காலணிகள் மூலம் பரவும் கொரோனா வைரஸ்..!

  • by
corona virus is spreading through slippers

துபாயில் உள்ள அமெரிக்க நிறுவனம் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா வைரஸ் கிருமிகள் நாம் தினமும் அணியும் காலனி மூலமாக மக்களுக்கு பரவும் அபாயம் இருக்கிறது என்பது உறுதியானது. இதன் மூலமாக செய்யப்பட்ட ஆய்வில் மருத்துவரோ அல்லது மருத்துவமனைகளில் பணி செய்பவர்கள் பயன்படுத்தக்கூடிய காலணிகள் மூலமாக இந்த வைரஸ் எல்லா இடங்களுக்கும் பரவி உள்ளது. அதாவது மருத்துவமனையில் இருக்கும் மருந்தகம் பிறகு அவர்கள் பயன்படுத்தும் உடைமாற்றும் அறை என எல்லா இடத்திலும் இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது. ஆனால் மருத்துவர்கள் தங்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வதன் மூலமாகவும் மற்றும் அவ்வப்போது கைகளை கழுவுவது மூலமாகவும் இந்த வைரஸ் தொற்று அவர்களை தாக்காமல் இருந்துள்ளது.

காலணிகளில் உயிர் வாழும்

கொரோனா வைரஸ் என்பது நாம் அணியப்படும் காலனிகளில் கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு மேல் உயிர் வாழக்கூடியது. இதனால் மருத்துவமனைகளில் வேலை செய்யும் ஒருவரின் காலனியில் இந்த வைரஸ் தொற்று பரவி இருந்தால் அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் இந்த வைரசும் சென்றுகொண்டே இருக்கும். இதை தவிர்த்து அவர் கால்களை கைகளால் தொடும்போது அந்த வைரஸ் அவர்களையும் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே உங்கள் உடைகள் மற்றும் உபகரணங்களை எப்படி வீட்டிற்கு செல்வதற்கு முன் சுத்தப்படுத்துகிறீர்களே அதே போல் காலணிகளையும் மிகப் பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்யவேண்டும்.

மேலும் படிக்க – ஊரடங்க்கு மே 3-ம் தேதி வரை நீட்டிப்பு..!

பாதுகாப்பு அவசியம்

கொரோனா நோயாளிகளுடன் நாள் முழுவதும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இது போன்ற அபாயம் ஏற்படக்கூடும். அதைத் தவிர்த்து அவர்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ இந்த வைரஸ் தொற்றும் அவள் கால்களில் பயணித்தது. அதைத் தவிர்த்து அவர்கள் காலணிகள் மேல் மற்றவர்களின் காலணிகள் பட்டாலும் அந்த வைரஸ் தொற்று அதில் பரவிக் கொள்ளும். எனவே இது படிப்படியாக தொடர்ந்தால் இது சமூக தொற்றாக உருவெடுக்கும் எனவே மருத்துவமனைகளில் பணி புரிபவர்கள் ஒருமுறைக்கு பலமுறை தங்கள் காலணிகளை வீட்டிற்கு வருவதற்கு முன் சுத்தப்படுத்த வேண்டும். பின்பு அதன் மேல் கிருமி நாசினிகள் மற்றும் சோப்புகளால் செய்யப்பட்ட நீரை அதன்மேல் ஊற்றி சுத்தப்படுத்த வேண்டும்.

தடுக்கும் வழிகள்

இது போன்ற ஆபத்தான சூழல்களில் பயணம் செய்பவர்கள் உங்கள் காலணிகளை வீட்டிற்கு வெளியே வைத்து விடவேண்டும். பின்பு அதை முழுமையாக சுத்தப்படுத்தி வெயிலில் வைக்க வேண்டும். அடுத்த நாள் வெளியே செல்வதாக இருந்தால் வேறு ஒரு காலணிகளை அணிவது சிறந்தது. இதை சூழர்ச்சி முறையில் செய்ய வேண்டும். அதேபோல் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பாக வீட்டில் அணியப்படும் காலணிகளை அணியலாம். இதை மக்கள் அனைவரும் பின் தொடர வேண்டும், மருத்துவமனைகளில் மட்டும் தான் இதுபோன்ற பாதிப்புகள் நிகழுகிறது என்று அலட்சியமாக இல்லாமல் ஒவ்வொரு முறையும் வீட்டை விட்டு வெளியே சென்று வீடு திரும்புபவர்கள் இதை பின் தொடர வேண்டும்.

மேலும் படிக்க – வியாதிகளை தீர்க்கும் சக்தி கருஞ்சீரகத்திற்க்கு உண்டு..!

கொரோனா வைரஸ் தொற்றி இந்தியாவில் படிப்படியாக குறையும் நிலையில் இருக்கிறது. இதை மேலும் அதிகரிக்காமல் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எனவே நாம் சமூக இடைவெளியை பின்தொடர்ந்து நம்முடைய அன்றாட வாழ்க்கையை கடக்க வேண்டும். இந்த வைரஸ் தொற்று அழிவதற்கு இன்னும் 6 மாத காலம் ஆகும், எனவே எண்ணிக்கை குறைகிறது என்று அலட்சியமாக இல்லாமல் உங்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன