இதுவரை உலகில் பரவி உள்ள வைரஸ்களின் வரலாறுகள்..!

  • by
deadliest viruses which were spread in the world

மனிதர்களின் வாழ்க்கை பலவிதமான புதிர்களை கொண்டது, பூமியில் எப்படி ஏராளமான மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் இருக்கிறதோ அதே போல் தான் மனிதர்களின் உடலுக்குள்ளும் ஏராளமான உயிரினங்கள் இருக்கின்றன. அது அனைத்தும் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்களோ அதே போல் நமக்குள் இருக்கும் உயிரினங்கள் அதற்கேற்றவாறு நம் உடலுக்குள் வாழ்கிறது. நாம் உயிரினம் என்று சொல்வது வைரஸ், செல்ஸ், பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள் தான். இயற்கை சீற்றத்தினால் நமக்கு எப்படி ஆபத்துக்கள் நிகழ்கிறதோ அதேபோல் வைரஸ் தாக்குதலினால் நம் உடலுக்குள் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் செல்கள் தாக்கப்படுகிறது. அதனால் உண்டாகும் பிரச்சினைகள் நம்முடைய உடலில் இருக்கும் நுண்ணுயிரிகளை அழிப்பது மட்டுமல்லாமல் நம்மையும் சேர்த்து அழித்து விடுகிறது. இது போன்ற முறைகளில் நாம் இப்போதெல்லாம் பரிணாம வளர்ச்சியை அடைகிறேமோ அப்போதெல்லாம் ஏதாவது ஒரு வைரஸ் தாக்குதல் மனிதர்களின் வாழ்க்கையை பாதிப்படைய செய்கிறது. அப்படி நம் வாழ்க்கையை பாதிக்கச் செய்த வைரஸ்களை இந்தப் பதிவில் காணலாம்.

மார்பர்க் வைரஸ்

1967 ஆம் வருடம் ஆப்பிரிக்காவில் உருவாக்கியது இந்த வைரஸ், ஆராய்ச்சி கூடத்தில் இருக்கும் குரங்குகளின் மூலமாகப் பரவியது. முதல் முதலில் இந்த வைரஸ் உகண்டா நகரை தாக்கியது. அதன்பிறகு காங்கோ மற்றும் அங்கோலா போன்ற நகரங்களையும் தாக்கியது. இந்த வைரஸ் எபோலா குடும்பத்தை சார்ந்தது. இதன்மூலமாக பாதிப்படைந்தவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. அதன் பிறகு உடலில் உள்ள எல்லா பகுதிகளிலும் ரத்தப் போக்கு உருவானது.

மேலும் படிக்க – சித்த மருத்துவத்தால் கொரோனா வைரஸை தடுக்க முடியுமா..!

எபோலா வைரஸ் 

1976-ம் வருடம் சூடான் மற்றும் காங்கோவில் உருவானதே இந்த எபோலா வைரஸ். இது மனிதர்களின் ரத்தத்தில் கலந்து மற்றும் அவர்கள் மூலமாக வெளியிடப்படும் நீரினால் மற்றவர்களுக்கும் பரவியது. இருமல், தும்மல் போன்ற வகைகளில் பரவி இது ஏராளமான மக்களை பாதித்தது. 2014 ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்காவிலும் இந்த வைரஸ் தொற்று பரவியது. இன்றுவரை மிக மோசமான வைரஸ்களின் பட்டியலில் முதலில் இருப்பது இந்த வைரஸ் தான்.

ராபீஸ் வைரஸ்

நம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளிடமிருந்து பரவக்கூடியது தான் இந்த ராபிஸ் வைரஸ். ராபிஸ் வைரஸை பாதிப்பு உள்ள ஏதாவது மிருகங்கள் உங்களைக் கடித்தால் போதும், 100% உங்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது. இது நேரடியாக உங்கள் மூளையை பாதிக்கிறது.  ஆனால் இதற்கான மருந்தை கண்டுபிடித்து உள்ளதால் ராபிஸ் நோய் உள்ள மிருகங்கள் உங்களை கடித்தால் உங்களை உடனே குணப்படுத்தலாம் ஆனால் இதை உடனே செய்ய வேண்டும்.

எச்ஐவி எய்ட்ஸ்

மனிதர்கள் உடலுறவு கொள்வதால் ஏற்படும் வைரஸ் தொற்று தான் இந்த எச்ஐவி வைரஸ். இதுவும் குரங்கிலிருந்து மனிதர்களுக்கு தொற்றிக் கொண்ட வைரஸ் என கருதப்படுகிறது. இந்த வைரஸ் உள்ள ஒருவரின் ரத்தம் மற்றும் அவர் உடலுறவு மேற்கொள்வதன் மூலமாக மற்றவர்களுக்கு பரவக்கூடியது. முழு அளவில் ஏராளமான உயிர்களை பலிகொண்ட இந்த வைரஸ் இதுவரை 32 மில்லியன் மனிதர்களை கொன்றுள்ளது. இந்த வைரஸை 1980-ஆம் ஆண்டில் தான் கண்டுபிடித்தார்கள், அதிலும் மிக ஏழ்மையான நாடுகளில் அதிகளவில் பரவி வந்த இந்த வைரஸ் பலரின் உயிரை காவு வாங்கியது. இன்று இதற்கான விழிப்புணர்வுகள் மற்றும் தடுப்பு யோசனைகள் மூலமாக இந்த வைரஸ் பரவுவதை நாம் தடுத்து வருகிறோம்.

சிறிய அம்மை

ஸ்மால் பாக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த சிறிய அம்மையின் மூலமாக கிட்டத்தட்ட 300 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளார்கள். உலகிலேயே அதிக அளவிலான உயிர்களைப் பறித்த வைரஸ் இதுதான். இதை தவிர்த்து இதில் உயிர் பிழைத்தவர்கள் இறுதிவரை குருடர்களாகவும் மற்றும் உடம்பில் ஏதேனும் தழும்புகளை கொண்டு வாழ்ந்தார்கள். யூரோப்பாவிலிருந்து பரவிய இந்த வைரஸ் அமெரிக்கர்களை அதிக அளவில் பாதித்தது. இப்போது முழுமையாக இந்த வைரஸ் நம் கிரகத்தை விட்டு வெளியேறி உள்ளது என்று மருத்துவர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள்.

அன்ட வைரஸ்

எலிகள் மூலமாக பரவக்கூடிய இந்த அண்ட வைரஸ், முதல் முதலில் 1950ஆம் ஆண்டு கொரியர்கள் போர்ளுக்கு இடையே உருவானது. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்தார்கள் அதில் 12 சதவீதம் வரை உயிர் இழந்தார்கள். 1993 ஆம் ஆண்டு அமெரிக்காவில் கால்பதித்த இந்த வைரஸ் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்டவர்களை பாதித்தது அதில் 36% பேர் உயிரிழந்தார்கள். உங்களை மிக எளிதில் தாக்கி உயிரிழக்க செய்யும் கொடிய வைரஸ்களில் இதுவும் ஒன்று.

டெங்கு வைரஸ்

உலகில் அதிக அளவிலான உயிரிழப்புகளை நிகழ்த்திய ஒரு சிறிய உயிரினம் தான் கொசு, அதன் மூலமாக பரவக்கூடியது தான் இந்த டெங்கு வைரஸ். 1950இல் பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து நாடுகளில் உருவான இந்த டெங்கு வைரஸ் உலகில் ஏராளமான மக்களை பாதித்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த டெங்கு காய்ச்சல் 50 முதல் 100 மில்லியன் வரை அதிகரிக்கிறது. 9 வயது முதல் 45 வயது வரை இருக்கும் மனிதர்களுக்கான தடுப்பு மருந்தை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

மேலும் படிக்க – உங்கள் வீட்டில் நீங்கள் செய்ய வேண்டிய கடமை..!

சார்ஸ் வைரஸ்

2002 ஆம் ஆண்டு சீனாவில் உருவானதுதான் இந்த சார்ஸ் வைரஸ், இது வவ்வால்களின் மூலமாக உருவாக்கி அதன் கழிவுகளின் மூலமாக மனிதர்களுக்கு பரவி உள்ளது. அதை தவிர்த்து வவ்வால்களை உண்ணும் பழக்கம் சிலருக்கு உண்டு, இதன் மூலமாகவே இந்த வைரஸ் சீனா முழுவதும் பரவியது. இந்த வைரஸ் கிட்டத்தட்ட 26 நாடுகளுக்கு பரவியது. இதன் மூலமாக 8000 திற்கும் மேற்பட்டவர்கள் பாதித்தார்கள். 2000ம் ஆண்டிற்கு பிறகு சார்ஸ் வைரஸ் முழுமையாக அழிந்தது. ஆனால் சமீபத்தில் உருவான கொரோனா வைரஸும் இந்த குடும்பத்தை சார்ந்ததுதான். இதன் மூலமாக உயிரிழப்பவர்களின் சதவீதம் 2.3 ஆக இருந்தாலும் இது மனிதர்களை அச்சுறுத்தும் மிகக் கொடிய வைரஸாக இருக்கிறது.

ரோட்டோ வைரஸ் மற்றும் மெர்ஸ் வைரஸ்களும் மனிதர்களை அச்சுறுத்திய வைரஸ்கலாகும். இதில் மெர்ஸ் வைரஸ் சார்ஸ் குடும்பத்தை சர்ந்தது. மேலே குறிப்பிட்டுள்ள ஏராளமான வைரஸ்களுக்கு மாற்று மருந்துகளை கண்டுபிடித்துள்ளார்கள். ஒரு சில வைரஸ்களை தடுக்கும் மருந்துகள் இருக்கிறது. ஆனால் சமீபத்தில் உருவான கொரோனா வைரஸுக்கு மருந்து மிக விரைவில் கண்டு பிடிப்பார்கள் என்று உலக சுகாதார அமைப்பு வாக்குறுதி அறிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன