கொரனோ தடுப்புக்கு மத்திய மாநில அரசு அறிவுரை

  • by

கொரானா அறிகுறியை எப்படி தெரிந்துகொள்வது? பாதுகாக்க என்னென்ன செய்யணும் இது போன்ற  சிக்கலான நேரத்தில் நாம் நமக்குள் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

கொரானா வைரஸ் அறிகுறிகளை, கண்டறிவது எப்படி என்பது பற்றிய விளக்கங்களை சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கின்றன. இந்திய சுகாதரத்துறை அறிவித்து அந்த தகவலை பகிர்ந்து கொண்டு பின்பற்றவும். பொது மக்கள் கூடும் இடங்களில் சுத்தம் சுகாதரம் அவசியம் ஆகும். 

கொள்ளும்  நோயல்ல:

முதலில், கொரானா, கொல்லும் நோய்தொற்றாக இருக்காது, அது தாக்கியதும் உயிர் போய்விடும் எனும் வதந்திகள் நம்ப வேண்டாம். கொரோனா , மரணம் விகிதம் வெறும் 3 விழுக்காடு தான் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது ஆகையால் இந்தியாவில் இதனை குணப்படுத்த ஆயுர்வேதம், சித்தா பல்வேறு மருந்துகளை தெரிவித்து வருகின்றது. 

மேலும் படிக்க: நச்சுகளில் இருந்து உடலை சுத்தப்படுத்த உதவும் உணவுகள்..!

காய்ச்சல், தொடர் இருமல், தும்மல், அதீத களைப்பு, வாந்தி, அல்லது வயிற்றுப்போக்கு ஆகியவை இருந்தால், அது கொரானா அறிகுறிகளாகும். உடல் ஆரோக்கியமாக இருக்க  நோய் எதிர்ப்பு என்பது அவசியம் ஆகும். 

கொரனோ அரசு அறிவுரை

கொரனோ இது  தொற்று:

கொரானா வைரஸ், மனிதரிடமிருந்து, மனிதருக்கு பரவுகிறது. கொரானா பாதித்த ஒருவரது எச்சில் அல்லது சளி மூலம், பரவ வாய்ப்பு உண்டு. வெளியில் சென்றுவந்தால் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். கண்கள், மூக்கு, வாய் ஆகியவற்றை அடிக்கடி தொடுவதை தவிர்க்க வேண்டும்.

ஒருவர் கொரானா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டால், அவருக்கு ஏற்பட்டிருக்கும் காய்ச்சல், மற்றும் அதீத களைப்பு குறைக்கப்பட்டு, பூரண உடல் நலத்தை நோக்கிய சிகிச்சை முன்னெடுக்கப்படுகிறது. இது அவரை  குணபடுத்த எடுக்கப்படும் நடவடிக்கை ஆகும். 

மேலும் படிக்க: கொரனோவை தடுக்கும் நோய் எதிர்ப்பு மருந்துகள்!

கொரானா பாதிப்பு அறிகுறியுடன் அனுமதிக்கப்படுவோர் தனி வார்டு, நல்ல காற்றோட்டம் கொண்டதாக பரமாரிக்கப்படுகிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு குணபடுத்தமுடியும்.
அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். முடிந்த வரை, முழங்கை வரை, கைகளை கழுவ வேண்டும்.

கொரானா அறிகுறி அறிந்தால், நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கைகளை கழுவதும்போது, வெறுமனே, குழாய் நீரில் நீட்டிவிட்டு எடுத்துவிடக் கூடாது. சோப் போட்டு, நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.

கொரனோ அரசு அறிவுரை

கொரனா அறிகுறிக்கு அரசை அனுகுக:

கொரானா அறிகுறி இருந்தால், மத்திய சுகாதார அமைச்சகத்தின் 24 மணி நேர உதவி எண்ணான, 01123978046 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் வசிப்பவராக இருந்தால், 104 இலவச மருத்துவ சேவை எண்ணை பயன்படுத்தி தகவல் அளிக்கலாம்.

இதுதவிர 044-29510400, 044-29510500, அல்லது 9444340496, 8754448477 என்ற எண்களை தொடர்பு கொண்டு தகவல் தரலாம்.

உங்களை பத்திரமாக அழைத்துச் சென்று, உரிய சிகிச்சை அளித்து, மத்திய, மாநில அரசுகளின் சுகதாரத்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரனோ அரசு அறிவுரை

நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகரித்தல்: 

உடலில் அதிக   நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். உடலி; அது இருந்தால் நோய் தொற்று அவ்வளவு எளிதில் நம்மை தாக்காது. தினமும் நெல்லிக்காய்,  பேரிட்ச்சை, லவங்கம் சூஸ், இஞ்சி சாறு தேன் கலந்து குடித்தல், மிளகு ரசம் கலந்து சாப்பிடுதல், சின்ன வெங்காயம் விசத்தை முறிக்கும் இதனை உணவில் கலந்து சாப்பிடுதல் வாரம் ஒரு முறை வேப்பிலை ஒரு கைப்பிடி அரைத்து உருண்டை சாப்பிட்டு வருதல் உடலில் நோய்  எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும் படிக்க: மிளகு ரசம் கரோனாவை கொள்ளுமா..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன