வெள்ளரிக்காய் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது..!

  • by
cucumber helps in building good immune system

கோடைக்காலம் வந்தாலே ஒருசில உணவுகளை நாம் அதிகமாக எடுத்துக் கொள்வோம். இதற்கு காரணம் கோடை காலங்களில் ஏற்படும் தொண்டை மற்றும் உடல் வறட்சிதான். அப்படிப்பட்ட சமயங்களில் நாம் அதிகளவில் குளிர்ச்சி உடைய உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்வோம். அதில் குறைந்த விலையில் அதிக குளிர்ச்சியை தரும் காய் வகை தான் இந்த வெள்ளரிக்காய்.

ஊட்டச்சத்துக்கள்

வெள்ளரிக்காயில் அதிக அளவில் நீர் சக்தி இருந்தாலும் அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகான், குளோரின் போன்ற ஏராளமான சத்துக்கள் வெள்ளரிக்காயில் அடங்கியுள்ளது. இது அனைத்திற்கும் மேலாக இதிலிருக்கும் நீராகாரம் உங்கள் உடல் மற்றும் சருமத்தை வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்கிறது.

மேலும் படிக்க – வீட்டிலுள்ள எளிய மூலிகையில் எல்லாம் இருக்கு

நோய் எதிர்ப்பு சக்தி

வெள்ளரிக்காயில் பொட்டாஷியம் அதிகமாக இருப்பதினால் உங்கள் உடலில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதன் மூலமாக உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதை தவிர்த்து புகைபிடிப்பது மூலமாக உங்கள் உடல் மற்றும் உடல் பாகங்கள் பெரிதாக பாதிக்கும் இதை தடுத்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க வெள்ளரிக்காய் உதவுகிறது.

வலி நிவாரணம்

உடல்வலி, மூட்டுவலி, தலைவலி போன்ற அனைத்தையும் குறைக்கும் தன்மை வெள்ளரிக்காய்க்கு உண்டு. இதை தவிர்த்து உங்கள் மூளையின் ஆற்றலை அதிகரித்து மூளைக்குத் தேவையான சக்தியையும் வெள்ளரிக்காய் தருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உடல் வீக்கம் மற்றும் வீக்க நோய்கள் அனைத்தயும் வெள்ளரிக்காய் போக்கும் என நிரூபணமாகியுள்ளது.

மேலும் படிக்க – மஞ்சள், வேப்பிலை கலந்த உப்பு நீரை வீட்டைச் சுற்றி தெளியுங்கள்.‌.!

நார்சத்தின் தன்மை

வெள்ளரிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதினால் உங்கள் உடலில் உள்ள பித்த நோய்கள் அனைத்தையும் போக்கி சிறுநீரக கோளாறை சரி செய்கிறது. இதைத் தவிர்த்து நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள்  வெள்ளரிக்காயை சாப்பிட்டு நல்ல நிலைக்கு திரும்பலாம்.

இது அனைத்திற்கும் மேலாக வெள்ளரிக்காய் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு உணவுகள் சாப்பிடும் சமயத்தில் வெள்ளரிக்காயை அதிகமாக பயன்படுத்துங்கள். இதை சாலட்டாக அல்லது மாலை சிற்றுண்டியாகும் சாப்பிட்டு பயன் பெறலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன