அசுர வெற்றியில் தனுஷின் அசுரன் 100வது நாள் விழா!

  • by

அசுரன் படத்தின் 100 ஆவது நாள் வெற்றி கொண்டாட்டத்தில் அசுரன்  படக்குழுவுடன் கொண்டாடினார்கள். இவ்விழாவில் நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, அம்மு அபிராமி, கென் கருணாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அசுரன் வெற்றி விழா:


அசுரன் படத்தை வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானது. இப்படமானது  விமர்சனத்துடன் வசூல் ரீதியாகவும் மாபெறும் பெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது ஆகும். அசுரன் படத்தின் 100 நாள் விழா சென்னையில் உள்ள ரோஹினி திரையரங்கில் நடைபெற்றது.   நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, அம்மு அபிராமி, கென் கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்ட விழா சிறப்பாக நடைபெற்றது. 

தனுஷ் நடித்த அசுரன் படமானது  மக்களால் அதிக அளவில் பாராட்டுகள்பெற்றது. அப்படத்தின் 100 நாள் கொண்டாட்டத்தை ஒட்டிய விழா எடுக்கப்பட்டது. தனுஷ் நடித்த சமீப காலபடங்கள்  அனைத்தும் பெரும் அளவில் புகழ் பெற்று பேசப்பட்டன.

மேலும் படிக்க – நம்ம வீட்டு பிள்ளை “சிவகார்த்திகேயன்” வாழ்க்கை முறை.!

தனுஷின் தெறிக்கும் பட்டாஸ்:

அசுரன்  படத்தை முடித்த கையோடு அடுத்த  பட்டாஸ் என்ற படம் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது ஆகும். பட்டாஸ் படத்தை இயக்குநர் செந்தில் குமார் இயக்குகின்றார்.  தனுஷ் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது ஆகும். 

தனுஷுக்கு ஜோடியாக சினேகா,மெஹரீன் பிர்சாடா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இளமையான தோற்றத்தில் துரு துறுவென இப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இரட்டை இளம் இசையமைப்பாளர்களான விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர்.

வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16 ஆம் தேதி ரிலீசாகவுள்ள இப்படத்தின் சென்சார் சர்டிபிகேட்டை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பட்டாஸ் படத்தின் நீளம் 2 மணி நேரம் 21 நிமிடங்கள் என்று அறிவித்துள்ளனர். இப்படி அடுத்தது.

னுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் ‘அசுரன்’. இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார்.

இப்படத்தின் 100வது நாள் வெற்றிக் கொண்டாட்ட விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

மேலும் படிக்க – சூரரைப் போற்று சூர்யாவின் வாழ்க்கை முறைகள்.!

கலைப்புலி தாணு:

இவ்விழாவில் பேசிய அசுரன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, ‘மேடையில் வீற்றிருக்கும் அத்தனை கலைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் எம் வணக்கம் என தொடங்கி தம்பி தனுஷ் வேலையில்லா பட்டதாரி படம் சமயத்தில் வெற்றிமாறன் அவர்களோடு படம் பண்ணலாம் என்று கூறினார். அந்தக் காலம் முதல் எங்களுக்கிடையே நல்ல நட்புறவு உள்ளது என்றார், மேலும் எஸ்.பி முத்துராமனுக்கு பிறகு என் மனதை கொள்ளை கொண்டவர் வெற்றிமாறன் என தாணு தெரிவித்தது குறிப்பிடத் தக்கதாகும்.

மேலும் அவர் தனுஷை புகழாராம் பாடினார். சிவாஜி சாருக்குப் பிறகு தனுஷின் நடிப்பு பிரம்மிக்க வைக்கின்றது என்றும், கேரளாவில் படம் பார்த்த அத்தனை பெரிய நடிகர்களும் ஒரே வார்த்தையில்” தனுஷை தவிர யாராலும் இப்படத்தில் நடிக்க முடியாது” என்றார்கள் என தெரிவித்தார். நடிகர் திலகத்திற்குப் பிறகு தனுஷ் தான். ரஜினியிடம் நான் இந்தப்புள்ள நமக்கு கிடைத்த பொக்கிஷம் என்று கூறியதாக தெரிவித்தார்.மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன