தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வைரஸ் தொற்று..!

  • by
corona virus cases are increasing in tamilnadu

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இரண்டாம் இடத்தில் இருப்பது நமது தமிழ் நாடாகும். ஆரம்பத்தில் வைரஸ் தொற்றுக்கள் அதிக அளவில் பாதிக்காத மாநிலமாக இருந்த தமிழ்நாடு இப்போது கிட்டத்தட்ட ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட நோயாளிகளை கொண்டுள்ளது. இதில் நேற்று வரை கிட்டத்தட்ட 12 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதை தவிர்த்து கிட்டத்தட்ட 23 பேருக்கும் மேல் கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக குணமாகி வீடு திரும்பியுள்ளார். ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த இந்த நோய்த்தொற்று இப்போது தமிழகத்தில் குறைந்துள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 80 லிருந்து 100 பேருக்கு மேல் வரை பாதித்து வந்தார்கள், ஆனால் நேற்றைய நிலவரப்படி வெறும் 34 பேர் மட்டுமே இந்த தொற்று நோயால் பாதிப்படைந்துள்ளார்கள்.

குறையும் நோயாளிகள்

முதல் முதலில் இந்த தொற்று நமது அண்டை மாநிலமான கேரளாவில் பரவியது. ஆனால் இப்போது அவர்கள் கொரோனா நோயாளிகளை முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளார்கள், இதை அதிகரிக்காமல் பார்த்து வருகிறார்கள். இதை தமிழ்நாடும் பின் தொடர்ந்து இப்போது நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் தமிழக சுகாதாரத்துறை இருக்கிறது. எனவே ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் செய்தியாளர்கள் மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார்.

மேலும் படிக்க – மாதுளை பழத்தின் மகத்தான ஆரோக்கியம் இருக்கின்றது

பரிசோதனை செய்தவர்கள்

எந்த நாட்டில் நோயாளிகளை அதிகளவில் பரிசோதனை செய்கிறார்களோ அந்த நாட்டில் மட்டுமே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் நோயாளிகள் அதிகமாக இருக்கிறார்கள். இதனால் ஏற்படும் பயத்தை துறந்து பாதிக்கப்பட்டவர்களை மிக விரைவில் கண்டுபிடித்த பெருமை தமிழகத்திற்கு உண்டு. இதுவரை கிட்டத்தட்ட 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கொரோனா பரிசோதனை செய்துள்ளார்கள். இதில் ஆயிரத்து 200 பேர் மட்டுமே உறுதியாகியுள்ளார்கள். இதில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நோய்த்தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்கள் அனைவருமே ஏற்கனவே பரிசோதனை செய்து குணமடைந்தவர்கள் என்பதற்காக மேலும் ஒரு முறை பரிசோதிக்கப் பட்டவர்கள்.

சிகிச்சை பெற்றவர்கள்

தமிழக அரசு சரியான பாதுகாப்புகளை அனைத்து மருத்துவர்களும் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அளித்து வருகிறார்கள். ஏற்கனவே தமிழகத்தில் ஒரு மருத்துவர் இந்த நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்காக தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதை தவிர்த்து மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளின் அருகே வேலை செய்பவர்களின் பாதுகாப்பை கருதி அவர்களுக்கு தேவையான உபகரணங்களை அளித்து வருகிறது.

மேலும் படிக்க – சமூக சேவைகளால் எழுச்சிகாணும் மாநிலம்..!

தமிழகத்தில் இந்த நோய்த் தொற்று அதிகமாக பரவாமல் இருப்பதற்காக நாம் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த தவறை இதற்கு முன்பு செய்தவர்களினால்தான் இன்று நாம் இந்த அளவிற்கு பாதிப்படைந்துள்ளேம். எனவே இந்த கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருப்பதற்காக நாம் மிகவும் பாதுகாப்பாகவும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாழவேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன