வைட்டமின் மற்றும் புரோட்டின்களில் இருக்கும் வித்தியாசம்..!

  • by
differences between proteins and vitamins

நாம் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு ஆரோக்கியமான உணவுகளில் நிச்சயம் வைட்டமின் மற்றும் புரோட்டீன் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கும். ஒரு சிலர் வைட்டமின் மற்றும் புரோட்டின் இரண்டுமே ஒரே விதமான செயல்பாட்டைதான் செய்கிறது என்கிறார்கள் ஆனால் உண்மையில் வைட்டமின் மற்றும் புரோட்டின் வெவ்வேறு தன்மைகளையும் கொண்டுள்ளது. வைட்டமின் நம் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை சீராக்க உதவுகிறது ஆனால் புரோட்டின் என்பது நம் உடலில் உள்ள செல்கள் மற்றும் தசைகளை வலுவாக்க உதவும்.

வைட்டமின்கள்

வைட்டமின் என்பது ஒரு நுண்ணூட்டச் சத்துக்களாகும் இது நாம் எடுத்து கொள்ளும் உணவுகளின் மூலமாக 13 வகைகளில் நமக்கு கிடைக்கிறது. நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் கிடைக்கும் வைட்டமின்கள் இரண்டு வகையாக நம் உடலுக்குள் அளிகப்படுகிறது, ஒன்று நீர் மூலமாக மற்றொன்றுக்கு கொழுப்பு மூலமாகவும். இது இரண்டு வகையும் நமக்கு வலிமையை அளித்து உடலில் ஏற்படும் பிரச்சினைகளையும் தடுக்கிறது.

மேலும் படிக்க – முன்னோர்களின் வழியில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம்..!

புரோட்டின்

புரோட்டின் என்பது ஒரு மேக்ரோ ஊட்டச்சத்து, இது நம் உடலை உருவாக்கும் செயல்களை வளர்க்கப் பயன்படுகிறது. இதைத்தவிர்த்து செல்கள் மற்றும் தசைகளின் வளர்ச்சியை சீராகக்கி நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது. குழந்தைகளுக்கு புரோட்டின் கிடைத்தால் தான் அவர்களின் வளர்ச்சி சீராக இருக்கும் எனவே எல்லா குழந்தைகளுக்கும் புரோட்டின் ஊட்டச்சத்தை மருத்துவர்கள் அதிக அளவில் பரிந்துரைக்கிறார்கள்.

வைட்டமின் பயன்கள்

வைட்டமின் ஏ என்பது கண் பார்வை மற்றும் செல்களின் வளர்ச்சிக்கு உதவும். வைட்டமின் பி உடலில் உள்ள நொதிகளின் செயல்பாட்டிற்கு உதவும். வைட்டமின் சி என்பது அண்டிஆக்சிடன்ட் அதிகப்படுத்தக் கூடியவை, எனவே உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வைட்டமின் டி என்பது எலும்புகளை வலுவாக்கும் அதைத் தவிர அதன் வளர்ச்சியையும் அதிகரிக்கும். வைட்டமின் ஈ சருமத்தை பாதுகாக்கும், வயதான தோற்றத்தை குறைக்கும். வைட்டமின் கே என்பது இரத்த உறைதலை தடுக்கும்.

மேலும் படிக்க – லாக்டவுன் ஒருவேளை தொடர்ந்தால் என்ன செய்வது..!

புரோட்டின் பயன்கள்

புரோட்டின் என்பதே நம்முடைய செயல்கள், திசுக்கள், அண்டிபோடி, ஹார்மோன்கள் மற்றும் எம்சைன்களின் வளர்ச்சி மற்றும் கட்டமைப்புக்கு உதவக்கூடியது. நாம் எடுத்துக்கொள்ளும் அசைவ மற்றும் சைவ உணவுகளில் புரோட்டீன்கள் ஏராளமாய் இருக்கிறது. அதிலும் முட்டை, மீன் போன்ற அசைவ உணவுகளில் சற்று கூடுதலாகவே கிடைக்கிறது.

வைட்டமின் மற்றும் புரோட்டின் இரண்டுமே நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களாகும். இது ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்புகளையும் மற்றும் நம்முடைய உடல் உறுப்புகளை பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. இது ஏராளமான காய்கறிகள் மற்றும் பழங்களில் கிடைப்பதனால் தேவைக்கு ஏற்ப இந்த ஊட்டச் சத்துக்களை எடுத்து உங்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன