தமிழ்நாட்டில் சமூக தொற்றாக பரவும் கொரோனா..!

  • by
community spread of corona virus started in tamilnadu

உலகில் கொரோனா வைரஸ் பரவுவதை மொத்தமாக மூன்று வகையாக பிரிக்கிறார்கள், அதில் முதல் வகை வைரஸ் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருப்பவர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் பாதிக்கப்படுவது. இரண்டாம் வகை அவர் சென்ற இடத்தில் அவர் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள். மூன்றாவது நிலை தான் சமூக தொற்று, அதாவது இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் சமூகம் முழுவதும் பரவினால் இதை சமூக தொற்றாக பார்க்க படுவார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் இந்த வைரஸ் யாரிடமிருந்து பரவியது என்பதை கண்டுபிடிப்பது மிக கடினம். இப்போது கொரோனா வைரஸ் தமிழகத்தில் சமூக தொற்றாக பரவி உள்ளது என்று ஒரு சிலர் கூறி வருகிறார்கள், அது எந்த அளவிற்கு உண்மை என்பதை பார்ப்போம்.

சென்னை பாதிப்பு

தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரத்து 596 பேர் கொரோனா வைரசினால் பாதிப்படைந்துள்ளார்கள். அதில் 450க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்கள். தமிழகத்தின் தலைநகரமாக பார்க்கப்படும் சென்னையில் கிட்டத்தட்ட 358 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிப்பு அடைந்துள்ளார்கள். இதில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள். கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸின் பாதிப்புகள் தமிழகத்தில் குறைய தொடங்கியது. இருந்தாலும் திடீரென நேற்றையதினம் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பதித்துள்ளார்கள். இதனால் தமிழகம் கொரோனா வைரஸ் தாக்குதலின் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது என வல்லுனர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டார்கள்.

மேலும் படிக்க – ஃபேஸ் மாஸ்க் அணியும் போது கவனிக்க வேண்டியவை..!

சமூக தொற்று

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர் யாரிடமெல்லாம் தொடர்பு வைத்திருந்தார்கள் என்பதை கண்டறிந்து அனைவரையும் வீட்டில் தனிமைப்படுத்தி வந்தார்கள். ஆனால் திடீரென்று கிட்டத்தட்ட 60 க்கும் மேற்பட்டவர்கள் எந்தவொரு தொடர்பும் இல்லாமல் நேரடியாக கொரோனாவால் பாதிப்படைந்தார்கள். எனவே இவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று யார் மூலமாக பரவியது மற்றும் எங்கிருந்து பரவியது என்ற எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை, இதனாலேயே சென்னையில் கொரோனா சமூகத்துக்காக மாறும் அபாயத்தில் உள்ளது. இந்த எண்ணிக்கை 100ஐ தொட்டாள் கொரோனா வைரஸின் பரவுதல் கட்டுக்கடங்காமல் சென்றுவிடும் என ஏராளமான ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

வளையும் வளைவுகள்

உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இருந்தும் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் இந்த வைரஸ் தொற்று இரண்டாயிரத்தை கடந்து செல்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் குறைந்து வருகிறது. அதைத் தவிர்த்து இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த வைரஸ் தொற்றுக்கான முழு விவரங்களை நம்மால் தெளிவாக அறிய முடியும்.

மேலும் படிக்க – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அண்ணாச்சி பூ..!

இன்றுவரை கொரோனா வைரஸிற்கான மாற்று மருந்து கண்டுபிடிக்காத சூழ்நிலை நிலவுவதால் மக்கள் அனைவரும் தங்களை பாதுகாப்பதற்காக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதைத் தவிர்த்து தேவையில்லாமல் வெளியே பயணம் செய்வது மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது போன்ற அனைத்தையும் தவிர்த்து எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அடுத்து வரும் சில மாதங்கள் நாம் இந்த வைரஸ் தொற்றுடன் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படும், எனவே கொரோனாவால் பாதிப்படையாமல் எப்போதும் பாதுகாப்பாக இருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன