பாடிபில்டர்களுக்கு உகந்த உணவுகள்..!

  • by
diet that bodybuilders should follow

இன்றைய இளம் தலைமுறைகள் எல்லோரும் சினிமா நட்சத்திரத்தைப் போல் இருக்க வேண்டும் என்பதற்காக ஜிம்மிற்கு சென்று தங்கள் பாடியை சிக்ஸ் பேக்குடன் மாற்றி வருகிறார்கள். ஆனால் இந்த வழிகளை நாம் ஆரோக்கியமான முறையில் மேற்கொள்ள வேண்டும், ஒரு சிலரோ தேவையற்ற உணவுகளை உண்டு தங்கள் உடலை பெரிதாக்கிக் கொள்கிறார்கள். இது பார்ப்பதற்கு அழகை தந்தாலும் நாளடைவில் ஏராளமான பின்விளைவுகளை உண்டாக்கும், எனவே இதை தடுத்து நாம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும், அவைகளை இந்த பதிவில் காணலாம்.

முட்டை

அக்காலம் முதல் இக்காலம் வரை உடல் கட்டமைப்பை வலிமையாக வைத்துக் கொள்வதற்காக எல்லோரும் முட்டையை அதிகமாக பயன்படுத்தி வந்தார்கள். இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி இருப்பதினால் உங்களுக்குத் தேவையான ஆற்றல் மற்றும் தேவையான புரதத்தை அளிக்கிறது. ஜிம்முக்கு செல்பவர்கள் தினமும் 2 முட்டையை தவறாமல் சாப்பிட வேண்டும், அதை முடிந்தவரை முழுமையாக வேகவைத்து சாப்பிடுங்கள்.

உங்களுக்கு கட்டுமஸ்தான உடம்பு வேண்டுமா? எங்கள் டயட் நிபுணரிடம் உங்களுக்கு ஏற்ற உணவுகளை பற்றி ஆலோசனை பெறுங்கள்

ஓட்ஸ், கிரீன் டீ

நாம் காலையில் எடுக்கப்படும் உணவு நம்முடைய ஆற்றலுக்கு மிக முக்கியமானதாக இருக்க வேண்டும், எனவே தினமும் காலையில் ஓட்ஸால் செய்யப்பட்ட கஞ்சி அருந்துங்கள். அது சிதை மாற்றம் மற்றும் கொழுப்புகளின் சேர்க்கையைக் குறைக்கும். அதேபோல் காலையில் கிரீன் டீ அருந்துங்கள், இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை முழுமையாக குறைக்கும்.

பசலைக்கீரை வாழைப்பழம்

பசலைக்கீரையில் தசைகளின் வலிமை சேர்க்கும் வைட்டமின் கே சக்தி அதிகமாக இருக்கிறது. அதேபோல் இதில் இரும்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது. பசலைக்கீரையை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல மாற்றத்தை உணரலாம். பாடி பில்டர்களின் சிறந்த உணவாக பார்க்கப்படுவது வாழைப்பழம், இது உடனடியாக அவர்களின் பசியை குறைத்து உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது.

ப்ரோக்கோலி

ஒரு சில காய்கறிகளை நாம் பச்சையாக சாப்பிடு வதன் மூலமாக அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கிறது. அது போன்ற காய் வகை தான் ப்ரோக்கோலி. இதில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதினால் உங்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. அதைத் தவிர்த்து செல்லுலாரின் ஆயுளை நீட்டிக்க உதவுகிறது.

வேர்க்கடலை

வேர்க்கடலையை வைத்து சமீபத்தில் ஏராளமான உணவுப் பொருட்கள் வந்திருக்கிறது, அதில் வேர்க்கடலை எண்ணெய்யை நாம் அக்காலம் முதல் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் சமீபத்தில் வேர்க்கடலை கொண்டு ஒரு வகையான வெண்ணையை தயார் செய்து வருகிறார்கள். நாம் பிரட்டுடன் இதை சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக நம் உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலை அளித்து நம்முடைய பசியையும் போக்குகிறது.

நண்டு

தசைகளை வலுவடையச் செய்யும் சிங்க் மற்றும் அத்தியாவசிய ஆன்டி-ஆக்ஸிடண்ட் உணவுகள் அதிகமாக இருக்கிறது. கடல் உயிரினமான நண்டை நாம் சரியாக சமைத்து சாப்பிடுவதன் மூலமாக நம் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துகள் கிடைக்கிறது, அதை தவிர்த்து சிக்ஸ் பேக் வைக்க ஆசைப்படுபவர்களுக்கு  இது ஏற்ற உணவாகும்.

இதைத் தவிர்த்து கடல் சிப்பி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, தக்காளி, மிளகாய், காளான், திணை, மட்டன் மற்றும் பருப்பு வகைகளையும் நம் உணவில் சேர்த்து சாப்பிடலாம். இது அனைத்தும் உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து உடல் வலுவை அதிகரிக்கும். எனவே இந்த உணவுகளின் உதவியால் நீங்கள் சிக்ஸ் பேக்கை வைத்துக்கொண்டு ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன