காதணிகளில் இருக்கும் வகைகள்..!

  • by
different types of ear rings for girls

பிறந்த குழந்தையாக இருக்கட்டும், வலர்ந்து மூதாட்டியாக இருக்கட்டும், எல்லா பெண்களும், எல்லா வயதினரும் விரும்பி அணிவது அவர்களின் காதணிகள். இதன் மூலமாக பெண்கள் அழகு அதிகரித்து அவர்களின் தோற்றத்தில் ஒரு ஈர்ப்பை தருகிறது. இப்படி இவர்கள் அழகை அதிகரிக்கும் காதணிகளில் இருக்கும் வகைகளை காணலாம்.

வைர காதணிகள்

ஒரே ஒரு கல் பதித்த காதணிகள் பெண்கள் அதிகமாக விரும்புவார்கள். ஏனென்றால் அவர்கள் போடப்படும் எந்த ஒரு ஆடையாக இருந்தாலும் இந்தக் காதணிகள் அந்த ஆடைக்கு ஏற்றார்போல்  பொருந்தி விடும். எனவே எப்போதும் தங்கள் காதணிகளை அணிந்திருப்பதை பெண்கள் அதிகமாக விரும்புகிறார்கள்.

மேலும் படிக்க – பெண்கள் அணியும் பலாசோவில் இருக்கும் வகைகள்..!

தொங்கும் கம்மல்

கல் பதித்த காதணிகளுக்கு அடுத்தபடியாக இருப்பது தொங்கும் கம்மல். இதை பெண்கள் பயன்படுத்துவதற்கு மிக முக்கியமான காரணம் அதை திருமணங்கள், நிச்சயதார்த்தம் மற்றும் சுபகாரியங்களுக்கு அதிகமாக அணிந்து செல்வது தான். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தான் அவர்களின் சொந்தம், பந்தம் அதிக அளவில் வருவார்கள். அவர்கள் முன்னிலையில் தங்களின் தோற்றத்தை அழகாக காண்பிக்க உதவுவது இது போன்ற காதணிகள்.

எத்னிக் காதணிகள்

இது போன்ற காரணிகள் சிறிதளவு உலோகங்கள் மற்றும் நெகிழிகளை ஒன்றாக கலந்து வெவ்வேறு விதமான தோற்றத்தில் உருவாக்குவார்கள். இதில் கலைநயம் அதிகமாக இருந்தாலும் அது அனைத்தும் இயந்திரத்தின் மூலமாக செய்யப்படுவது. இருந்தாலும் இது பல விதமான வகைகளில் கிடைப்பதினால் இதை பெண்கள் அதிகமாக விரும்பி பயன்படுத்துகிறார்கள்.

உலோக காதணிகள்

உலோகங்களால் செய்யப்படும் கம்மல்களை பெண்கள் விரும்பி பயன்படுத்துவதற்கான காரணம் அது நீண்ட நாட்கள் பயனைத் தரும். அதைத் தவிர்த்து மற்ற உலகங்களில் ஒப்பிடுகையில் இது மிக எளிதில் உடையாமல் உங்கள் கம்பல் சேகரிப்பை அதிகரிக்க உதவும்.

மேலும் படிக்க – ஆண்களுக்கான எளிமையான தோற்றம் எல்லோரையும் கவரலாம்..!

தங்க காதணி

எல்லோரும் விரும்புவது தங்க காதணிகள். இதில் வெவ்வேறு விதமான வகைகள் இருப்பதினால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அணிகிறார்கள். கல் பதித்த காதணிகள், தொங்கும் காதணிகள், காதை ஒட்டி அணியப்படும் காதணிகள் மற்றும் மேல் காதணிகள் போன்ற அனைத்தும் தங்கத்தால் செய்து எல்லோரையும் கவரும் வகையில் விற்கிறார்கள்.

பெண்கள் அழகுக்காக பயன்படுத்தப்படும் காதணிகள் அவர்களின் அழகை தவிர்த்து அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. எனவே இது போன்று பல வகைகளில் கிடைக்கும் காதணிகளை அணிந்து உங்கள் வாழ்க்கையை அழகாக்குகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன