ஆண்கள் பயன்படுத்தும் சட்டைகளின் வகைகள்..!

  • by
different kinds of shirt variety for men

ஆண்களுக்கான ஆடை வகைகள் ஒருசிலவற்றே இருக்கின்றன, அதிலும் பெரும்பாலான ஆண்கள் சட்டைகளை அணிகிறார்கள். அப்படிப்பட்ட சட்டைகளில் என்னென்ன வகைகள் இருக்கின்றன அதன் சிறப்புகள் என்ன என்பதை இப்பதிவில் காணலாம்.

ஆக்ஸ்போர்ட் பட்டன் ஷர்ட்

1896 ஆம் வருடம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஷர்ட் அதிக அடர்த்தியைக் கொண்டது. இன்றுவரை இந்த ஷாட்டை பலரும் அலுவலகம் மற்றும் பண்டிகைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். இது பார்ப்பதற்கு அழகாகவும் உங்கள் கழுத்தில் உள்ள காலருக்கு அடியில் பட்டன் அமைப்பை கொண்ட முதல் ஷர்ட் இதுதான்.

மேலும் படிக்க – பிராமண பெண்களின் அழகு ரகசியம்!

ட்ரஸ் ஷர்ட்

இந்தவகை ஆடைக்கு ஆண்கள் கோட் சூட் அணியும் போது உள்ளே அணிவார்கள். இதன் கழுத்துப் பகுதி சிறியதாக இருக்கும் அதை தவிர்த்து இதில் டை மற்றும் பவ் பயன்படுத்தி தங்கள் ஆடையின் அழகை மேலும் அழகூட்டுவார்கள். மிகப்பெரிய விருந்துகளில் மட்டும் இதுபோன்ற ஆடையை அதிகளவில் பயன்படுத்துவார்கள்.

கீவ்பன் காலர் ஷர்ட்

தொண்ணூறுகளில் மிகப் பிரபலமாக இருந்ததது இந்த வகையான கீவ்பன் ஷர்ட். இதை இன்றும் பல நகரங்களில் அணிகிறார்கள். இதன் காலர்பகுதி மிக நீளமாக இருக்கும். இதனால் இதை இக்காலத்தில் அணிபவர்கள் அந்த காலத்து ஆட்களை போல் தெரிவார்கள். இதை தாய்லாந்த் ஹாவாய் போன்ற கடலோரத்தில் வாழ்பவர்கள் அதிகமாக அணிவார்கள்.

ஓவர் சர்ட்

ஒரு ஆடைக்கு மேல் அணியப்படும் ஆடைதான் ஒவர் சர்ட் என்பார்கள். இந்த சர்ட்களை அதிகளவில் வட இந்தியர்கள் பயன்படுத்துவார்கள். உள்ளேயே டி-சர்ட் அணிந்து மேலே இதுபோன்ற ஓவர் சர்ட்களை அணிவார்கள்.

மேலும் படிக்க – டெட் செல்களை நீக்கி சருமம் அழகுப் பெற இதுபோதும்

பிளானில் சர்ட்

இது எல்லோருக்கும் தெரிந்த சட்டைதான். நாம் பயன்படுத்தும் கட்டம் போட்ட சட்டை தான் பிளானில் சர்ட் என்பார்கள். இதில் பல வண்ணங்கள் இருக்கும் இதை எல்லோரும் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதை சாதரனமாகவும் போடலாம் இல்லையெனில் ஓவர் சட்டையாகவும் போடலாம்.

அலுவலக சட்டை

அலுவலக சட்டை பெரும்பாலும் வெண்மை நிறத்தில் காணப்படும். இது மெலிதான நூல்களைக் கொண்டு செய்யப்படுவதால் எப்போதும் வெண்மையாகவும், மெளிதாகவும் மிக விரைவில் சுருக்கங்கள் விழாதபடி இருக்கும். எனவே இதை அலுவலகத்திற்கு அதிகளவில் பயன்படுத்துவார்கள்.

அரைக்கை சட்டை

அரைக்கை சட்டையை இப்போது அணிந்தாலும் நாம் 90களில் வாழ்பவரை போல் உணர்வோம். அத்தகைய பழமை வாய்ந்த சட்டைகள் தான் அரைக்கை சட்டை. இன்றளவும் அதிகளவிலான இளைஞர்கள் இதுபோன்ற சட்டைகளை அணிகிறார்கள். இதனால் தங்கள் உடல் அமைப்பு அழகாக தெரியும்.

மேலும் படிக்க – சரும பொலிவிற்கு இதனை செய்யுங்கள்

டெனிம் சர்ட்

ஆண்கள் சமீபத்தில் அதிக அளவில் விரும்பி அணியக்கூடிய சட்டை தான் இது. இதுபோன்ற சட்டைகளை குளிர் காலத்தில் பல பேர் விரும்பி அணிகிறார்கள். உடல் வெப்பமாக உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த சட்டை நீல நிறத்தில் அதிகமாக விற்பனையாகிறது.

எனவே இதுபோன்ற பல விதமான சட்டையில் ஆண்களுக்காக இருக்கிறது. அவர்கள் தாங்கள் செல்லும் இடத்திற்கு ஏற்றார்போல் அணிந்து செல்கிறார்கள். எனவே உங்களுக்குப் பிடித்தமான சட்டை எதுவென்று தேர்ந்தெடுத்து அதை அணிந்து மற்றவர்களை கவரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன