கொரோனா வைரஸ் பற்றிய கிரேசி ஃபேக்ட்..!

  • by
crazy facts about corona virus

நமது உலகில் கொரோனா வைரஸ் தோன்றியவுடன் அதை சுற்றி ஏராளமான ஆச்சரியமூட்டும் கருத்துக்கள் உருவாகின. இது போன்ற கருத்துக்களில் நம்பகத்தன்மை இல்லை என்றாலும் அதை ஆழ்ந்து கவனிக்கும் போது ஒருவேளை இது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் நமக்குள் எழும். அப்படி உலக நாடுகளில் இருக்கும் மிகப்பிரபலம் வாய்ந்த ஆராய்ச்சியாளர்கள் மூலமாக எழுப்பப்பட்ட சந்தேகங்கள் மற்றும் பத்திரிக்கையாளர் அல்லது சமூக ஆர்வலர்கள் மூலமாக கேட்கப்பட்ட கேள்விகள் என ஆச்சரியமூட்டும் உண்மைகளை இங்கே காணலாம்.

கொரோனாவுக்கு பின்னால் அமெரிக்கா

கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவை தாக்க தொடங்கியவுடன் ரஷ்யாவில் உள்ள ஒரு பிரபல செய்தி தொலைக்காட்சி இந்த வைரஸ் பரப்புவதற்கு முழு காரணம் அமெரிக்கா என்றது. மூன்றாம் உலகப்போரை மிகத் தந்திரமான முறையில் அமெரிக்கா தொடங்கிவிட்டது என்ற ஏராளமான குற்றங்களை சாட்டினார்கள். ஆனால் இப்போது இந்த வைரஸினால் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்காதான்.

மேலும் படிக்க – பாசிட்டிவிட்டியை எப்படி பகிர்வது..!

ஜான் ஹாப்கின்ஸ்

சரியாக 2019 அக்டோபர் மாதம் பில் கேட்ஸ் அவர்கள் ஜான் ஹாப்கின்ஸ் சுகாதார பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து ஓர் விஷக் கொல்லி வைரஸிற்கான மருந்தை கண்டுபிடிக்கும் திட்டத்தை செயல்படுத்தினார். சரியாக இரண்டு மாதத்திற்கு பிறகு இது போன்ற வைரஸ், எதற்கான மருந்துகளை இவர்கள் கண்டு பிடித்தார்கள் அதே வகை வைரஸ் ஒன்று உருவானது. இதைப்பற்றி ஜான் ஹாப்கின்ஸ் விசாரித்தபோது அவர் ஆதாரம் இல்லாமல் எதையும் கூற கூடாது என்று பதிலளிக்க மறுத்துவிட்டார்.

5ஜி இன்டர்நெட்

சீனாவில் 5ஜி இன்டர்நெட் பயன்பாட்டுக்கு வந்த ஒரு சில நகரங்களில் வூகான் நகரமும் ஒன்று. இந்த சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் சீனாவில் மனிதர்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உள்ளது. அதை தவிர்த்து கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்தது என்றார்கள். ஆனால் 2005 நடத்தப்பட்ட ஆய்வில் 5ஜி இன்டர்நெட் மனிதர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்று நிரூபணமாகி உள்ளது. அதை தவிர்த்து சீனாவில் மட்டும் 16 நகரங்களில் இந்த 5ஜி சேவை இருக்கிறது, ஆனால் வூகான் நகரம் மட்டுமே அதிக அளவில் பாதித்தது.

வூகான் வைரஸ் நிலையம்

வூகான் நகரில் வைரஸை பற்றிய ஆராய்ச்சிகளை நடத்தும் ஆராய்ச்சிக்கூடம் ஒன்று இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பாக இதிலிருந்துதான் சார்ஸ் வைரஸ் (அதாவது கொரோனா வைரஸின் முந்தைய முந்தைய நிலை) இந்த ஆய்வுக் கூடத்திலிருந்து இரண்டு முறை தப்பித்து உள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய உடனே சீன அதிபர் ஜீ ஜின்பிங் இந்த ஆய்வுக் கூடத்தை முழுமையாக அடைக்கும்படி கேட்டுக்கொண்டார். எனவே கொரோனா வைரஸ் இந்தக் கூடத்திலிருந்து வெளியாகியிருக்கும் என்று எல்லோரும் சந்தேகிக்கும்படி இந்த செயல் நிகழ்ந்துள்ளது.

கனட ஆய்வுக்கூடம்

கனடா ஆய்வுக்கூடத்தில் ஜஸ்டின் என்பவர் கொரோனா வைரஸ் போன்ற ஒரு வைரஸை உருவாக்கி அதன் மூலமாக ஆய்வுகளை செய்து வந்துள்ளார். இங்கு பணிபுரிந்த இரண்டு சீனர்களை திடீரென்று கனடா அரசு வேலையை விட்டு நிறுத்தியது. மக்கள் மற்றும் ஊடக பார்வையில் இந்த இரண்டு சீனர்கள் தான் கொரோனா வைரஸை கனட ஆய்வுக் கூடத்திலிருந்து திருடி சீனாவுக்கு எடுத்து சென்றார்கள் என்றும், மற்றும் இவர்கள் இருவரும் சீனாவில் உளவாளிகள் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுவரை எது உண்மை என்று யாராலும் கணிக்க முடியவில்லை.

எரிகல்லின் தாக்கம்

அக்டோபர் 2019ஆம் ஆண்டு வடகிழக்கு சீனாவில் எரிகல் ஒன்று விழுந்தது. வேற்றுகிரகத்தில் உண்டாகிய கொரோனா போன்ற கொடிய வாரிசை பூமிக்கு இந்த எரிகல் கொண்டுவந்துள்ளது என்று பலரும் நம்பி வந்தார்கள். ஆனால் இதற்கான விளக்கத்தை சீன அரசு தெளிவு படுத்தியது, ஏனென்றால் சாதாரண வெப்ப நிலையை விட ஆயிரம் மடங்கு அதிக வெப்பநிலை கொண்டதுதான் எரிக்கல். எனவே இதுபோன்ற உஷ்ணம் அதிகம் உள்ள பகுதிகளில் உயிரினங்களே உயிர் வாழாது, அப்படியிருக்கையில் வைரஸ் எப்படி உயிர் வாழும் என்ற கேள்விகளை எழுப்பினார்கள்.

வவ்வால் சூப்

கொரோனா வைரஸ் பரவ தொடங்கியவுடன் எல்லோரும் ஒரு பெண்மணியை காரணம் காட்டினார்கள். இவர் வவ்வால் சூப்பை குடித்து ஒரு காணொளியை இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். எனவே இந்த வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான காரணம் இந்த பெண்மணி தான் என்று எல்லோரும் குற்றம் சாட்டினார்கள். இதனால் சீன அரசு இந்தப் பெண்மணியை வலுக்கட்டயமாக மன்னிப்பு கேட்கும்படி கேட்டுக் கொண்டார்கள். அவரும் 2016 ஆம் ஆண்டு பசுபிக் பெருங்கடலில் இருக்கும் ஒரு தீவில் அமைந்துள்ள பாலாவ் என்ற சிறு நகரத்தில் இந்த வவ்வால் சூப்பை குடித்ததற்காக உலகம் முழுக்க மன்னிப்பு கேட்டார். இவர் இன்று வரை எந்த ஒரு நோய் தொற்றினாலும் பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாக இருக்கிறார்.

மேலும் படிக்க – பழந்தமிழர்களின் முதுமக்கள் தாழி பற்றி உங்களுக்கு தெரியுமா???

பரிணாம வளர்ச்சி பெற்ற எச்ஐவி வைரஸ்

தாங்கள் செய்யும் ஆய்வுகளை உலக மக்களுக்கு சேர்ப்பதற்காக ஏராளமான இணையதளங்கள் இருக்கின்றன. அதில் ஒரு தளத்தில் இந்தியாவில் எச்ஐவி வைரஸை பற்றி செய்யப்பட்ட ஆய்வில் அதன் அடுத்த நிலைதான் இந்த கொரோனா வைரஸ் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதை தவிர்த்து எச்ஐவி வைரஸை மிகக் கொடிய வைரசால் மாற்றும் ஆராய்ச்சிகளும் இவர்கள் செய்து அந்த ஆராய்ச்சியை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இது இந்தியாவில் செய்யப்பட்டது என்பதை தவிர்த்து வேறு எந்த ஆதாரமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

இது அனைத்திற்கும் மேலாக மெக்சிக்கன் மொழியில் கொரோனா என்றால் கிரீடம் என்ற பொருள். எனவே மெக்சிகோவில் உருவான கொரோனா பீர் மக்கள் முழுமையாக தவிர்த்து வந்தார்கள். ஒருவேளை இதன் மூலமாக இந்த வைரஸ் நமக்கு பரவி விடுமோ என்ற அச்சத்தில் இதுபோன்ற நம்பகத்தன்மை இல்லாத செயல்களையும் மக்கள் செய்தார்கள். இதனால் இதன் ஏற்றுமதி குறைந்து இந்த நிறுவனம் மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன