காலனிகளின் அற்புத வகைகள்..!

  • by
different types of footwear models

காலணிகள் என்பது நமது பாதங்கள் மற்றும் கால்களை பாதுகாப்பதற்காக நாம் பயன்படுத்தி வந்தோம். ஆனால் இப்போது காலணிகள் நாம் உடுத்தும் ஆடைகளுக்கு ஏற்றார் போல் நமது தோற்றத்தை அழகாக மாற்ற உதவுவதற்காக அணிகிறோம். காலணிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் ஏற்றால் போல் ஏராளமான வகைகள் இருக்கின்றன. அதில் சிறந்த காலணிகளை இங்கே காணலாம்.

ஆண்கள் காலணி

ஆண்கள் பொதுவாக 3 வகையான காலணிகளை அணிகிறார்கள் ஒன்று அலுவலகத்திற்கு செல்லும் வகை, இரண்டாவது வெளியே செல்லும் பொழுது ஜீன்ஸ் மற்றும் பேண்டுகளை அணிந்து செல்லும்போது, மூன்றாவது பாதி கால்சட்டை அல்லது பீச், பார்க்கு மற்றும் பார்ட்டிகளுக்கு அணிந்து செல்வது.

மேலும் படிக்க – பண்டைய கால மனிதர்கள் வழுக்கைகளை அகற்றும் விசித்திர வழிகள்.!

பெண்கள் காலணிகள்

பெண்கள் காணொளிகளில் சூஸ்  மற்றும் ஸ்லிப்பர் என இரண்டு வகைகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த இரண்டு வகைகளில் ஏராளமான காலணிகள் இருக்கின்றன. அவர்களுக்கு எத்தனை விதமான ஆடைகளை உருவாக்குகிறார்களே அத்தனை விதமான காலணிகளும் அதனுடன் சேர்த்து உருவாக்குகிறார்கள்.

குரோக்ஸ் காலணிகள்

இது பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்களின் வீட்டில் அல்லது வீட்டில் அருகே செல்லும் பொழுது இந்த வகை காலணிகளை அதிகமாக பயன்படுத்துவார்கள். இது அணிவதற்கு இதமாகவும், மிக மென்மையாகவும், இடை குறைவாகவும் இருக்கும்.

வலெண்டினோ காலணிகள்

புதிய வகை காலணிகள் அனைத்தும் கிடைக்கக்கூடிய முதல் இடம் இதுதான். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் பிடித்தமான காலணிகள் இங்கே அதிகமாக இருக்கிறது. உண்மையான தோள்களில் மூலமாக செய்யப்பட்ட இந்த காலணிகள் பல வண்ணங்கள் மற்றும் பல்வேறு விதமான தோற்றங்களில் கிடைக்கின்றன. பார்த்தவுடன் மனதை கொள்ளை கொள்ளும் அளவிற்கு இந்த காலணிகள் இருக்கும். இதில் மேல் இருக்கும் வேலைப்பாடுகள் அனைத்தும் உங்களை கவர்ந்துவிடும்.

இன்சி5 காலணிகள்

இணையதளத்தில் அதிகமாக விற்பனையாகும் இந்தியா காலனி நிறுவனம்தான் இந்த “இன்சி5”. இந்த காலனி நிறுவனம் முழுக்க முழுக்க பெண்களுக்கான காலணிகளை தயாரிக்கிறார்கள். எனவே அவர்கள் உடுத்தும் ஒவ்வொரு ஆடைகளுக்கு ஏற்றார்போல் காலணிகள் இங்கே கிடைக்கிறது. எனவே இந்த காலணிகளில் இணைய வியாபாரம் செய்யும் பக்கங்கள் மூலமாக வாங்கலாம்.

மேலும் படிக்க – முகப்பருக்களை வருமுன் தடுப்பது எப்படி?

கேட்வாக் காலணிகள்

காலணிகள் என்றால் அது தோல்களால் மற்றும் பல வேலைப்பாடுகளின் மூலமாக செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் “கேட்வாக்கில்” விற்கப்படும் காலணிகள் சற்று மாறுபட்டவை. இந்த காலனிகளில் மேலே பூக்கள் மற்றும் விதவிதமான பொருட்களின் மூலமாக உருவாக்கியிருப்பார்கள். எனவே நிச்சயம் உங்களை பார்பவர்கள் தங்களை அறியாமல் உங்கள் கால்களையும் பார்ப்பார்கள். அத்தகைய ஈர்க்கும் தன்மை கொண்ட காலணிகளை “கேட்வாக்” கடைகளில் வாங்கலாம்.

மோச்சு காலணிகள்

இந்தியா மற்றும் உலகம் முழுக்க பிரபலமாக இருக்கும் காலணி நிறுவனங்களில் முக்கியமான நிறுவனம்தான் இந்த “மோச்சு” காலணிகள். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட காலணி வகைகள் மற்றும் ஏராளமான கிளைகள் உள்ளது. எனவே உங்களுக்கு பிடித்த காலணிகளை உடனே  தேர்ந்தெடுக்கும் வகையில் இங்கே கிடைக்கும் அனைத்து காலணிகளும் இருக்கின்றன. பெண்களுக்கான காலணிகள் வாங்க மிகச் சிறந்த இடம் இந்த மோச்சு.

லிபர்டி காலணிகள்

காலணிகளை விற்பதில் இந்தியாவில் முதலிடத்தில் இருப்பவர்கள் இந்த லிபர்டி காலணிகள். பெண்களுக்கான காலணிகளை விற்பதன் மூலமாக ஒவ்வொரு வருடமும் இவர்களின் வருமானம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கு ஏற்றார்போல் இங்கு விற்கப்படும். திருமண கொண்டாட்டங்கள், பாரம்பரிய காலணிகள், கற்கள் மற்றும் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட காலணிகள் என எல்லாமே கிடைக்கின்றன. எனவும் உங்கள் காலழகு தனியாக தெரிய வேண்டுமென்றால் இந்த காலணியை பயன்படுத்துங்கள்.

இதைத் தவிர்த்து ஏராளமான காலணிகள் மற்றும் வகைகள் இருக்கின்றன எனவே உங்கள் உடை மற்றும் தோற்றத்திற்கு ஏற்றார் போல் உங்கள் காலணிகளைக் தேர்ந்தெடுத்து உங்கள் அழகை அதிகப்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன