வலம்புரி சங்கு வழிபாட்டால் வாழ்வு வளம் பெறும்

  • by

 வலம்புரி சங்கானது மகாலட்சுமி வாசம்  செய்யும் இடம் ஆகும். அது அனைவருக்கும் கிடைக்காது. வலம்புரி சங்கு முறைப்படி கிடைத்தால் அதனை நாம் பெறலாம். 

மேலும் படிக்க: அஷ்டமியில் யாருக்கு என்ன செய்யனுமுனு பார்போம்

வளம் தரும் வலம்புரிசங்கு:

வலம்புரி சங்கானது வாழ்வின் தோசங்கள் பல போக்குகின்றது. 
பிரணவ மந்திரத்தின் அடையாளமாகப் புனிதப்பொருளாக வலம்புரிச் சங்கு சிறந்து செயல்படுகின்றது.  பாற்கடலைக் கடைந்தபோது திருமகள் வெளியே வந்தபோது க லட்சுமி உடன் தோன்றியது வலம்புரி சங்காகும். திருமால் இதனை தனது கரத்தில் தாங்கினார்.

வலம்புரி சங்கு

வலம்புரி சங்கு இருக்கும் இடத்தில் தோஷங்கள், துஷ்ட சக்திகள் இருக்கவே  இருக்கின்றது. வலம்புரி சங்கினை பூஜித்து வந்தால் கண்திருஷ்டி போக்கும், பகைவர்களின் தீயச் செயல் எதுவும் நம்மை அண்டாது.  கடன் பிரச்சினை நீங்கும். வாஸ்து தோஷங்கள் யாவும் விலகும்.

சங்காலத்தில்  தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வதால் 10 மடங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறலாம் என்று கூறப்பட்டது. . இச்சங்கானது  இருக்கும் இடத்தில் உணவு பஞ்சம் என்பது இல்லை. வலம்புரிச் சங்கு பூஜை செய்துவந்தால் பிரம்மதோஷம் விலகி விடும்.

மேலும் படிக்க: அருள் தரும் கணபதியின் ரூபங்கள், தரிசனங்கள்


பூஜை செய்யும் முறை:

சங்கினை வளர்பிறை நாளில் வாங்கி வந்து புனித நதி நீர் இருந்தால், அதில் நீராட்டி சுத்தம் செய்யவேண்டும்.   வலம்புரி சங்கினை , மஞ்சள் கலந்த தூய நீரில் கழுவலாம். பின்னர் மஞ்சள், சந்தனம், குங்குமம், புஷ்பங்கள் கொண்டு அலங்கரித்து ஒரு பீடத்தின் மீது வைக்க  பூஜித்து வர வேண்டும். 

வலம்புரி சங்கு

வாஸ்து தோஷம் உள்ள  வீடுகளில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.

செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம்  நடந்து விடும்.

அதிகக் கடன் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும், அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16-வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும். செலவங்கள் சேரும். நினைத்தது எல்லாம் நடக்கும்.

மேலும் படிக்க: ரம்மியமான வாழ்க்கை வாழ ரத்தினங்கள்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன