உங்கள் தினசரி வாழ்க்கையை இப்படி வாழுங்கள்..!

  • by
daily life routine that you should follow

எல்லோரும் அதிகமாக விரும்புவது  ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை தான். ஆனால் நாம் என்னதான் மகிழ்ச்சியாக இருந்தாலும் நமது ஆரோக்கிய குறைபாடு என்றால் நமது மகிழ்ச்சி பெரிதும் பாதிப்படைகிறது. எனவே நம்முடைய சந்தோஷத்தை தக்கவைப்பதற்காக நாம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

நம்முடைய சந்தோஷம் என்று நினைத்துக் கொண்டு நாம் தேவையில்லாத உணவு முறைகளை மற்றும் கெட்ட பழக்கங்களை அதிகரித்துக் கொண்டே வருகிறோம் இது குறுகிய கால சந்தோஷத்தைக் கொடுத்தாலும் உங்கள் வாழ்க்கையின் எண்ணிக்கையையும் குறைத்துவிடுகிறது. எனவே உங்கள் மனம் விரும்பி நபர்களுடன் பல நாட்கள் வாழ முடியாமல் மிக விரைவில் உங்கள் நாட்களை இழந்து விடுகிறீர்கள். எனவே ஒரு சில வழிகளை தினமும் கடைபிடிப்பதன் மூலமாக உங்கள் வாழ்க்கையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க – கூகுளில் அதிகம் தேடப்பட்ட உணவு வகைகள்..!

உணவிற்கு முன்பாக நீர் குடியுங்கள்

நாம் அதிகமாக செய்யப்படும் தவறுகளில் மிக முக்கியமான ஒன்று எப்போதும் உணவிற்கு பின்பாக நாம் நீர் அருந்துவது. இயற்கையாகவே நம் உடலில் நீர் சுரப்பி இருக்கும். இதை நாம் உணவு அருந்திய பிறகு நீர் குடிப்பதன் மூலமாக அந்த சுரப்பை நாளடைவில் குறைந்து விடும். எனவே உங்கள் உணவு எளிதில் ஜீரணம் ஆக வேண்டுமென்றால் உணவுக்கு முன்பாக நீர் அருந்துங்கள். இது அனைவருக்கும் தெரிந்து இருந்தாலும் பெரிதாக இதை கடைபிடிக்க மாட்டார்கள். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இதை கடைபிடியுங்கள்.

ஏதாவது ஒருவேளை ஆரோக்கியமான உணவை அருந்துங்கள்

நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு வேளை உணவுகளை அருந்துகிறார்கள். அதில் ஏதாவது ஒரு வேளை மட்டும் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். இது நீங்கள் இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் உருவாக்கும். இதனால் உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் என அனைத்தும் கிடைக்கும்.

மேலும் படிக்க – தமிழக அரசு பட்ஜெட் வெளியிட்ட பின் நாம் எப்படி செயல்பட வேண்டும்?

நடைபயிற்சி செய்யுங்கள்

நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு தினமும் போதுமான அளவு உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். ஆனால் நாம் இருக்கும் வாழ்க்கை முறைகளில் ஒரு சிலருக்கு இது போன்ற செயல்கள் கடினமாக இருக்கலாம். அதனால் அவர்கள் முடிந்தவரை 30 நிமிடங்கள் தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். இது உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.

எல்லா உணவுகளிலும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்

நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் எல்லா உணவுகளிலும் முடிந்தவரை அதிக அளவிலான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அது மாமிசமாக இருந்தாலும் சரி, தின்பண்டமாக இருந்தாலும் சரி.

மேலும் படிக்க – மாதக் கடைசி வீட்டுக்கு புது பட்ஜெட் ரெடி பண்ணியாச்சா

நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் தேவை

இரவில் அதிக நேரம் கண் விழித்திருப்பது என்பது பேஷனாக மாறி வருகிறது. ஆனால் அதன் மூலமாக உங்கள் எதிர்காலம் பெரிதாக பாதிப்படையும். எனவே முடிந்தவரை இரவு நேரங்களில் சரியாக உறங்கி விடுங்கள். ஒரு நாளைக்கு நமக்கு 8 மணி நேரமாவது உறக்கம் தேவை. இதை கருத்தில் கொண்டு இரவில் உறக்கத்தை மேற்கொண்டு அதிகாலையில் விழித்தெழுங்கள். உங்கள் நாள் எவ்வளவு உற்சாகமாக செல்கிறது என்பதை நீங்களே பார்க்கலாம்.

இவை அனைத்தையும் சரியாக கடைப்பிடித்து செய்வதன் மூலம் நீங்கள் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைக்குள் நுழையலாம். எனவே இதன் மூலமாக உங்கள் குழந்தைகளும் இதை பின்தொடர்ந்து அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன