நோயாளிகளை மீண்டும் தாக்கும் கொரோனா வைரஸ்..!

  • by
corona virus is affecting the persons who have cured already

தென்கொரியாவில் கொரோனா வைரஸிலிருந்து முழுமையாக குணமடைந்த நோயாளிகளுக்கு மீண்டும் இந்த வைரஸ் தொற்று தாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் பெரிதளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று. ஆனால் இந்நாடு, இப்போது இந்த வைரஸ் தொற்றை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. ஆனால் அந்த 

மீண்டும் வரும் வைரஸ்

கொரேனா வைரஸ் தொற்றின் மூலமாக பாதிப்படைந்த இரண்டு நோயளிகளுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே இவர்களுக்கு சிகிச்சை அளித்து, ஏன் இவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று பரவி உள்ளது என்பதற்கான ஆராய்ச்சியை செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க – பிரசவத்தின் பொழுது முதுகுத்தண்டில் ஏன் ஊசி போடுகிறார்கள்..!

தென் கொரியா

தென்கொரியாவில் கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளார்கள். அதில் 6 ஆயிரத்து 700 பேருக்கு மேல் குணமடைந்து வீடு திரும்ப உள்ளார்கள். ஆனால் சமீபத்தில் குணமடைந்தவர்களுக்கு இந்த வைரஸ் தொற்றினால் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது என ஒரு சில நோயாளிகள் கூறிவருகிறார்கள். எனவே அவர்களை செய்யப்பட்ட ஆய்வில் மீண்டும் பாதிப்புக்குள்ளானவர்கள் அனைவரும் சீனாவிலிருந்து தென் கொரியாவிற்கு வந்தவர்கள். ஏராளமான மக்களை குணமாக்கி இந்த வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள தென்கொரியாவுக்கு இது மீண்டும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதிப்புகள் அதிகரிக்கலாம்

இதுவரை தென்கொரியாவில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளார்கள். இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த மகிழ்ச்சியில் இருக்கும் இவர்களுக்கு இந்த வைரஸ் மீண்டும் பேராபத்தை விளைவிக்கும் வகையில் இருக்கின்றன. எனவே இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பியவர்கள் தங்கள் உணவு முறைகளை சரியாக உட்கொள்ளாமல் உடல் பருமன் அடைந்துள்ளார்கள். இது போன்றவர்களை இந்த வைரஸ் தொற்று மீண்டும் பாதித்துள்ளது.

மேலும் படிக்க – கொரோனா பாதிக்கும் சூழ்நிலையில் தாய்ப்பால் கொடுக்கலாமா..!

கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்கு நாம் எப்படி ஆரோக்கியமான உணவுகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ள உணவுகளை உண்கிறோமோ அதேபோல் நீங்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவுடன் இது போன்ற உணவுகளை பின் தொடர வேண்டும். புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கங்களை மேற்கொண்டால் மீண்டும் இந்தக் கிருமிகள் உண்டாகுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே மற்ற நாடுகளில் நடக்கும் சம்பவங்களை பாடமாக எடுத்துக் கொண்டு உங்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன