விருப்பங்களை பகிர்ந்து பந்தங்களை பலப்படுத்துங்கள்

  • by

காதலிக்கும்  பொழுது சில விசயங்களை நாம் கருத்தில் கொள்தல் அவசியமாகும். உங்கள் காதலில் எந்த அளவிற்கு உண்மையானது இருக்கின்றதோ அந்தளவிற்கு நாம்  காதலைப்பற்றிய ஒரு தெளிவான பார்வை என்பது அவசியம் ஆகும். அது இருக்கும் பொழுது வாழ்க்கையானது தெளிவாகும். உணர்வுகளை, உங்கள் வாழ்க்கையை ஒருவருக்கொருவர் முறையாகப் பகிர்தல் என்பது அவசியம் ஆகும். 

 காதலர்களிடையிடையேயான பகிர்வு: 

காதலர்களுக்கிடையேயான பகிர்வு என்பது அவசியமானது ஆகும். அதனை முறையாக செய்யும் பொழுது  கருத்து வேறுபாடுகள், விருப்பு வெருப்புகள் அனைத்தும் ஒருவருக்கொருவர் நாம் அறிதல் என்பது அவசியம்.  எந்தளவிற்கு நீங்கள் உங்களை உங்கள் விருப்பமார்களுடன் வெளிப்படுத்துகின்றீர்களோ அந்தளவிற்கு உங்கள் அன்புக்குரியவர்களிடம் நெருங்கும் வாய்ப்பு கிடைக்கும். 

மேலும் படிக்க: உணர்வுகளின் சங்கமத்தில் உதிப்பது காதல்

விருப்பு வெறுப்புகள் அறிந்தால் அன்பு பெருகும்: 

காதலர்களிடையே என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதனை பரிமாரிக் கொள்ளூம் பொழுது எளிதாக பரிமாற்றங்கள் நிகழ்த்தலாம்.  பிடிக்காத ஒன்றை செய்து உங்களை காயப்படுத்தவோ, வருத்தப்படுத்தவோ மாட்ட்டார் உங்கள் விருப்பத்துக்குரியவருக்கு பிடித்தது அதிகம் செய்து அன்பை பெருக்க இது ஒரு வழியாகும். மேலும் பிடிக்காதது  செய்யாமல் இருக்கலாம். இருவரிடையே தேவையற்ற சிக்கல்கள் வராது. வாழ்க்கையில் நமது காதல் பயணமானது இனிமையானதாக இருக்க வேண்டும் எனில் பிடித்ததை செய்தல் அவசியம் ஆகும். 


விருப்பங்கள்

பரிசுகள் பெருகும் பரிவர்த்தனைகள் அதிகரிக்கும்: 

உங்களுக்கு பிடித்த விசயங்களை காதலித்தவர் அறியும் பொழுது பரிவர்த்தனையானது அதிகரிக்கும். உங்களவர் எங்கு சென்றாலும் உங்களுக்குப் பிடித்ததை காணும் பொழுது அவரது  மனமானது உங்களுக்காக கடந்து துடிக்கும், உங்களுக்கு பிடித்ததை பரிசாக வாங்கி கொடுப்பார். நீங்களும் அவருக்கு பரிசுகள் வாங்கி கொடுக்க முடியும். இவ்வாறு உங்களுக்குள் பரிவர்த்தனையானது அதிகரிக்கும். 

விருப்பங்கள்

எல்லையற்ற எண்ணங்கள் பகிர்வு: 

உங்கள்  காதலில் எண்ணங்கள் அனைத்தும் எல்லையற்று பரந்து  நீண்ட உணர்வுகள் அனைத்தும் ஒருக்கொருவர் பகிர்தல்  என்பது அவசியம் ஆகும். எண்ணங்களை நீங்கள் எவ்வாறு பெருக்க முடியும் சீரான சிந்தனையால்தான் அதனை முன்னிருத்தி  பகிர்வு செய்ய முடியும். எப்பொழுது கோபம் வரும் எதை செய்தால் மகிழ்ச்சி அடைவீர்கள் இது போன்ற பரிமாற்றங்கள் என்பது  வாழ்க்கையை பெருக்கூட்டும். அன்பான வாழ்க்கைக்கு இது இருக்க வேண்டும். ‘

எண்ணங்களை பரிமாறும் பொழுது பிடித்த உணவு, பிடித்த மனிதர்கள் குடும்ப சூழல் எதிர்கால இலக்குகள்,  குடும்பத்தில் உங்கள் பங்கு, எதனை உங்கள் குடும்பத்தி எதிர்ப் பார்க்கீறிர்கள் போன்ற அனைத்தும் முறையாக நீங்கள் பகிர்தல் என்பது அவசியம் ஆகும் . 
மேலும் படிக்க: காதலில் நீங்கள் எந்த வகை என தெரிந்து காதலியுங்கள் !

விருப்பங்கள்

விருப்ப இடங்கள், விருப்ப படங்கள், விருப்ப மொழிகள், விருப்ப உணவு என உங்களுக்குள் பல இருக்கும் இது அவைத்தும் உங்களை ஒருங்கிணைக்கும்.  இருவருக்குள்ளும் ஒற்றுமை வேற்றுமை அறிந்து புரிதல் உண்டாக்கும். வாழ்க்கை நிம்மதியாக நகர்வதற்கு இது அவசியமானது ஆகும். 

மேலும் படிக்க: எல்லைகளை கடந்த எல்லோருள்ளும் பயணிக்கும் காதல்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன