இந்திய பெண்கள் அணியும் வளையல்களில் இருக்கும் வகைகள்.!

  • by
different types of bangles that indian women wear

உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் அதிக அளவிலான வளையல்கள் உற்பத்தி செய்கிறார்கள். அதை தவிர்த்து இந்திய பெண்கள் தான் அதிகமாக வளையல்களை அணிகிறார்கள். எந்த ஒரு கொண்டாட்டமாக இருந்தாலும் அந்த கொண்டாட்டத்திற்கு செல்வதற்காக பெண்கள் வித விதமான வளையல்களை வாங்குகிறார்கள். அதைத் தவிர தங்களுக்கு ஏற்றாற்போல் சிறந்த வளையல்களை தேர்ந்தெடுத்து அணிந்து செல்கிறார்கள். இதுபோல் அணியும் பெண்களுக்காகவே பலவகையான வளையல்களை தயார் செய்கிறார்கள். அதில் என்ன வகைகள் இருக்கிறது என்பதை காணலாம்.

உலோக வளையல்கள்

வட இந்தியப் பெண்கள் அதிகமாக விரும்பி அணிவது இந்த உலோக வளையல்கள் தான். இது எளிதில் உடையாமல், என்றும் பாதுகாப்பாக இருப்பதனாலேயே பெண்கள் இந்த வகையான வளையல்களை அதிகமாக விரும்புகிறார்கள்.

கண்ணாடி வளையல்கள்

வளையல்கள் என்றாலே அது கண்ணாடி வளையல்கள் தான். பொதுவாக பெண்கள் வளையல் அணிவதற்கான காரணம் அதிலிருந்து எழும் ஓசைகள் தான். இது உங்களுக்குள் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க உதவும், எதிர்மறை சக்திகளை அழிக்கும். இந்த கண்ணாடியின் ஓசை கொண்ட வளையல்களை எல்லா வீட்டு பெண்களும் அக்காலம் முதல் இக்காலம் வரை அணிந்து வருகிறார்கள்.

மேலும் படிக்க – வீட்டிலேயே மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர் செய்வது எப்படி?

நெகிழியால் செய்யப்பட்ட வளையல்கள்

பிளாஸ்டிக் வளையல்கள் சமீபத்தில் அதிகமாக விற்பனையாகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் இதில் ஏராளமான வண்ணங்கள் மற்றும் அழகுகளை கொண்டுள்ளது. இதைத் தவிர்த்து இது பெரிய வகைகளில் கிடைப்பதனால் பெண்கள் எல்லா விதமான ஆடைகளுக்கும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

உடையாத வளையல்கள்

விலை கொடுத்து வாங்கும் ஒரு சில வளையல்கள் நம் கைகளில் அணியும் போது உடைந்து விடுகிறது. இதனால் பெண்கள் கவலைக்கு உள்ளாகிறார்கள். எனவே இதுபோன்ற பெண்களுக்காகவே உடையாத, வளைந்து கொடுக்கும் வளையல்களை விற்கிறார்கள். இதை எப்படி அணிந்தாலும் அது உடையாது. ஆனால் இதை பெரியவர்கள் விட சிறுவர்களை அதிகமாக விரும்பி அணிகிறார்கள்.

பண்டிகைகளின் வளையல்கள்

ஒவ்வொரு பண்டிகைக்கும்  ஏற்றாற்போல் வளையல்கள் மாறுபடுகிறது. வளைகாப்பு, சீமந்தம் போன்ற பண்டிகைகளில் பெண்கள் கண்ணாடி வளையல்களை அதிகமாக அணிகிறார்கள். அதுவே திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி வளையல்கள், இல்லை என்றால் உலோக வளையல்களை அணிகிறார்கள். அதுவே சாதாரணமாக எங்கேயாவது வெளியே செல்லும் பொழுது பிளாஸ்டிக் அல்லது வண்ணங்கள் தீட்டப்பட்ட வளையங்களை அணிகிறார்கள்.

மேலும் படிக்க – பன்னீர் ரோஜாவை கொண்டு அழகு செய்வோம்!

வேலைப்பாடுகள் கொண்ட வளையல்கள்

தென் மாநிலத்தில் கண்ணாடி வளையல்களை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அதுவே வட மாநிலத்தில் இருப்பவர்கள் வளையல்கள் மேல் ஏகப்பட்ட வேலைப்பாடுகளை செய்து அதை உலகெங்கும் விற்பனைக்கு அனுப்புகிறார்கள். இத்தகைய வலைகளில் கற்கள், முத்துகள் போன்ற விலை உயர்ந்த பொருட்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள். இது போன்றவைகள் நாம் ஒரு சில இடங்களுக்கு மட்டுமே அணிந்து செல்ல முடியும்.

இன்னும் ஏராளமான வகையான வளையல்கள் இருக்கின்றன, அதை அனைத்தையும் வாங்கி அணிவது என்பது இயலாத காரியம். வளையல்கள் மேல் ஆர்வம் உள்ள பெண்கள் இதுபோன்ற வளையல்களை சேகரித்து வருகிறார்கள். ஒரு சில கலாச்சார மாற்றத்தினால் வளையல்கள் குறைந்து கொண்டே வருகிறது. இதை மீண்டும் பழைய நிலைக்கு மாற்றுவதற்கு இன்னும் பலவிதமான வளையல்கள் சந்தைகளுக்கு வரவேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன