காதலர்களிடம் இருக்க வேண்டிய பொறுப்புணர்வு..!

couples should behave with this responsibility

காதலர் தினம் நெருங்கிக் கொண்டு இருக்கும் நிலையில் பல காதலர்கள் காதலர் தினத்தன்று புது விதமாக என்ன செய்யலாம் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். இது போன்ற எண்ணங்கள் சில சமயங்களில் மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கும். அது என்ன பாதிப்பு என்று இதை படிக்கும் அனைத்து காதலர்களும் உணர்ந்திருப்பார்கள். ஆம் ஒரு நாள் ஒரு சில வினாடிகள் தான் என்று தங்கள் கட்டுப்பாடுகளை தகர்த்து காதல் என்று நினைத்து சில தவறான செயல்களில் ஈடுபடும் எண்ணங்கள் இருந்தால் உடனே மறுபரிசீலனை செய்து உங்கள் காதலர் தினத்தை எல்லோரிடமும் வெளிப்படையாக  பகிரும் படியான முதிர்ச்சி அடைந்த காதலராக காதலர் தினத்தை கொண்டாடுங்கள்.

உறவு என்பது விளையாட்டல்ல

காதலில் ஈடுபடும் ஆண் மற்றும் பெண் இருவரும் பொறுப்புடன் இருக்கிறார்களா என்பதை அறிவதற்கான பதிவு இது. காதல் ஓர் அற்புதமான உணர்வு, இதற்கு ஈடு இணை இல்லை. உறவுகளில் சிறந்தது காதல் என்று சொல்லுபவர்கள் உண்மையில் காதலை புனிதமான உணர்வு என்று நம்பினாள் உங்கள் காதலுக்கு என்று சில விதிகளையும், கட்டுப்பாடுகளையும் வைத்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க – காதல் கைகூட இந்த தாந்தீரிகம் செய்யுங்க..!

பதினெட்டு வயதை கடந்தவுடன் காதலில் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற எண்ணம் கொண்டவராக இருந்தால் நிச்சயம் உங்கள் காதலால் உங்கள் வாழ்க்கை பாதிப்படையும். இல்லையெனில் உங்கள் வெற்றியை இது தாமதப்படுத்தும். பதினெட்டு வயது நிரம்பிய ஒரு ஆண் அல்லது பெண் இருவருக்கும் போதுமான அளவு மனவலிமையும், சுயசிந்தனையும் இருக்கும் என்ற எண்ணத்தில் தான் இந்த வயதுக்கு உட்பட்டவர்களின் கருத்துக்களை மதிக்கிறார்கள். ஆனால் ஒரு சிலரோ தங்கள் வயதிற்கு ஏற்ப நடந்து கொள்ளாமல் சிறுபிள்ளைத்தனமாக ஒரு சில காரியங்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் இவர்கள் மட்டுமல்லாமல் இந்த வயதினர் அனைவரையும் தவறுதலாக பார்க்கப்படுகிறார்கள்.

உறவில் சமநிலை அவசியம்

உங்கள் காதலில் நீங்கள் பொறுப்புடன் இருக்க வேண்டுமென்றால் ஒரு முறைக்கு பலமுறை நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் யோசித்து செய்யுங்கள். உங்கள் காதலிக்கு ஒரு பரிசை வாங்குவது முதல் அவருக்காக நேரம் ஒதுக்குவது, அவருடன் என்ன உரையாடுவது என்பதை அனைத்தையும் தெளிவான புரிதலுடன் செய்யுங்கள். உறவில் ஒருவர் புத்திசாலியாக இருந்தால் போதும் அவர் மற்றொருவருக்கு தங்கள் எண்ணத்தை உணர்த்துங்கள்.

மேலும் படிக்க – கணவன் மனைவிக்கான காதல் பரிமாற்றம் இப்படி இருக்க வேண்டும்.!

ஆண்-பெண் உறவு மட்டுமல்லாமல் காதலில் காமம் என்பது இருந்துகொண்டே இருக்கும். பொதுவாகவே காதல் உணர்வு ஏற்படுவதற்கு காமமும் ஒரு காரணம். இதனால் காதலிதக்க தொடங்கிய சில நாட்களிலேயே இந்த உணர்வுக்கு இடம் கொடுக்கும் வகையில் சில செயல்களில் காதலர்கள் ஈடுபடுகிறார்கள். இது ஒன்றும் அவ்வளவு பெரிய குற்றமல்ல என்று இருந்தாலும். எப்போது இது எல்லைமீறி செல்கிறதோ அப்போதுதான் இது குற்றமாக மாறுகிறது. ஒரு சில நிமிடங்கள் கிடைக்கக்கூடிய சந்தோஷத்திற்காக நாம் எதைப் பற்றியும் யோசிக்காமல் நம்முடைய வாழ்க்கையில் வாழ்நாள் முழுவதும் மிகப்பெரிய குற்ற உணர்ச்சியை நாம் சுமக்க வழிவகுக்கும் இந்த காம உணர்வு. எனவே இதனால் பாதிப்புகள் இல்லை என்பவர்கள் அல்லது எதுவாக இருந்தாலும் என்னால் சமாளிக்க முடியும் என்ற உணர்வு கொண்டவர்கள் பலமுறை யோசித்து பின்பு தங்களின் எல்லை மீறி செல்லலாம்.

தெளிவான உறவே நிரந்தர உறவு

குற்ற உணர்ச்சி என்பது ஆண்களை விட பெண்களே அதிகமாக பாதிப்படைய செய்கிறது. இயல்பாகவே ஆண் ஒரே சமயத்தில் பல பெண்களின் மேல் ஈர்ப்பு கொள்கிறான். இதனால் குற்ற உணர்ச்சி என்பது ஆரம்பத்திலேயே அழிந்துவிடுகிறது. அதுவே ஒரு பெண் எப்போது தனது உடல் ரீதியான உறவுகளை ஆண்களின் மேல் வைத்துக் கொள்கிறார்களே அப்போதிலிருந்து தங்களின் ஆழ் மனதில் குற்ற உணர்ச்சி ஏற்படத் தொடங்குகிறது. அதிலும் காதல் பிரேக் அப்பாகி வேறு ஒருவரை காதலிக்கத் தொடங்கும் போது இந்த குற்ற உணர்ச்சி வலுவடைந்து தங்கள் வாழ்க்கையின் மேல் கவனத்தை செலுத்த முடியாமல் மன ரீதியாக பாதிப்படைகிறார்கள்.

மேலும் படிக்க – நட்புக்கு இலக்கணம் இவர்கள்தானுங்க, இருந்தா இவங்களைப் போல் இருக்கனும்.!

எனவே ஒரு ஆண் உறவில் ஒரு பெண்ணிடம் காதல் உறவில் ஈடுபட்டால் அந்த உறவை மதித்து அவர்களுக்கான தனி சுதந்திரத்தை அளியுங்கள். அதேசமயத்தில் எல்லாவற்றிற்கும் அவள் சரி சொல்வாள் என்ற எண்ணத்தைத் தவிர்த்து அவளுடன் ஆலோசனை கேளுங்கள். இப்படி ஒரு ஆணால் செய்ய முடியவில்லை என்றால் பெண்கள் அவர்களுடன் பாதுகாப்பாக இருங்கள். உறவின் ஆரம்பத்திலேயே ஒரு ஆண் சிறந்தவனா என்பது ஒரு பெண்ணுக்கு தெரியவரும் இதை அறிந்த இதுபோன்ற ஆண்களிடம் உடனடியாக உறவு மேற்கொள்ளாமல் பொறுத்திருந்து முடிவுகளை எடுப்பது நல்லது.

காதலிக்கும் பொழுது உங்களுக்கு எல்லாமே அற்புதமாக தெரியும். அந்த சமயங்களில் உங்கள் காதலை வெளிப்படுத்துவதற்காக நீங்கள் சில கிறுக்குத்தனமான செயல்களிலும் ஈடுபடுவீர்கள் எனவே இதுபோன்ற சமயங்களில் உடனடியான முடிவுகளை எடுக்காமல் சில மாதங்கள் காத்திருங்கள். அப்போதுதான் இது உண்மையான காதல என்பது உங்களுக்கு புரிய வரும். உறவுகளில் ஆரம்பத்தில் சில எதிர்பார்ப்புகள் இருப்பதினால் ஆண்கள் தங்கள் காதலிக்கு எல்லை மீறிய பரிசுகளை அளிப்பார்கள் இதனால் பெண்கள் உடனடியாக மயங்கி இது உண்மையான காதல் என்று தவறுதலாக எண்ணிக் கொள்கிறார்கள். எனவே நீங்கள் புத்திசாலியான பெண் என்றால் உறவை நன்கு ஆராய்ந்து அதன் பிறகு உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள். ஆண்-பெண் இருவரும் தங்கள் உறவில் எப்போதும் பொறுப்புடன் இருக்க வேண்டும், இதுதான் ஒரு சிறந்த வாழ்க்கையை உண்டாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன