வேண்டியதை தரும் கல் உப்பு பயன்படுத்துங்கள்

  • by

வேண்டியதை தரும் கல் உப்பு நினைத்தைப்  பெற கல் உப்பு பரிகாரம் பயன்படுத்துங்கள். கல் உப்பு லட்சுமி வாசம் செய்யும் இடம் ஆகையால் அதனை நாம் பயன்படுத்தும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். கல் உப்பை சிதறவிடக்கூடாது. 

உப்பை யாருக்கும் கடனாக கொடுக்க கூடாது. செவ்வாய், வெள்ளி உப்பு வாங்குவதால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும். உப்பு உடல் ஆரோக்கியத்துக்கும் மன மகிழ்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுக்கின்றது. 

உப்பு உடலில்  ரத்தக்கட்டு ஏற்படும் பொழுது  ஒத்தடம் கொடுக்கச் செய்தால் அது  நிவாரணம் கொடுக்கும். 

மேலும் படிக்க – திருப்பதி திருமலையின் சிறப்புகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

பாசிட்டிவ்  தன்மை: 

உப்பு நேர்மறை சக்தியை அதிகரிக்கச் செய்யும். தேவைப்படும் செல்வத்தை பெருகச்  செய்யும். உப்பு வைத்து நாம் செய்யும் பூஜைகள் அனைத்தும் நல்ல பலன் தரும். உப்பு வைத்து விளக்கேற்றுவது சிறப்பான பலனை கொடுக்கும் நாம் நினைத்தை நிறைவேற்றிக் கொடுக்கும். 

வீட்டில் திருஷ்டி கழிக்க ஒரு கைப்பிடி உப்பு எடுத்து இரு பக்கங்களும் திருஷ்டி சுத்தி ஓடும் நீரில் விடுவார்கள்.  நினைத்தது நிறைவேற தினமும் காலையில் வெள்ளைப் பேப்பரில் கொஞ்சம் உப்பு வைத்து நினைத்தது நடந்து போல் உணர்வு பூர்வ எண்ணிவர பத்து நாட்களில் மாற்றம் வரும் நினைத்தது நடப்பதற்கான அறிகுறிகள் தெரியும். 

பாசீடிவ் எண்ணத்தை அதிகரிக்கும் உப்பு:

உப்பை கைப்பிடி எடுத்து தினமும் காலையில் சூரியனைப் பார்த்து நினைத்தது நடந்தாக எண்ணி நன்றி கூறிவர நிச்சயம் நடக்கும். அத்துடன் உப்பை குழிக்கும் நீரில் இட்டு குளித்து வந்தால் உடலில் உள்ள தீய எதிர்சக்திகள் நம்மை விட்டு உடனடியாக அகலும். 

வெள்ளி கிழமைகளில் இரவு 8 மணி முதல் 8.30 மணிக்கு உப்பு பாக்கெட் வாங்கி வீட்டில் அடுக்கி வைக்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து ஒரு வருடம் அதாவது 52 வாரம்  சேகரித்த உப்புகளை கோவில் மற்றும் அன்னதானம் செய்யலாம். தொடர்ந்து 52 வாரம் உப்பு பாக்கெட்டுகளை சேகரித்து அடுக்கி வைக்கும் பொழுது உப்பு பெருகுவது போல் வீட்டில் செல்வம் பெருகும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். 

திருஷ்டி ஈர்க்கும் உப்பு:

ஒரு கைப்பிடி உப்பினை பேப்பரில் வைத்து அதனை பொட்டலமாக்கி பர்சில் வைத்து வந்தால் செல்வம்  பெருகும். நெகடீவ் எனர்ஜி வீட்டில் இருக்கும் பொழுது வீட்டில் நான்கு மூளையிலும் உப்பை வைத்தால் வீட்டை விட்டு உடனடியாக வெளியேறும். 

மேலும் படிக்க – ஸ்ரீ ராம ஜெயத்தின் சிறப்பு..!

உப்புக்கு திருஷ்டி ஈர்க்கும் சக்தி அதிகம். உப்பை கையில் வைத்து எது உணர்வு பூர்வமாக நினைத்தாலும் நடக்கும். நினைத்த முடித்தப் பின்  ஓடும் நீரில் உப்பை போட வேண்டும். உப்பை பேப்பரில் வைத்து தலையனை அடியில் வைத்து தூங்கும் பொழுது கெட்ட கனவுகள் வராது. 

உப்பு முறையாக பயன்படுத்தும் பொழுது கடன் தொல்லைகள் நீங்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன