கோடைக்காலத்தில் கொரோனாவின் தாக்கம் குறையும்..!

  • by
corona virus spread will decrease during summer season

வெப்பமான சூழ்நிலையில் எந்த ஒரு வைரஸ் தொற்றுகலாலும் நம்முடைய சுற்றுச்சூழலில் உயிர் வாழமுடியாது என ஏராளமான ஆராய்ச்சிகள் கூறி வந்தாலும் இந்த கொரோனா வைரஸ் கோடை காலங்கள் மற்றும் வெப்பமான சூழலில் உயிர் வாழுமா அல்லது இதன் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதைப் பற்றி தெளிவாக இந்த பதிவில் காணலாம்.

வைரஸ் தொற்றுக்கள்

பொதுவாக குளிர்காலத்தில் தான் இது போன்ற வைரஸ் தொற்றுக்கள் அதிக அளவில் பரவி மக்களை பெரிதும் பாதிக்கும். காய்ச்சல், ஜலதோஷம், இருமல் போன்ற உடல் உபாதைகள் குளிர்காலங்களில் மக்களை தாக்குகிறது. ஆனால் இதுபோன்ற பிரச்சினைகள் கோடை காலம் வந்தால் முற்றிலுமாக முடங்கிவிடுகிறது. இதனால் ஆராய்ச்சியாளர்களின் அடிப்படையில் குளிர் அதிகமாக இருக்கும் சூழலில் வைரஸின் வீரியம் மற்றும் அதன் உயிர் வாழும் காலம் என இரண்டும் அதிகமாக இருக்கிறது. இதில் கோடை காலம் வரும் போது இதன் தாக்குதல் மற்றும் இதன் வளர்ச்சியில் ஏராளமான மாற்றங்கள் உண்டாகிறது என்கிறார்கள்.

மேலும் படிக்க – ஆச்சரியமளிக்கும் கொரோனாவுக்கான டிபி மருந்து..!

கொரோனா வைரஸ்

சீனாவில் குளிர் காலத்தில் உருவாகிய இந்த கொரோனா வைரஸ் படிப்படியாக இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கும் சென்றது. இதைத் தவிர்த்து இந்த நாடுகளில் இதன் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதற்குக் காரணம் அந்த நாட்டில் உள்ள தட்பவெப்ப சூழ்நிலை தான் என்று ஏராளமான ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். வைரஸ் பரவுவதற்கும் மற்றும் உயிர் வாழ்வதற்கு ஏற்ற காலம் இது போன்ற நாடுகளில் இருப்பதினால் இதன் தாக்குதல் அதிகரித்தது என்றார்கள்.

கோடைக்கால ஆரம்பம்

இந்தியா மட்டுமல்லாமல் ஆசியாவில் பல நாடுகளில் கோடை காலம் துவங்கி உள்ளது. இதன் மூலமாக இந்த வைரஸ் தொற்றின் தாக்குதல் குறையும் என ஏராளமானோர் எதிர்பார்க்கிறார்கள். கொரோனா வைரஸ் எப்படி குழந்தைகளை பெரிதாக பாதிக்காமல் இருக்கிறதோ அதேபோல் ஒரு சில நாடுகளில் இது சமூக தொற்றாக மாறாமல் இருக்கிறது. எனவே ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்றிக்கொள்ளும் இதன் வீரியம் குறைந்துள்ளது என்றார்கள். ஆனால் சீனாவிற்கு அருகிலுள்ள இஸ்ரேல், ஈரான் மற்றும் சவுத் கொரியா போன்ற நாடுகளிலும் இதன் தாக்குதல் அதிகரித்தது. ஆனால் இதன் தன்மையை உணர்ந்து ஜப்பான் போன்ற நாடுகள் இதை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்தது.

மேலும் படிக்க – கொரோனா பாதிப்பில் மூன்றாம் இடத்தில் இருக்கும் தமிழ்நாடு..!

வெப்பமான சூழல்

இன்றுவரை கொரோனா வைரஸ் வெப்பமான சூழலில் உயிர் வாழாது போன்ற ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை, இருந்தாலும் இதற்கு முன் தோன்றிய வைரஸ்கள் அனைத்தும் வெப்பத்தில் அழியும் தன்மை கொண்டது. எனவே இந்த வைரஸ் தாக்குப்பிடிக்கும் தன்மையை கொண்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். தென்னிந்தியாவில் ஏராளமான நகரங்கள் மிக அதிக அளவிலான வெப்பத்தை கொண்டது. இதன் சுற்றுச் சூழல்களில் கொரோனா வைரஸ் பரவாமல் இருந்தாலும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதால் இதன் தாக்குதல் அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருப்பதற்காக நாம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும் என ஏராளமானோர் நமக்கு அறிவுரை கூறியுள்ளார்கள். இதன் மூலமாக தொண்டையில் இருக்கும் கிருமிகள் அழியக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் கொரோனா வைரஸிற்க்கு எதிராக இதன் தாக்குதல் எந்த அளவிற்கு இருக்கும் என போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே இப்போது வரை சுகாதாரத்துறை நமக்கு அளித்துள்ள வழிமுறைகளை பின்தொடர்ந்து உங்களை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன