உணவுகளை டெலிவரி செய்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்து..!

  • by
corona virus affection to food delivery people

டெல்லியில் பீட்சா டெலிவரி செய்தவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் எந்தெந்த வீட்டிற்கு உணவுகளை டெலிவரி செய்தாரோ அந்த வீட்டில் உள்ள அனைவரையும் டெல்லி அரசு தனிமைப் படுத்தி வருகிறது. அதைத் தவிர்த்து டெலிவரி செய்தவர் பணிபுரிந்த இடம் மற்றும் அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் என அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைத்துள்ளார்கள்.

உணவு விநியோகம்

எந்த ஒரு தவறும் செய்யாமல் பிழைப்புக்காக வேலைக்கு சென்ற இவருக்கு இந்த கொடுமை நேர்ந்துள்ளது. இதைத்தவிர்த்து உணவுகளை வாங்கியவர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டது. எனவே இது போன்ற உணவுகளை வாங்குவதற்கு முன்பாக மிக பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதேபோல யார் மூலமாக இந்த வைரஸ் தொற்று பரவியது என்பதை அறியாமல் அரசாங்கம் தவித்து வருகிறது. இன்னும் சில நாட்களில், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக வெளியே வருவார்கள். இருந்தும் இது போல் அலட்சியமாக இல்லாமல் நாம் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே இந்த நிலை நமக்கு ஏற்படாது.

மேலும் படிக்க – இந்துப்பின் சரும மற்றும் மருத்துவ பயன்கள்

சென்னையில் டெலிவரி

உணவுகளை டெலிவரி செய்யும் ஒரு தனியார் நிறுவனம் சென்னையிலும் ஏராளமான இடங்களில் உணவுகளை டெலிவரி செய்து வருகிறது. இதில் சென்னையை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இவர் கிட்டத்தட்ட 80 க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் தொற்றை பரப்பியிருப்பார் என தமிழக சுகாதாரத்துறை சந்தேகித்து வருகிறது. எனவே இவர் டெலிவரி செய்து அனைவரையும் கண்டறிந்து இப்போது அவர்களை தனிமைப்படுத்தி வருகிறார்கள். எனவே சென்னையில், டெல்லியில் நடந்த நிகழ்வு வேறு எந்த இடத்திலும் நடக்காதவாறு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

டெலிவரி வேலை

டெலிவரி வேலை செய்பவர்களின் வாழ்க்கை பெரிதாக பாதிப்படைந்துள்ள சமயத்தில் மாநில அரசு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அவர்களை மீண்டும் பணி செய்ய அனுமதித்தது, ஆனால் ஒருசிலரின் அலசியத்தினால் இந்த வைரஸ் தொற்று இவர்களுக்கு பரவி இப்போது இது மற்றவர்களையும் அச்சுறுத்தி வருகிறது. எனவே இவர்கள் தங்கள் குடும்பத்தை பாதுகாப்பதற்காக இந்த வேலைகளில் ஈடுபட்டு இப்போது இவர்கள் குடும்பத்திற்க்கே ஆபத்தக் அமைந்துள்ளது. எனவே இதுபோன்ற டெலிவரி செய்து வேலைகளைச் செய்பவர்கள் தங்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் உணவுகளை பாதுகாப்பான முறையில் வாங்கி மற்றவர்களுக்கு டெலிவரி செய்ய வேண்டும்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸிற்க்கான அறிகுறிகள்..!

மழை மற்றும் வெயில் பாதுகாப்பு

சாலைகளில் எல்லா இடங்களுக்கும் சென்று டெலிவரி செய்யும் ஊழியர்கள் தங்களை மிக பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். வெயில் மற்றும் மழை என்று பாராமல் சுற்றி உணவுகளை டெலிவரி செய்யும் பொழுது உங்கள் உடல்நிலை பாதிப்புகள் அதிகமாகும் வாய்ப்புள்ளது. அதை தவிர்த்து உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும் எனவே இதுபோன்றவர்கள் தங்களை பாதுகாத்து கொண்டு தங்கள் வேலைகளைச் சரியாக செய்ய வேண்டும்.

எல்லா சூழ்நிலையும் வேலை செய்யும் இவர்கள் தங்கள் உடல் நிலையை ஆரோக்யமாக பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே இவர்கள் ஆரோக்கியமான உணவுகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். இதை தவிர்த்து வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து வேலை செய்ய வேண்டும், அதேபோல் மழையில் நனைந்தவாறு பாதுகாப்பு உடைகளை அணிய வேண்டும். எல்லோரையும் போல் இவர்களும் பாதுகாப்பாக தங்கள் வேலையை செய்ய வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன