கொக்கரிக்கும் கொரானா அச்சத்தில் உலகம் அடுத்தது என்ன

  • by

கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தைப் பயன்படுத்தலாம் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது என்ற தகவல்கள் கிடைக்கின்றன. இந்த மருந்தானது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சிறப்புக்குழுவினால் அங்கிகரிப்பட்டது ஆகும்.  இந்த மருந்தினை  கொரோனா பாதித்த நோயாளிக்கும் வழங்கலாம்.

ஆனால், இதனை வழங்குமுன் மருத்துவரின் அறிவுரையின் கீழ் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம். கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது சென்னை மாநகராட்சி இது சிறப்பான நடவடிக்கை ஆகும். 

மாநகராட்சி:

கொரானா பரவாமல் இருக்க சென்னை மாநகராட்சி கொரோனா விழிப்புணர்வு, கிருமி நாசினி தெளிப்பு பணிகள்  சென்னை முழுவதும் நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்க்து ஆகும். 

இங்கு வேலையை முடிக்க ஆட்கள் தட்டுப்பாடு இருப்பதால் அரசானது தொண்டு நிறுவனங்களை நாடுகின்றது, சமூக ஆர்வலர்களும் தொண்டு செய்ய விருப்பம் உள்ள தனி நபர்களும் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சேவையை ஆற்றலாம். 

மேலும் படிக்க: குழந்தைகளைத் தாக்கும்  புதுவித  சிலியாக் நோய்.!

குழந்தைகள் பராமரிப்பு:

வீட்டுக்குள் இருக்கும்  நேரத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் ஆக்கபூர்வமாக தொடர்பு கொள்ள உதவுவதற்காக, பெற்றோருக்கான இந்த ஆறு ஒரு பக்க உதவிக்குறிப்புகள் ஒவ்வொன்றாக ஒரு முறை திட்டமிடுவது, நேர்மறையாக இருப்பது, தினசரி வழக்கத்தை உருவாக்குவது, மோசமான நடத்தைகளைத் தவிர்ப்பது, மன அழுத்தத்தை நிர்வகிப்பது மற்றும் COVID பற்றி பேசுவது ஆகியவற்றை உள்ளடக்கியது. -19. உங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் நன்மைக்காக அவற்றைப் பயன்படுத்துங்கள் அவர்களை பொழுதைப் போக்க நல்ல புத்தகங்கள் படங்கள் பார்க்க அனுமதிக்கலாம். 

விடுமுறை நாட்களாக இருப்பதுடன் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கொஞ்சம் இது மனரீதியாக அச்சம் பதட்டத்தை உண்டு செய்யும். இதனால் இந்த பயத்தை போக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை ஆகும். 

கொரானா வைரஸ் தாக்குதல் காரணமாக கிராமங்களில் கூடும் சந்தைகள் கூட அந்ததந்த நாட்கள் நடைபெறாமல் தள்ளி வைக்கப்படுகின்றன. இது மக்களை பெருமளவில் பாதிக்கச்  செய்யும், என்றாலும் மக்கள் பாதுகாப்பு கருதி எடுக்கப்படும் இந்த நடவடிக்கையை மக்களும் வரவேற்கின்றார்கள் அரசின் இந்த தெளிவான இந்த நடவடிக்கைகளை மக்கள் பின்ப்பற்றத் தொடங்கிவிட்டனர். 

நாட்டின் முக்கியத்துறைகளான நீதித்துறையும் ஸ்தம்பித்து நிற்கின்றது. மருத்துவர்கள் தவிர வேறு யாரும் வெளியில் வராமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.  நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் கிடைக்கச் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அநாவசியமாக யாரும் கூட்டம் கூட தடை விதித்துள்ளது. 

நாட்டிலுள்ள தலைவர்கள், சினிமா பிரபலங்கள், யோகா, ஆன்மீக குருக்கள், சித்தா, ஆயுர்வேத குருக்கள் அனைவரும் தங்கள் ஊக்கப்படுத்தும் வார்த்தைகளால் மக்களை அச்சத்தில் இருந்து விடுபடச் செய்து பாதுகாப்பாக இருக்க முயற்சி செய்கின்றனர். இணய உலகம், சமூக வலைதளங்கள் எங்கும் கொரானாவின் தாக்கம் குறித்தே மக்கள் அதிகம் பேசுகின்றனர். அது அனைவரையும் முடுக்கிவிட்டது எனலாம். இனி அடுத்தது என்ன உலகம் எவ்வாறு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என எதிர்பார்ர்பும், கொரானாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறைத்து உலகம் பேசிவருகின்றது.

மேலும் படிக்க: கொரனாவால் மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன