பட்டாஸ் கிளப்புமா தனுஷின் பட்டாஸ் படம்

  • by

பொங்கலை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் பட்டாஸ். 40 படத்திற்கு மேல் நடித்துள்ள நடிகர் தனுஷ் தென்னிந்திய உலகை மட்டுமல்லாமல் வட இந்தியாவிலும் தனது நடிப்பை நிரூபித்து உள்ளார். இதற்கு எடுத்துக்காட்டாக நடிப்பிற்கு தேசிய விருதையும் பெற்றுள்ளார். சமீபத்தில் வெளியான அசுரன் 100 கோடியை தாண்டி வசூல் செய்தது. என ஏகப்பட்ட சிறப்புகளை கொண்ட நடிகர் தனுஷின் பட்டாஸ் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

தற்காப்பு கலை:

தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கும் தந்தையின் ஆசையை நிறைவேற்றும் மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ பட்டாஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படிப்பட்ட படத்தில் சினேகா, மெஹரின கவூர், நவீன் சந்திரா, நாசர், முனிஸ்காந்த் போன்றவர்கள் நடித்துள்ளார்கள்.

மேலும் படிக்க – பஞ்சாபி தமிழ் புலவர் ஹர்பஜன் சிங்..!

தனுஷ் எப்போதும் சிறந்த கதை மற்றும் சிறப்பான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுப்பார். அந்த வகையில் பட்டாஸ் திரைப்படமும் சிறப்பான கதாபாத்திரம் என்றே சொல்லலாம். இதுவரை தற்காப்புக் கலைகளை பற்றிய வெளியான படங்கள் ஒரு சிலவற்றை இறக்கின்றன, அதிலும் நம் பெரிய அளவில் பேசப்பட்ட ஏழாம் அறிவு படம் போதிதர்மன் தற்காப்பு கலையை மக்களுக்கு எப்படி கற்பித்தார் என்பது எல்லோருக்கும் உணர்த்தியது.

பட்டாஸ் படத்தை ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இவர் காக்கிச்சட்டை, எதிர்நீச்சல், கொடி போன்ற படங்களை இயக்கியிருந்தார். இவர் இயக்கிய கொடி திரைப்படம் நினைத்த அளவுக்கு ஓடவில்லை இதனால் இவர் தொடர்ந்து தனுஷை வைத்து இயக்கும் இந்தப் படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

பட்டாஸ் திரைப்படத்தை ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார். படம் வெளிவருவதற்கு முன்பாகவே சில்ப்ரோ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து உள்ளார்கள்.

மேலும் படிக்க – அட்டு ஆனந்தியான “அறந்தாங்கி நிஷா”.!

சரியாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே பொங்கல் தினத்தில் ஆடுகளம் படம் வெளியானது‌ தனுஷின் வாழ்க்கையை திருப்பி போட்ட படம் என்றே இதனை சொல்லலாம். அதேபோல் இந்த பொங்கல் அன்று பட்டாசு திரைப்படம் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன