கொரோனா வைரஸிற்க்கான தடுப்பூசியின் நிலை..!

  • by
condition of vaccine for corona virus

உலகம் முழுக்க இருக்கும் மக்கள் அதிகளவில் எதிர்பார்க்கப்படுவது கொரோனா வைரஸிற்க்கான தடுப்பூசிதான். உலகில் உள்ள ஏராளமான நாடுகளில், ஏராளமான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை அதிகரித்து வரும் இந்த வைரஸை முழுமையாக அழிக்கும் மருந்துகள் இன்னும் எந்த நாட்டினரும் கண்டுபிடிக்கவில்லை. இதன் ஆராய்ச்சி நிலைமை எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை காணலாம்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் என்பது சார்ஸ் வைரஸின் அடுத்த நிலை என்கிறார்கள், எனவே சார்ஸ் மற்றும் மார்ஸ் வைரஸ்களுக்கு பயன்படுத்தி வந்த தடுப்பு மருந்தை வைத்து கொரோனாவிற்க்கான மருந்துகளை கண்டு பிடித்து வருகிறார்கள். இதன் ஆராய்ச்சிகள் ஏராளமான நாடுகளில் வெற்றி அடைந்தாலும் அதை மனிதர்களுக்கு பயன்படுத்தும் போது அவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயங்கள் உண்டாகியுள்ளது. எனவே இதை கருத்தில் கொண்டு இன்றுவரை கொரோனா வைரஸிற்கான எதிர்ப்பு மருந்துகளை மனிதர்களுக்கு பயன்படுத்தாமல் இருக்கிறார்கள்.

மேலும் படிக்க – பருப்புகளும் அதன் தேவைகளும்..!

சார்ஸ் மருந்து

சார்ஸ் வைரஸிற்க்கு பயன்படுத்திய மருந்தை வைத்து தயார் செய்த கொரோனா தடுப்பு மருந்து சாதாரணமாக 10 சதவீதம் மட்டுமே வைரஸ்களை கொல்லும் தன்மையைக் கொண்டுள்ளது. இதனால் அவர்கள் மேலும் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் ஒரு மனிதரின் உடலில் இருக்கும் கொரோனாவில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே இந்த மாற்று மருந்தின் மூலமாக கொரோனா வைரஸ் பாதிப்படைகிறது என்றார்கள். எனவே இந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்தி கொரோனாவை முழுமையாக அழிக்க முடியாது. அதை தவிர்த்து இதன் மூலமாக ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படும் என்ற அச்சமும் இருக்கிறது.

ஆராய்ச்சியின் நிலை

இந்த வைரஸ் உருவாகிய சீனாவில் தான் இதற்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது. ஏனென்றால் ஏற்கனவே அவர்கள் இந்த வைரஸை பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார்கள், இருந்தாலும் இன்று வரை இவர்கள் இந்த வைரஸ் தொற்றுக்கான மாற்று மருந்தை கண்டு பிடிக்காமல் இருக்கிறார்கள். ஒரு சில நாடுகள் இவர்கள் கண்டுபிடித்த மருந்தை வெளியிடுவதை நிறுத்தி உள்ளார்கள் என்கிறார்கள்.

மேலும் படிக்க – தவறான உணவினால் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கலாம்..!

உலக நாடுகள்

கொரோனா வைரஸிற்க்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என ஏராளமான ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கொரோனா அழிக்கும் மருந்தை ஆஸ்திரேலியாவில் உள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள், ஆனால் அதை மனிதர்களுக்கு இன்றும் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளும் இதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கி உள்ளார்கள். ஆனால் கொரோனா வைரஸை கொள்ளும் முழுமையான திறன் எந்த மருந்திலும் இல்லை.

நிச்சயம் இதற்கான தடுப்பூசி கண்டுபிடித்து மனிதர்களின் எதிர்காலத்தை மருத்துவர்கள் காப்பாற்றுவார்கள், எனவே அதுவரை உங்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கு கைகளை கழுவுவது மற்றும் சமூக இடைவெளி மட்டுமே தீர்வாக இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன