ஊரடங்கின் போது தனிமை மற்றும் மேலதிக சிந்தனையை சமாளித்தல்…!

  • by

பலரும் ஏதோ ஒரு சமயத்தில் தனிமையை உணர்வார்கள். ஒருவரை சுற்றிலும் எப்போதும் ஆட்கள் இருந்தும், அவர் தனிமையாக உணரலாம். அது ஏன்? ஏனெனில் ஒருவருக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, ஆனால் எத்தனை பேர் உண்மையான நண்பர்களாக இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.
நீங்கள் தனிமையில் இருக்கும் நேரத்தை நன்றாக பயன்படுத்துங்கள்.

உங்களோடு யாருமில்லாத சமயங்களில் தனிமை உங்களை வாட்டி வதைக்கலாம். அந்த சமயத்தில் நீங்கள் தனிமையாக உணர வேண்டியதில்லை. இதற்கு சரியான உதாரணமாக இப்போது ஏற்பட்டுள்ள கொரோனா ஊரடங்கு காலத்தில் தனிமை பொழுதை நன்முறையில் செலவழிக்கமுடியும்.

மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள்:

–> பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் நீங்கள் மிகவும் சுமாரான மதிப்பெண் பெரும் பாடங்களை கூகிள் மற்றும் யூடூப் உதவி கொண்டு நன்கு கற்கலாம், இது உங்கள் பள்ளி நாட்களில் உங்களை மேம்படுத்தும்.

மேலும் படிக்க – யோகாவில் ஓம் ஒலி மற்றும் 108 எனும் புனித எண்ணின் அவசியத்தை அறிந்துகொள்வோம்…!

–> நீங்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர் என்றால் வீட்டில் இருக்கும்போது, கல்லூரிக்கு பின் மேற்கொண்டு வாழ்க்கையில் என்ன செய்வது என்ற எண்ணத்தை மனதில் கொண்டு அனுதினமும் அதற்க்காக உழைக்கவேண்டும், உதாரணமாக நீங்கள் போட்டிதேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொள்ளலாம், மென்பொருள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டுமென்றால் அதற்க்கான அடிப்படைகளை தயார் படுத்திக்கொள்ளுங்கள், ஆங்கிலத்தில் சரளமாக பேச கற்றுக்கொள்ளலாம்.

–> போட்டிதேர்வுகளுக்கு, பெரும்பாலும் UPSC, TNPSC, SSC போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் தேர்வுகள் ரத்தனாலும் என்றோ ஒருநாள் கட்டாயம் நடைபெறும் என்று காத்திராமல் தினமும் தேர்வுக்கான அட்டவணையை தயார்படுத்திக்கொண்டு மாதிரி தேர்வுகளை அடிக்கடி எழுதி பழகுங்கள், ஆன்லைனில் இலவசமாக கிடைக்கும் தரவுகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள், தேர்வில் வெற்றிபெற்றவர்களின் அனுபவத்தை இணையம் உதவிகொண்டு கேளுங்கள்.

பணி புரிபவர்களுக்கான வழிகாட்டுதல்கள்:

–> பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களால் இயன்ற வகையில் உங்களின் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்க வழி இருந்தால் அதை மேற்கொள்ளலாம், மாணவர்களை தொடர் கண்காணிப்பு மூலம் அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பங்களிப்பை உங்களால் இத்தகைய நேரங்களில் தர இயலும். வாட்ஸ்அப் மூலம் சிறு சிறு தேர்வுகள் மேற்கொள்ளலாம், அவர்களுக்கு தொடர் படிப்பின் மீது அக்கறை இருக்குமாறு பார்த்துக் கொள்வது ஆசிரியர்களின் மிக முக்கியமான ஒரு பொறுப்பு.

–> அரசு ஆசிரியர்களோ தனியார் ஆசிரியர்களோ, மாணவர்கள் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர்கள் மாணவர்கள் மீது அக்கறை கொண்டு அவர்களுக்கு படிப்பின் மீது நாட்டம் குறையாமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.

–> வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் உங்களுக்கு கிடைத்துள்ள இந்த ஊரடங்கை பயன்படுத்தி உங்கள் பணிக்கு முடிந்த வரையில் கூடுதல் நேரம் கொடுத்து நீங்கள் கவனம் செலுத்தினால் உங்களுக்கு இத்தகைய நேரங்களில் பணி இழப்பு ஏற்படாது, மேலும் அலுவலகத்தில் பெரிய பொறுப்புகளுக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள்.

–> ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேலைகளில் ஈடுபட இது சரியான தருணம் அதற்காக உடல் நலத்தை கெடுத்துக் கொள்ளக் கூடாது தேவையான நேரங்களில் தேவையான இடைவெளி கொண்டு பணிபுரிவது அவசியம் வீட்டில் இருப்பதால் நல்ல சத்தான உணவுகளை சாப்பிடுவது மட்டுமல்லாமல் குழந்தைகள் மற்றும் உங்களுடைய பெற்றோர்களுடன் நல்ல பொழுதை கழிக்க இது சரியான தருணம்.

அனைவருக்குமான வழிகாட்டுதல்கள்:

–> இந்த ஊரடங்கை அனைவரும் நல்வாய்ப்பாக பயன்படுத்த நீங்கள் உங்கள் குடும்பத்தாருடன் நல்ல விதத்தில் செலவழியுங்கள், குழந்தைகளுடன் பொழுதை கழியுங்கள், அவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுங்கள், பெற்றோருடன் பேசுங்கள் அவர்களின் சிறு வயது பொழுதுகளை பேசி அவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருங்கள், வீட்டில் முடிந்தவரை விளையாடுங்கள்.

–> வீட்டில் உள்ள பொருட்களை அலங்கரியுங்கள், நல்ல புத்தங்களை குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுத்து படிக்க கொடுங்கள், சமையல், வீடு வேலைகளை அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள், சொந்தங்களுடன் வீடியோ அழைப்பில் பேசுங்கள்.

–> ஊரடங்கு நேரத்தில் வீட்டில் யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை குடும்பத்தாருடன் செய்து உங்கள் பொழுதை நன்முறையில் கழித்திடுங்கள்.

மேலும் படிக்க – நீங்கள் செய்யும் அனைத்து செயலிலும் வெற்றி வேண்டுமா-அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது யோகா..! 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன