பெங்களூரில் கொரோனா அதிகரித்துள்ள 38 முனிசிபாலிட்டி வார்ட்..!

  • by
corona has increased in 38 municipality wards in bengluru

கர்நாடகாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு இப்போது அதிகரித்துள்ளது. இன்று மட்டுமே கிட்டத்தட்ட புதிதாக 36 பேர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவே கர்நாடகாவில் ஒரு நாளில் ஏற்பட்ட அதிகமான பாதிப்பாகும். இன்றுவரை கிட்டத்தட்ட 336 பேர் கொரோனா வைரஸினால் கர்நாடகாவில் பதித்துள்ளார்கள். இதில் ஏராளமானோர் பெங்களூரை சேர்ந்த வர்கள்.

முனிசிபாலிட்டி வார்டு

கர்நாடகாவில் கிட்டத்தட்ட 30 மாவட்டங்கள் இருக்கின்றன, அதில் பெங்களூருவில் மட்டும் கிட்டத்தட்ட 32 முனிசிபாலிட்டி வார்டை சிவப்பு பகுதியாக அறிவித்துள்ளார்கள். அதாவது ஆங்கிலத்தில் ஹாட்ஸ்பாட் என்று இந்த பகுதியை அழைக்கிறார்கள். கொரோனா வைரசின் பாதிப்பு தென்னிந்தியாவில் அதிகமாக இருப்பதினால் கிட்டத்தட்ட ஏராளமான இடங்களை இந்த சிவப்பு பகுதியாக அறிவித்துள்ளார்கள்.

மேலும் படிக்க – பாலூட்டும் தாய்மார்களுக்கு சுகாதார மையம் அறிவுரை

இந்தியாவின் நிலை

இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 170 பகுதிகளை ஹாட்ஸ்பாட் பகுதியாக அறிவித்துள்ளார்கள். அதில் தமிழகத்தில் 22 பகுதிகளும். கர்நாடகாவில் 32 பகுதிகளையும் அறிவித்துள்ளார்கள். தமிழகத்தில் பாதிப்புகள் அதிகமாக இருந்தாலும், வைரஸ் பரவிய இடங்கள் குறைவாகவே உள்ளது. ஆனால் பெங்களூருவில் இது அதிகமாக இருப்பதினால் இதன் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என அச்சம், பெங்களூர் மக்களுக்கு இருக்கிறது.

கட்டுப்படுத்தும் வழிகள்

பெங்களூரில் கொரோனா பரிசோதனை மிக மந்தமான முறையில் சென்று கொண்டிருக்கிறது. எப்போது இவர்கள் பரிசோதிக்கும் எண்ணிக்கைகளை அதிகரிக்கிறார்களே அப்போதுதான் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் முழுமையான எண்ணிக்கை அவர்களுக்கு கிடைக்கும். இதைத் தவிர்த்து எல்லா மாநிலங்களும் எப்படி ஊரடங்கை பின் தொடர்கிறார்களே, இவர்களும் அதே வழியை பின் தொடர்ந்து வருகிறார்கள். இருந்தாலும் ஏராளமான தொழில் நுட்ப நிறுவனங்கள் பெங்களூருவில் இருப்பதினால் இங்கே இந்த வைரஸ் தொற்று அதிகமானால் இந்திய பொருளாதாரத்தில் மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்படும்.

மேலும் படிக்க – அமர்களமாக்கும் அளில்லா ட்ரோன் தக்ஷா

ஹாட்ஸ்பாட் பகுதிகள்

அபாய நிலையில் இருக்கும் பகுதிகளை ஹாட்ஸ்பாட் பகுதிகள் என்கிறார்கள். எனவே இங்கே வசிப்பவர்கள் கிட்டத்தட்ட 28 நாட்கள் வரை வீட்டில் தனிமையாக இருக்க வேண்டும். இதைத் தவிர்த்து இந்த பகுதி முழுக்க அடைக்கப்பட்டு மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் அவர்கள் வீட்டிற்கே கொண்டு சேர்க்கிறார்கள். இதை தவிர்த்து அந்த தெரு முழுவதும் கிருமி நாசினிகள் மூலமாக அவ்வப்போது சுத்தப் செய்து வருகிறார்கள்.

எனவே எல்லா மக்களும் தங்களை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டால் மட்டுமே இந்த வைரஸ் தொற்றிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும். எனவே வீட்டினுள் கவலையாக இருக்காமல் உங்களை முடிந்தவரை உற்சாகமாக பார்த்துக்கொள்ளுங்கள். அதைத் தவிர்த்து வீட்டில் உள்ளவர்களுக்கு உதவியாகவும் மற்றும் அவர்களுக்கு ஊக்கமளித்து இருங்கள். அரசாங்கம் சொல்வதை கேட்டால் மட்டுமே இதிலிருந்து நாம் முழுமையாக கடந்து வர முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன