ஆழ புரிதலில் ஆரம்பாகும் காதல் ஆண்டாண்டுகள் வாழும்

  • by

 காதலில்  புரிதல் என்பது அவசியம், அதிலும் ஆழ புரிதலுள்ள   காதல் அனைத்து சாவால்களையும் வெற்றிகரமாக   சமாளித்து இருக்கும். காதலில் உணர்வுகள் உண்மையாக இருக்கும் பொழுது சிக்கல்கள் என்பது இருக்காது. 

காதலில்  ஆற்றல்: 

காதலில் எப்பொழுதும் புரிதல் இருக்க வேண்டும். ஆணோ பெண்ணோர் தன் அன்புடையாருடன் சரியான புரிதல்  வைத்திருக்கும் பொழுது எந்த ஒரு சாவலான சூழலையும் சரிசெய்து நிக்க முடியும். உங்கள் காதலில் உண்மையான அனுகுமுறை இருக்கின்ற  நாளென்ன பொழுதென்ன காதலில் எல்லாம் ஒன்றுதான். 


புரிதலில் காதல்

அன்புடையார் எல்லாம் உடையார்   என்பதனை உணர்ந்த உயிர்கள் என்றும் ஒன்றுபட்டு வாழும்.  அன்புடைய நெஞ்சம் அனைத்து வஞ்சத்தையும் வென்று நிக்கும்.  காதல் தருணம் எப்பொழுதும் ஸ்பெசலானதுதான் அதனைப் எப்படி கொண்டு செல்கின்றோம் என்பதில்தான் உள்ளது. 

காதல் செய்யும் மாயம்: 

உண்மையான காதல் கொண்ட நெஞ்சமானது எப்பொழுதும் திடமாக நிற்கும். ஊடல்கள் பல வந்தாலும் உயிர்புடன் இருக்க முடியும். காதல் செய்யும்  உள்ளங்களில் கபடம் இருக்க கூடாது. இருவருக்குள்ளும் ஆதமாத்மான பிடிப்பு என்பது இருவருக்குள்ளும் சொல்லாமல் வரும். அந்த இணைப்புள்ள இருவர் எங்கு  எவ்வளவு தொலைவில் சென்றாலும் காதலானது குறையாது. 

மேலும் படிக்க: காதலர் தினத்தை இதுபோல கொண்டாடி உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள்.!

மனப்பரிமாற்றம்: 

மனப்பரிமாற்றம் நிறைந்த இருவருக்கு  மாண்புமிக்க பகிர்வானது நிறைந்து கிடக்கும்  தன்னுடைய அன்புக்குரியவர் சோல் மேட் தன்னுள் ஒருவராக அது கருதச் செய்யும். அந்த பிணைப்பு உங்களுள் இருக்கின்றதா என்று பார்க்கவும். இல்லையெனில்  பாதகம் இல்லை ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். காதல் கொண்ட நெஞ்சங்கள் எவ்வளவு கசப்பான அனுமுறையானாலும் உடனே மறந்துவிடும். அன்புக்குரியவருக்காக இறங்கிவரும். பெற்ரோர்கள் எவ்வளவு கடினமாக நடந்து  கொண்டாலும் அந்த அனைத்தும் கடந்து தன் அன்புக்குரியவருக்காக நிற்கும்.

புரிதலில் காதல்

 காதல் பரிமாற்றம் சரியாக செய்பவர் நீங்கள் என்றால் நன்மை பயக்கும்.  கல்லுரி காதல், பள்ளி காதலில் புரிதல் இருக்காது என்பார்கள் பலர் உண்மைதான் ஆனால் அதனை சிலரது ஆழப்புரிதலானது வென்றுவிடுகின்றது. கல்லுரி வயதில்  வருவது என்னவென்று பலருக்கு தெரிவதில்லை காதல் என்பது பலருக்கு புரியாமல் வருவதாலேயே இந்த சிக்கலானது வருகின்றது.  

மேலும் படிக்க: காதலர் தினத்தில் கலக்கலான திட்டங்களோட ஜமாயுங்க!

புரிதலில் காதல்

காதல் பிறக்கும் இடம்: 

ஒருவருக்கு இன்னொருவர் மேல் உள்ள ஈர்ப்பு காதல் என்கின்றனர், ஆனால்  ஒருவருக்கு இன்னொருவர் மேல் இருக்கும் ஈர்ப்பை கடந்து காதல் பார்வைகள் பல கடந்து பயணிக்கும்  காதல், இருவருக்குமிடையே நடந்த பல பேச்சுவார்த்தைகள் அதன்பின் இவருக்கும் இடையே நடந்த இதயப் பரிமாற்றமானது காதலுக்கு பலம் சேர்க்கும். பிரிந்திருக்கும் தருணங்கள் எல்லாம்  மன நிம்மதியை கெடுக்கும். சந்திக்கும் பொழுது பிணைப்பு அதிகரிக்கும். 

மேலும் படிக்க: காதலில் உண்மையுடன் உணர்வாக இருக்க வேண்டும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன