குக் வித் கோமாளி புகழின் வாழ்க்கைமுறைகள்..!

  • by
cook with comali pugzhal's life style

சமீபத்தில் மிகப் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. இதில் கோமாளியாக கலந்துகொண்டவர் நகைச்சுவை நடிகர் மற்றும் பொழுதுபோக்கு கலைஞர் புகழ், இவர் முதன்முதலில் 2016ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் வெளிவந்த சிரிப்புட நிகழ்ச்சியில் அறிமுகமானர். இதனால் இவரின் பெயரை சிரிப்புட புகழ் என்று மாற்றிக் கொண்டார். தனது தோற்றம் மற்றும் நகைச்சுவை மூலமாக தனது திறமையை வெளிப்படுத்தி படிப்படியாக முன்னேறி இன்று பல ரசிகர்களைக் கொண்டுள்ளார் புகழ்.

சிரிப்புடா புகழ்

2016 நடந்த சிரிப்புட என்ற நிகழ்ச்சியில் முதன் முதலாக போட்டியாளராக அறிமுகமானார். தனது நகைச்சுவை திறமையை முழுதாக வெளிக்காட்ட முடியாமல் போட்டியில் தன்னால் முடிந்தவரை ரசிகர்கள் உற்சாகப்படுத்தினார். அதைத்தொடர்ந்து விஜய் டிவியில் சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார். தான் கலந்து கொண்ட எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை ஏதாவது ஒரு வழியில் வெளிக்காட்டி விஜய் டிவியின் நிரந்தரமான நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார்.

குக் வித் கோமாளி

2019 மற்றும் 2020 களில் நடந்த குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கு பெற்றார். இதைத் தவிர்த்து தனது குறும்புத் தனத்துடன் போட்டியாளர்களுக்கு சமையலுக்கும் உதவினார். இவர் மற்றும் சிவாங்கி இருவரும் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் அடைவதற்கான காரணமாக இருந்தார்கள். இவர்களில் சில்மிஷயத்தினால் இந்நிகழ்ச்சியை எல்லோரும் அதிகளவில் பார்க்கத் தொடங்கினார்கள். கடந்த சில மாதங்களாகவே டிஆர்பி ரேட்டிங் அதிகமாக கொண்ட நிகழ்ச்சியாக இது திகழ்ந்தது.

மேலும் படிக்க – வெகு விரைவில் பெரிய திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.!

புகழின் ஆரம்பகாலம்

புதுச்சேரியை அடுத்து இருக்கும் கடலூரில் பிறந்த இவர் தனது பள்ளிப்படிப்பை சென் ஜோசப் ஹையர் செகண்டரி பள்ளியில் படித்தார், பிறகு ஸ்ரீ பாடலீஸ்வரர் கடலூர் என்.ஐ.ஐடியில் கல்லூரி படிப்பை நிறைவு செய்தார். இப்போது இவர் முழுமையாக சென்னையில் குடிபெயர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்று தனது நகைச்சுவை திறமையை வெளிக்காட்டி வருகிறார். விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் இவர் சமீபத்தில் நடைபெற்ற குக் வித் கோமாளி என்று நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு மீண்டும் எல்லோரையும் குதுகல படுத்தினார்.

வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், நடிகை ரேகா, உமா ரியாஸ், தாடி பாலாஜி போன்ற பல போட்டியாளர்களுடன் சேர்ந்து உதவி புரிந்து நகைச்சுவை செய்த சிரிப்புட புகழ் பல ரசிகர்களை உருவாக்கி மேலும் பல நிகழ்ச்சிகளை அவர்களுக்காக தருவார் என்று எதிர்பார்க்கலாம். புகழ் மேலும் பல புகழை அடைய அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன