முக அழகை பாதிக்கும் பொடுகு, அதற்கான தீர்வு.!

dandruff causes pimples on your face, whats the remedy?

பொடுகு பிரச்சினை என்பது எல்லோருக்கும் வாழ்நாளில் ஒருமுறையாவது வந்துவிடும். ஆனால் ஒருவருக்கு பொடுகு வந்து விட்டால் அது விரைவில் சென்று விடாது. அறிவியல்பூர்வமாக ஏன் பொடுகு வருகிறது என்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை ஆனால் இதை அழிப்பதற்கான வழி கடினமாக உள்ளது.

பொடுகுகள் அதிகரிப்பதனால் நமக்கு சருமத்திற்கும் இது பறவி முகத்தில் பருக்கள் மற்றும் வறட்சித் தன்மையை ஏற்படுத்துகிறது. நம் மூக்கு கண் மற்றும் புருவங்களுக்கு அருகில் சிறுசிறு வெள்ளையாக பருக்கள் முளைப்பதற்கு பொடுகுகளே காரணம்.

மேலும் படிக்க – பார்ட்டிகளுக்கு செல்வதற்கு முன்பு மேக் ஓவர் எப்படி செய்வது?

பொடுகு பிரச்சனை உள்ளவர்கள் சோப்பு கலவைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் ஏனென்றால் எப்போது இதை நாம் அதிகளவில் நம் தலையில் சேர்த்து கழுவுகிறோமோ அப்போதே நமது தலையில் இருக்கும் ஈரப்பதம் குறைந்து வறட்சி தன்மை ஏற்படுகிறது. இதனால் பொடுகுகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பொடுகுகள் உங்கள் தோல் பகுதியை மிக மென்மையாக ஆக்கிவிடுவதினால் சோப்புகள் மற்றும் இதர பொருட்களை வைத்து நாம் அதிக அளவில் சுத்தம் செய்வது என்றால் நமது மென்மையான தோல் பாதிப்படையும் இதனால் முடி கொட்டுதல் அதிகரித்துவிடும். இதை தவிர்ப்பதற்கு நாம் வாரத்திற்கு ஒரு முறை பல தடவை நம் கூந்தலை அலச வேண்டும் அதிலும் ஆண்ட்டி டாண்ட்ரப் ஷாம்பூக்களை கொண்டு அலசுவது நல்லது.

மேலும் படிக்க – உங்கள் அழகை அதிகரிக்கும் ஆரஞ்சு ஃபேஸ் பேக்..!

ஒரு சிலருக்கு முகம் மற்றும் காதுகள் பகுதியில் பொடுகுகள் வருவது உண்டு இதை தடுப்பதற்கு நாம் முகத்தை ஃபேஸ் வாஷ் மூலம் கழுவ வேண்டும் இப்படி செய்வதன் மூலம் முகத்தில் ஏற்படும் பருக்கள் மறைந்துவிடும்.

தலைக்கு குளிப்பதற்கு  நாம் பொடுகு ஷாம்பு பயன்படுத்த வேண்டும் மற்றும் நமது வேர்பகுதியில் படும்படி நன்கு தேய்க்க வேண்டும் பிறகு அதை 5 நிமிடங்கள் ஊற வைத்து மீண்டும் அலசவேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்வதன் மூலம் நமது தலைமுடி ஆரோக்கியமாக பொடுகு தொல்லையிலிருந்து விடுதலை ஆக முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன