பிரபல நடன இயக்குநர் பிருந்தா படம் இயக்கவுள்ளார்

  • by

 தமிழ்  சினிமாவில் புதிய இயக்குநராக நூற்றுக்கணகான படங்களுக்கு மேல் நடனம் அமைத்து கொடுத்த நடன இயக்குநர் பிருந்தா, இயக்குநராக  புதிய அவதாரம் எடுக்கவுள்ளார் என தகவல்கள் கிடைக்கின்றன.

தமிழ் சினிமாவில் பிருந்தா, கலா  பெண் நடன இயக்குநகர்கள் என்பதுகளில் இருந்து இப்பொழுது வரை புகழ் பெற்று திகழ்கின்றனர். மிகச் சிறந்த அனுபவம் வாய்ந்த நடன இயக்குநர்கள் ஆவார்கள். இவர்களில் பிருந்தா மாஸ்டர் புதிதாக இயக்குநராக அவதாரம் எடுக்கவுள்ளார். இதுகுறித்து கதை ஒன்று தயார் செய்துள்ளார் எனவும் தகவல்கள் கிடைக்கின்றன. 


காதல் கதை:

பிருந்தா மாஸ்டர் இயக்கவுள்ள புதுப்படம்  ஒரு காதல் கதை என்றும் இதில் நாயகனாக துள்கர் சல்மான், நாயகியாக காஜால்  நடிப்பார்கள் என்கின்றனர். தமிழ் சினிமாவில் சிறந்த காதல் கதை கொண்ட படமாக்க உருவாக்க இயக்குநர் பிருந்தா திட்டமிட்டுள்ளார். 

மேலும் படிக்க – அட்டு ஆனந்தியான “அறந்தாங்கி நிஷா”.!

ஏற்கனவே ராகாவா லாரன்ஸ்,  பிரபுதேவா இயக்குநர்களாக வலம் வந்து கொண்டிருக்க புதிதாக நடன இயக்குநரான பெண் ஒருவர் இயக்குநராவது அனைவரிடமும்  புதுவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை நோக்கி கோடாபாக்கம் ஏரியா காத்துக் கிடக்கின்றது. 

நல்ல நடன இயக்குநர் டெடிகேசன் ஆடாதவர்களையும் ஆட வைக்கும் வல்லமை கொண்ட நடன இயக்குநர் என்ற பெயரைப் பெற்றவர் பிருந்தா, இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம்,  ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தனது நடன இயக்கத்தை திறம்படச் செய்து பெயர் பெற்றவர் ஆவார். 

இயக்குநர் களம்: 

1984 ஆம் ஆண்டு முதல் நடன இயக்கத்தை தொடங்கியுள்ளார். இவர் 4000  பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துக் கொடுத்து சிறப்பாக பணியாற்றியுள்ளார்.  இவரது குடும்பத்தினர் அனைவரும் சினிமாவில் நடன இயக்குநர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.  பிருந்தா கே. பாலச்சந்தர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். மாஸ்டர் பிருந்தா  அவர்களுக்கு இயக்குநர் களம் புதிது என்றாலும், நடன இயக்குநராக தனது பணியை செவ்வனே செய்தவர், சினிமா குறித்த பார்வை அதிகம் கொண்டவர். 20 வருடங்களுக்கு மேல் சினிமாவில் பணியாற்றியவர் என்பதால் இயக்குவதில் சிக்கல்கள் எதுவும் இருக்காது என்று  சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுபுது அர்த்தங்கள் படத்தின் மூலம் நடன இயக்குநராக களம் கண்ட நடன இயக்குநர் பிருந்தா, இன்று புதுப்புது  அவதாரமாக இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளது சிறப்பான துவக்கம் ஆகும். இவர் சிறந்த நடன இயக்குநராக பல்வேறு படங்களுக்கு விருதுகளை வாங்கியுள்ளார் குறிப்பிடத் தக்கது ஆகும்.

மேலும் படிக்க – விக்னேஷ் சிவனின் வாழ்க்கை தொடக்கம்..!

அதிகாரப்பூர்வ அறிவிப்பை நோக்கி சினிமா வட்டாரங்கள் காத்திருக்கின்றன. துளகர் சல்மான்  தமிழில் மீண்டும் ஒரு வாய்ப்பை இப்படத்தின் மூலம் பெறுவார்.  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன