழகான எம்பிராய்டரி கொண்டதாக இருக்கும். அதைத் தவிர்த்து இதன் கீழ் பகுதியில் பாவாடைகளை அலங்கரிப்பது போல் சில பூக்களை கொண்டு அலங்கரிப்பார்கள். இந்த பலாசோவிற்க்கு இணையாக கூர்தாகளை அணிந்தால் சிறப்பாக இருக்கும்.

மேலும் படிக்க – கூந்தலுக்கு கண்டிஷனராக பயன்படும் மருதாணி..!

பார்மல் பலாசோ

பார்மல் பலாசோ வேலைக்குப் போகிறவர்கள் அதிகமாக பயன்படுத்தும் பலாசோவாகும். இதை காலையில் 9 லிருந்து மாலை 6 மணி வரை தொடர்ந்து வேலை செய்பவர்கள் தங்கள் சௌகரியத்திற்காக இது போன்ற பலாசோவை பயன்படுத்துவார்கள். இதற்கு இணையாக நீங்கள் எந்த ஆடைகளை வேண்டுமானாலும் அணியலாம்.

ஸலய்டு பலாசோ

பார்ட்டிகளுக்கு விரும்பி அணியப்படும் பலாசோவாகும். இது ஒருவகையான கவர்ச்சியான தோற்றத்தை உங்களுக்கு அளிக்கும். எனவே நண்பர்களுடன் வெளியே செல்வதற்கு, பார்ட்டி போன்ற இடங்களுக்கு இது போன்ற பலாசோகளை அணியலாம்.

ஸ்ட்ரைடன் பலாசோ

இது சாதாரண பலாசோவாக இருந்தாலும் இதன் உயரம் சற்று குறைவாக இருக்கும். எனவே இதை வீட்டிலும் அணியலாம், வெளியே செல்வதாற்க்கும் பயன்படுத்தலாம். எனவே பதின் பருவப் பெண்கள் அதிகமாக விரும்பி அணியும் பலாசோ இது.

மேலும் படிக்க – பிராமண பெண்களின் அழகு ரகசியம்!

தோத்தி பலாசோ

நாம் கட்டப்படும் வேட்டியை போன்றது இந்த பலாசோ. இது பார்ப்பதற்கு வேட்டியை போலவே இருக்கும் அல்லது தமிழகத்தில் பயன்படுத்தப்படும் லுங்கியை போல் இருக்கும். இதை நாம் கட்டும் வடிவிலும் கிடைக்கின்றன, உங்கள் இடுப்பு அளவிற்கு ஏற்றார்போல் இதை பயன்படுத்தலாம்.

இதைத் தவிர்த்து இன்னும் ஏராளமான பல பலாசோகள் இருக்கிறது, அதை அனைத்தையும் வாங்கி முயற்சி செய்து உங்களுக்கு பிடித்தது எது என்று தேர்ந்தெடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன