விராட் கோலி அனுஷ்கா ஷர்மாவின் க்யூட் மெசேஜ்..!

  • by
cute message about corona by virat kohli and anushka sharma

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் வீட்டை விட்டு வெளியேறாமல் தங்கள் குடும்பத்துடன் அவர்களின் நாட்களை கழித்து வருகிறார்கள். இப்படி ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் அனுபவங்களையும், தாங்கள் சொல்ல நினைக்கும் செய்திகளையும் இணையதளத்தில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்கள். அப்படி இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி அவர்கள் மற்றும் அவரின் மனைவி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா இருவரும் மக்கள் மற்றும் மருத்துவர்களை ஊக்கமளிக்கும் வகையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

விளையாட்டும் சினிமாவும்

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் வெவ்வேறு துறையைச் சார்ந்தவர்கள், இருந்தாலும் இருவரின் மனது ஒன்றிணைந்து இவர்களுக்கு இடையே இருக்கும் அனைத்து வேறுபாடுகளையும் துறந்து முழுமையான காதல் பரிமாற்றத்தில் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். இத்தாலியில் தென்பகுதியில் உள்ள மெலனின் என்ற கிராமத்தில் இவர்கள் 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சினைகளும் இல்லாமல் எப்போதும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

மேலும் படிக்க – சீயான் விக்ரமுக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து..!

இணையதளம்

ஊரடங்கு அமல்படுத்திய நாள் முதல் இன்றுவரை அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலி அவர்கள் தாங்கள் செய்யும் செயல்களையும் மற்றும் தாங்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இணைய தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். கடந்த வாரத்தில் நகைச்சுவையாக ஒரு சில பதிவை இவர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்கள், அது இந்தியா முழுவதும் ட்ரெண்டிங் ஆனது. அதேபோல் இப்போது அனைத்து துறைகளுக்கும் நன்றியை தெரிவித்து ஒரு பதிவை இவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

நன்றியை தெரிவித்தார்கள்

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா அருகருகே அமர்ந்து கொண்டு ஊரடங்கு சமயங்களில் மக்களுக்கு உதவியாக இருக்கும் துப்பரவு பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்ற அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்கள். அதைத் தவிர்த்து தங்களது உயிரை பணையம் வைத்து சாலைகளில் சுற்றித்திரியும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் காவல் அதிகாரிகளுக்கும் இவர்கள் நன்றி தெரிவித்தார்கள். இவர்கள் செய்யும் தியாகத்தை பாராட்டி இவர்களுக்கு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா காணொளி மூலமாக மக்களிடம் கேட்டு கொண்டார்கள்.

யு என் அகடமி

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் சேர்ந்து யு என் அகடமியில் இணையம் மூலமாக வகுப்புகளை எடுத்து வருகிறார்கள். கனவு, கடின உழைப்பு மற்றும் ஊக்குவிக்கும் கதைகள் போன்ற பிரிவில் இவர்கள் மாணவர்களுக்கு வகுப்புகளை இணையம் மூலமாக எடுக்கிறார்கள். இதைப் பற்றி பேசிய இருவரும் வகுப்புகளை எடுப்பது சற்று கடினமாக இருக்கிறது, இருந்தாலும் மற்றவர்களுக்கு உதவுவதில் கிடைக்கும் திருப்தி எங்களை மேலும் முதிர்ச்சி அடைய வைக்கிறது என்று கூறியிருந்தார். விராத் கோலி மாநில கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவரை அணியில் எடுக்காதற்க்காக இரவு முழுவதும் அழுத கதையைப் பற்றியும் கூறியிருந்தார். அதேபோல் எல்லோரும் ஏதாவது ஒரு கட்டத்தில் உதவிகள் இல்லாமல் தவிப்பார்கள், அதை நேர்மையுடன் யார் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களே முழுமையான வெற்றி அடைவார்கள் என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க – நடிகர் வடிவேலுவின் உருக்கமான பாடல்..!

காதல் வாழ்க்கை

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் தங்கள் காதல் வாழ்க்கையை அற்புதமாக வாழ்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து, எல்லா கஷ்டத்தையும் கடக்க இவர்களின் அன்பு உதவுகிறது. எனவே மக்கள் அனைவரும் வீட்டில் உள்ளவர்களை அன்புடன் மற்றும் அவர்கள் செய்யும் செயல்களைப் பாராட்டி வாழ வேண்டும் என விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் கூறினார்கள். இவர்கள் வாழ்க்கையில் ஏராளமான ஏற்றம் இறக்கம் இருந்தது. இருந்தும் ஒருவருக்கு ஒருவர் செய்த உதவியின் மூலமாக அனைத்து பிரச்சினைகளில் இருந்து வெளிவந்து இப்போது நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள்.

எனவே வீட்டில் இருக்கும் அனைத்து தம்பதியினர்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அவர்கள் மனநிலையை நன்கு அறிந்து எல்லோரும் அன்பை மட்டுமே பரிமாறவேண்டும் என்பது தான் அனைத்து விதமான தம்பதியர்களின் கனவு. எனவே ஈகோ போன்ற பிரச்சினைகளை முழுமையாக தவிர்த்து உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் மேல் அன்பை செலுத்துங்கள். நாம் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பார்க்கப்படும் கனவு காதல் வாழ்க்கையைப் போல் உங்கள் வாழ்க்கையையும் வாழுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன