உடல் எடையை குறைப்பதற்கு பெண்கள் பயன்படுத்த வேண்டிய உணவுகள்..!

effective diet chart for famale to follow for weight loss

ஆண்களை விட பெண்கள்தான் உடல் எடையை குறைப்பதற்காக அதிகமாக உழைக்கிறார்கள் இப்படிப்பட்ட பெண்கள் மிக எளிமையான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு உதவும் இந்த உணவுகளை தினமும் அருந்த வேண்டும்.

முதல் நாள்

இந்த நாளில் நாம் பழங்களை மட்டும் சாப்பிட வேண்டும் காய்கறிகளை தவிர்க்க வேண்டும் இதைத் தவிர்த்து நாம் நீர்சத்து அதிகமுள்ள பழங்களை இந்த நாளில் எடுத்துக் கொள்ள வேண்டும் வாழைப்பழம், லிச்சி, திராட்சை போன்ற பழங்களை தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க – புற்று நோய் செல்களை புதைக்கும் காய்கறிகள்!

இரண்டாம் நாள்

இரண்டாம் நாள் காலையில் நாம் முதலில் கீரையை வேக வைத்து அதில் வெண்ணெய் கலந்து சாப்பிட வேண்டும் பின்பு மதியம் மற்றும் இரவுகளில் பச்சை காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுவது நல்லது மறக்காமல் 10லிருந்து 12 டம்ளர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.

மூன்றாம் நாள்

இந்த நாளில் கொழுப்பு இல்லாத ஒரு டம்ளர் பால் மற்றும் 2 வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும் உங்கள் உடல் சோர்வடைந்து இருக்கும் நிலையில் இதை சாப்பிடுவதன் மூலம் மீண்டும் புத்துணர்ச்சி பெறலாம் இதை மூன்று வேளையும் பின்தொடர வேண்டும் இதை தவிர்த்து நீங்கள் தக்காளி சூப்பை குடிக்கலாம்.

மேலும் படிக்க – காய்களின் தங்கம் கேரட் புற்று நோயை சரிசெய்யும்!

ஐந்தாம் நாள்

இந்த நாளில் நீங்கள் முளைக்கட்டிய பயிரை சாப்பிட வேண்டும் அல்லது பிரவுன் அரிசியால் செய்யப்பட்ட சாதத்தை தயிர் கலந்து சாப்பிடலாம் இந்த நாளில் நீங்கள் தக்காளியை நிச்சயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் உங்களுக்கு தேவை என்றால் வேகவைத்த சிக்கன் அல்லது மீன் மேக்கர் இந்த நாள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் பின்பு காய்கறிகளால் செய்யப்பட்ட சூப் குடித்து அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும்.

ஆறாம் நாள்

ஐந்தாம் நாள் செய்வதை அனைத்தையும் பின்பற்ற வேண்டும் ஆனால் இந்த நாளில் நீங்கள் தக்காளி சேர்த்துக் கொள்ளக்கூடாது.

ஏழாம் நாள்

இந்த நாளில் கட்டுப்பாடில்லாமல் நீங்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ளலாம் தேவைப்பட்டால் அரிசியால் செய்த உணவை சாப்பிடலாம் ஆனால் இந்த நாளில் நாம் சர்க்கரை மற்றும் அதிகமாக சாதத்தை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் முடிந்த வரை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க – மாசு நிறைந்த உலகில் உங்களை காத்துக்கொள்ள ஆயுத்தமாகுங்க.!

இதை அனைத்தையும் பின்பற்றினால் மட்டும் போதாது இதற்காக நீங்கள் உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும் எந்தளவுக்கு உணவுகள் நம் உடம்பில் ஏற்படும் கொழுப்புகளை குறைத்து நம்மை ஒல்லியாக மாற்றுகிறதோ அந்தளவுக்கு உடற்பயிற்சிகள் உடலை பராமரிக்க உதவுகிறது எனவே தவறாமல் உடற்பயிற்சி செய்து இந்த உணவுகளை கடைபிடித்தால் நிச்சயம் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை உங்களால் உணர முடியும்.

5 thoughts on “உடல் எடையை குறைப்பதற்கு பெண்கள் பயன்படுத்த வேண்டிய உணவுகள்..!”

  1. Pingback: best exercise to do to reduce your calories in large amount

  2. Pingback: important health benefits of eating kichadi for your breakfast

  3. Pingback: advantages of using solar energy and its health benefits

  4. Pingback: simple and easy methods to follow to reduce belly fat

  5. Pingback: how to reduce weight naturally and stay fit with this tips

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன