சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..!

  • by
corona virus affection is increasing in chennai

இந்தியாவில் கொரோனாவின் தொற்று, எதிர்பார்த்ததை விட அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் இந்திய அரசு ஊரடங்கை மேலும் 18 நாட்களுக்கு தொடரும் படி கேட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலம் மகாராஷ்டிரா அதைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டவர்கள் ஆயிரத்தையும் கடந்து செல்கிறார்கள். இதில் பாதிப்புகள் அதிகமாக உள்ள மாவட்டத்தில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது.

சென்னையின் நிலவரம்

தமிழகத்தில் அதிக நோயாளிகளை கொண்டுள்ள சென்னையில் கிட்டத்தட்ட 199 பேர் பதித்துள்ளார்கள், அதைத்தொடர்ந்து கோயம்புத்தூரில் 119 பேர் பதித்துள்ளார்கள். இருந்தும் இந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையே தினமும் அத்தியாவசிய உணவுகளுக்கான ரயில் சேவைகளை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தின் தலைநகரமாக இருக்கும் சென்னையில் பாதிப்புகள் அதிகரிப்பதற்கான காரணம் இங்கே இந்தியாவில் உள்ள ஏராளமான மக்கள் குடிப்பொயர்ந்துள்ளார்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமானோர் இங்கு வந்ததாலும் இந்த நோய்த்தொற்று இங்கு அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க – மே மாதம் 29 ஆம் தேதி என்ன நடக்கப்போகிறது..!

சுகாதாரத்துறை

சென்னையிலுள்ள சுகாதாரத்துறை தினமும் ஏராளமான மக்களை பரிசோதித்து வருகிறது. இதை தவிர்த்து கொரோனா உறுதியான நபரின் குடும்பத்தினர்கள் மற்றும் வீட்டு அருகே உள்ளவர்களையும் வீட்டிற்குள் தனிமைப் படுத்தி வருகிறார்கள். இதுவரை கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழக அரசு வீட்டிலேயே தனிமைப் படுத்தி வருகிறது, அதில் சென்னையில் தான் அதிகமான எண்ணிக்கை கொண்டுள்ளது. சென்னையைப் பற்றிய முழு தகவல்களையும் தினமும் உடனுக்குடன் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் மக்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தவிர்ப்பதற்காக எங்கெல்லாம் நோயாளிகள் அதிகமாக இருக்கிறார்களோ அந்த தெருவை முழுமையாக அடைக்கப்பட்டு பரிசோதனை செய்து வருகிறார்கள். அதேபோல் ஒருசில தெருக்களில் மக்களை வெளியே அனுமதிக்காமல், அனைத்து உதவியையும் அரசாங்கத்தின் மேற்பார்வையில் செய்து வருகிறார்கள். இது போன்ற இடங்களில் தினமும் கிருமி நாசினிகளை தெளித்து சுத்தமாக வைத்துக் கொள்கிறார்கள். அதேபோல் உடனடி மருத்துவ ஏற்பாடுகள் மற்றும் மருத்துவ உதவிகள் அனைத்தையும் தருகிறார்கள். எப்போது இங்கே எண்ணிக்கைகள் குறைகிறதோ அப்போது தான் இதுபோன்ற தெருக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும்.

மேலும் படிக்க – கொரோனாவை குணமாக்கும் சிகிச்சை முறைகள்..!

எனவே சென்னையில் பாதிப்புகள் அதிகமாக இருப்பதினால் மக்கள் இதுபோன்ற பாதிப்புகள் உள்ள தெருக்கள் அருகே சுற்றுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். அதேபோல் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். அப்போதும் கையுறைகள் மற்றும் முகமூடி போன்றவற்றை அணிந்து வர வேண்டும். இல்லையெனில் இவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதிப்பார்கள். மக்கள் தேவையில்லாமல் சுற்றுவதை தவிர்ப்பதற்காகவும் மற்றும் அவர்களின் நலனைக் கருதி தமிழக அரசு 500 ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கும்படி காவல்துறையினருடன் கேட்டுக்கொண்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன