கொரோனா வைரஸை உடம்புக்குள் நுழைய விடாமல் விரட்டும் பவளமல்லி!

  • by
Corona Virus Anti Medicine Pavalamalli

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுக்க பல நாடுகளில் பரவி உள்ளது. அதிலும் இந்தியாவில் இதன் தாக்குதல் உருவாகியுள்ளது. கேரளாவை சேர்ந்த 3 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பாண்டிச்சேரியில் இருக்கும் ஓர் இளைஞனுக்கு இந்த பாதிப்பு இருக்கலாம் என சந்தேகித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். எனவே இதன் பாதிப்பு நமக்கு அருகில் வந்துள்ளதால் இதில் இருந்து முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை காணலாம்.

கொரோனா வைரஸ் அறிகுறி

கொரோனா வைரஸ் ஒருவரை தாக்கிய பிறகு அவரின் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். அதைத்தொடர்ந்து 3 முதல் 4 நாட்களுக்கு தொண்டை எரிச்சல் இருக்கும். மூக்கில் நீர் ஒழுகுதல், நெஞ்சில் சளி என ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை தொடரும். இதன் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் நிமோனியா காய்ச்சல் உருவாகும், மூச்சு விடுவதற்கே பெரும்பாடுபடுவோம். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்வது நல்லது.

மேலும் படிக்க – வாழையின் வனப்பு சோலைபோல் உடலுக்கு தரும் செழிப்பு..!

அகத்தியர் சித்த வைத்தியம்

சளி, இருமல் போன்ற பிரச்சினைகளில் இருந்து உடனடியாக தீர்வு காண்பதற்கு நாம் பவளமல்லியை பயன்படுத்தலாம். அதற்கு அகத்தியர் சித்த வைத்தியம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

பவள மல்லி இலையை ஐந்திணை எடுத்து அதை சிறு துண்டுகளாக்கி 200 மில்லி தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவேண்டும். பிறகு அந்த தண்ணீர் 100 மில்லியை எட்டும் போது அதை எடுத்து அதனுள் மெளகு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தினமும் 3 வேளை தொடர்ந்து குடித்து வந்தால் சளி, இருமல் வறண்ட தொண்டை என அனைத்தும் நீங்கும், என சித்த வைத்தியத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

நோய்த் தொற்றைத் தவிர்க்கும் போதிதர்மர் சிகிச்சை

நம் உடம்பில் நோய் தொற்றை உண்டாக்கும் கிருமிகளை அழைப்பதற்கு நாம் போதிதர்மன் வழியைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு வேப்பிலை மற்றும் கீழாநெல்லி இலையை சமமாக எடுத்து அதை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதில் இருந்து 50 கிராம் உருன்டையாக உருட்டி தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதை சாப்பிட்டு பிறகு அடுத்த ஒரு மணி நேரம் எந்த உணவுகளையும் உண்ணக்கூடாது. இதை தொடர்ந்து செய்வதன் மூலம் உங்கள் உடலில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மேலும் படிக்க – பந்தலிலே பாகற்காய் படையலாய் செய்தால் கிடைக்கும் நன்மைகள்..!

காய்ச்சல், சளிக்கு பவளமல்லி

காய்ச்சல், சளி, இரும்பல் போன்றவைகளை உடனே குணப்படுத்த பவளமல்லி இலையை நீரில் அலசி அதில் சிறிதளவு தட்டிய இஞ்சினை மற்றும் பண கற்கண்டையும் சேர்த்து அதை ஒரு டம்ளர் நீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து விடவேண்டும். பிறகு அதை வடிகட்டி குடிப்பதன் மூலம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கன் குனியா, டெங்கு போன்ற காய்ச்சல் விலகும். அதே போல் உங்கள் இரத்தத்திலிருக்கும் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கும்.

நம்முடைய நாட்டு மருந்துகளில் பல தொற்றுக்களை தடுப்பதற்கான மருந்துகள் உள்ளன எனவே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து பிறகு இதுபோன்ற நாட்டு வைத்தியத்தை செய்து பாருங்கள். உங்கள் உடல் ஆரோக்கியம் உங்கள் கையில் இருக்கிறது, என்பதை உணர்ந்து தொற்றுகள் வருவதற்கு முன்பு இது போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வளமாக வாழுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன