பருப்புகளும் அதன் தேவைகளும்..!

  • by
different types of dal and their health benefits

கொரோனா வைரஸ்  பாதிப்பினால் நாடு முழுவதும் லாக்டவுனில் இருக்கிறது. அது நிறைவு பெற்ற பிறகு ஒரு சில நாட்கள் இடைவெளிக்குப் பின் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படலாம் என ஏராளமானோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஒருவேளை இந்த லாக்டவுன் நீடித்தால் நீங்கள் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஆரோக்கியமான மற்றும் பல நாட்கள் கெடாமல் நீடித்து இருக்கும் பருப்புகளை வாங்கி வைப்பதே சிறந்தது. நம் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பருப்பிலும் ஒவ்வொரு விதமான மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது. இதன் மூலம் உங்கள் உடலுக்குத் தேவையான ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்துகள் அனைத்தும் கிடைக்கும்.

பைத்தம் பருப்பு

பயத்தம்பருப்பை நாம் கிச்சடி மற்றும் உப்புமா என ஏராளமான உணவுகளுக்கு பயன்படுத்தி வருகிறோம். இதில் மிகக் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால் உங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும். இதைத் தவிர்த்து உடலுக்கு தேவையான உடனடி ஆற்றலும் பயித்தம் பருப்பு நமக்கு அளிக்கிறது.

மேலும் படிக்க – கோடி மக்களை ஒளியால் ஒன்றினைத்த மோடி வாக்கு

உளுத்தம் பருப்பு

தமிழர்கள் தங்கள் உடலை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வைப்பதற்காக அதிகளவில் எடுத்துக் கொள்ளும் பருப்புதான் உளுத்தம் பருப்பு. நாம் அதிகாலையில் சாப்பிடும் இட்லி, தோசை மற்றும் படை போன்ற வகைகளில் உளுத்தம் பருப்பின் பங்கு அதிகமாக இருக்கும். இதில் வைட்டமின்-பி, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவைகள் உங்கள் இருதயத்தை பாதுகாக்கிறது. இதை தவிர்த்து உணவுகள் எளிதில் செரிமானம் செய்யவும், உங்கள் எலும்புகள் மற்றும் நரம்பு மண்டலத்தை உறுதியாக வைக்கவும் உளுத்தம்பருப்பு தேவைப்படுகிறது.

துவரம் பருப்பு

உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் அளிக்கக் கூடியதுதான் துவரம் பருப்பு. இதில் இருக்கும் பைபர் உங்கள் உடலில் எந்த ஒரு கொழுப்பும் சேராமல் பார்த்துக் கொள்கிறது. வாயுத்தொல்லை, வயிற்று வலி மற்றும் இருமல் போன்ற அனைத்து பிரச்சனையையும் தீர்க்கும் சக்தி துவரம் பருப்புக்கு உண்டு.

கடலைப்பருப்பு

கடலைப்பருப்பில் ஃபோலிக் ஆசிட், மெக்னீசியம், மங்கனீசு, இரும்பு சத்து மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் இருக்கிறது. இது மற்ற பருப்பை விட 2 மடங்கு புரோட்டின் அதிகமாக உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலமாக இருதய ஆரோக்கியமடைந்து மற்றும் நீரிழிவு நோய் போன்ற பிரச்சினை அனைத்தும் தீரும்.

மேலும் படிக்க – வாழைபழம் ஆரோக்கியத்துக்கு அவசியம்

சுண்டல் மற்றும் கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையில் ஃபோலிக் ஆசிட், மங்கினினிசு, இரும்புச்சத்து, காப்பர் போன்றவைகள் ஏராளமாக இருக்கிறது. இதை வெறுமனே வேகவைத்து சிறிது கடுகு போட்டு தாளித்து சாப்பிட்டால் உங்களுக்கு தேவையான அனைத்து ஆற்றலும் மற்றும் காலை பொழுதில் ஆரோக்கியமாக கிடைக்கும் சிற்றுண்டியாகவும் இது இருக்கிறது. சுண்டலில் இருக்கும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், புரோட்டின், இரும்பு சத்து மற்றும் ஏராளமான வைட்டமின்கள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்கிறது.

நம் உணவுகளில் மசூர் பருப்பையும் அதிகமாக பயன்படுத்துகிறோம், ஆனால் இதில் ஒரு சில பக்க விளைவுகள் இருப்பதினால் ஒரு சில மாநிலங்களில் இதை முழுமையாக தவிர்த்து வருகிறது. எனவே இதுபோன்ற சூழலில் உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இது போன்ற அத்தியாவசியப் பருப்புகளை வாங்கி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன