ரித்திக் ரோஷன் குடும்பத்தை ஒன்றிணைத்த கொரோனா..!

  • by
corona virus united hirthik roshan and his family

உலகில் கொரோனா வைரஸால் ஏராளமான குடும்பம் அழிந்து வந்தாலும் ஒரு சிலர் வாழ்க்கையில் இதனால் சில நன்மைகளும் நடக்கிறது. இப்படிதான் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக பிரிந்திருந்த ரித்திக் மற்றும் அவரின் முன்னாள் மனைவி சூசன் இருவரையும் தற்காலிகமாக ஒன்றிணைத்தது இந்த கொரோனா. நாடு முழுவதும் முடக்கப்படும் செய்தியை கேட்டவுடன் தங்கள் பிள்ளைகளை விட்டு தாய் தந்தை பிரிந்து இருக்ககூடாது என்ற முற்போக்கு சிந்தனையால் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசன் அவரிடம் ஒன்றாக தன் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

ரித்திக் மற்றும் சூசன்

தன்னுடைய சிறுவயது தோழியான சூசனை ரித்திக் ரோஷன் 20 டிசம்பர் 2000 ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் பிறந்தார்கள் இதைத்தொடர்ந்து 2013ஆம் ஆண்டு அவர்கள் விவாகரத்து வாங்குவதற்கான முயற்சிகளை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு இவர்களுக்கு விவாகரத்து கிடைத்தது. மார்ச் இறுதியில் இவரின் முதல் மகனின் பதினான்காவது வயது பிறந்தநாளை கொண்டாடினார்.

மேலும் படிக்க – நாம் பார்க்க மரந்து சிறந்த திரைப்படங்கள்..!

காணொளியில் வாழ்த்து

ரியான் என்ற இவரின் முதல் மகன் பிறந்தநாளை வெளியே சென்று கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதற்காக நெருங்கிய உறவினர்கள் அனைவருக்கும் காணொளி மூலமாக அழைப்புகளை விடுவித்தார். எனவே அனைவரும் ஒன்றாக காணொளி மூலமாக ரியான் தனது பிறந்தநாள் கேக்கை வெட்டுவதை பார்த்தார்கள். இதன் மூலமாக சமூகத்துடன் ஒன்றாக இணைந்து கொண்டாட்டங்களை மேற்கொள்ளாமல் எப்படி தொலைவிலிருந்து கொண்டாடுவது என்பதை ரித்திக் ரோஷன் அனைவருக்கும் தெரியப் படுத்தினார். இதைத்தொடர்ந்து தான் விவாகரத்து செய்யப்பட்ட சூசன், ரித்திக் ரோஷன் வீட்டிற்கு வந்துள்ளார்.

உறவுகள் அவசியம்

தன் இரண்டு மகன்களின் எதிர்காலத்தை எண்ணி இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் உதவும் வகையில் சூசன் ரித்திக் ரோஷன் உடன் இணைந்து இந்த முடக்கத்தை கடந்த வருகிறார். இதைத்தொடர்ந்து ரித்திக் ரோஷன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சூசன் செய்த இந்த காரியத்திற்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க – பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுனுக்கு நடந்த விபரீதம்..!

சமீபத்தில் ரித்திக் மக்களுக்கு எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற காணொளி ஒன்றை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து இதுபோன்ற நெகிழ்ச்சியான சம்பவத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மக்களின் மனநிலையை புத்துணர்ச்சியாக வைக்கும் ஒருசில செயல்களை ரித்திக் ரோஷன் செய்து வருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன