ஊட்டச்சத்து நிபுணர்களுடன் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகள்..!

  • by
common questions which are been asked to nutritionists

நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் போதுமான ஊட்டச் சத்துக்கள் இருக்க வேண்டும். புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் போன்றவைகள் நம் உடலுக்கும், நம் உள் உறுப்புகளுக்கும் பாதுகாப்பு அளிக்கிறது. அதைத் தவிர்த்து எந்தவொரு நோய்த்தொற்றும் உங்களை தாக்காதவாறு உங்களை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ளும் செயல்கள் நம்முடைய உணவுகள் நமக்கு செய்கிறது. எனவே நம்முடைய வயதிற்கு ஏற்றார் போல் எந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும் போன்ற ஆலோசனைகளை நம் ஊட்டச்சத்து நிபுணர்களுடன் கேட்டு தெரிந்து அதற்கேற்ப வாழ்வதன் மூலமாக நாம் எப்போதும் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக மற்றும் ஆரோக்கியமாக வாழ முடியும்.

சிறந்த புரோட்டின் உணவு எது

சிறந்த புரோட்டின் உணவு எது என்ற கேள்வி தான் அதிக அளவிலான ஊட்டச்சத்து நிபுணர்கள் உடன் கேட்கப்படும் கேள்வியாகும். அதற்கான பதில் என்னவென்றால் அசைவ உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு முட்டை மற்றும் மீன் உணவுகளில் புரோட்டீன் அதிகமாக உள்ளது என கூறியுள்ளார். சைவ உணவுகளை எடுத்துக் கொள்பவர்கள் நட்ஸ் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ் போன்றவைகளில் இருக்கும் புரோட்டீனின் பயனை பெறலாம்.

தனிப்பட்ட முறையில் ஊட்டச்சத்து நிபுணரிடம் இருந்து ஆலோசனை பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்

எது நல்ல உணவு, எது கெட்ட உணவு

ஊட்டச்சத்து நிபுணரின் பார்வையில் நல்ல உணவு கெட்ட உணவு என்ற வேறுபாடுகள் எதுவும் இல்லை. எந்த உணவாக இருந்தாலும் தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார். கெட்ட கொழுப்புகள் அதிகமாக உள்ள உணவுகளை நாம் எடுத்துக் கொள்வதன் மூலமாக நம் உடலில் தேவையற்ற கொழுப்புகள் அதிகரிக்கிறது. அதை சமாளிப்பதற்காக நல்ல கொழுப்புகள் உற்பத்தியாகும் உணவுகளையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையை சரியாக பின்தொடர்ந்தாள் உங்கள் உடலில் உள்ள கொழுப்புகளை சமநிலையில் வைத்துக் கொள்ளலாம்.

நீர் ஆகாரங்களை நம் உணவில் எப்படி சேர்த்துக் கொள்ள வேண்டும்

கோடைகாலம் மற்றும் குளிர்காலத்துக்கு ஏற்றார் போல் நம் உணவில் நாம் நீராகாரத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். கோடைக்காலங்களில் குளிர்பானங்கள், பழங்கள் மற்றும் பழச்சாறுகளை நாம் அருந்த வேண்டும். பழங்களில் 90 சதவீதம் நீராகாரம் உள்ளது. இதை எடுத்துக் கொள்வதன் மூலமாக உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். அதே போல் குளிர் காலங்களில் சூப், டீ, காபி போன்ற பானங்களை நாம் அருந்துகிறோம். இந்த இரண்டையும் தேவைக்கு ஏற்ப சரியான நேரத்தில் குடிப்பதன் மூலமாக நமக்கு எந்த பாதிப்பும் நிகழாது.

மேலும் படிக்க – இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் ஊட்டச்சத்து நிபுணரை சந்திக்க வேண்டும்..!

டயட் உணவுகள் மற்றும் சக்கரையை பயன்படுத்தலாமா

நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவுகளின் மூலமாகவே நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். அதை தவிர்த்து டயட் உணவுகள் மற்றும் சர்க்கரை இல்லாத சர்க்கரை போன்றவைகளை நம்பி ஏமாற வேண்டாம். அதில் தேவையற்ற ரசாயனங்களை கலப்பதன் மூலமாக உங்கள் உடலுக்குத் தேவையான எந்த சக்திகளும் அது அளிக்காது. மாறாக உடல் சோர்வு, உடல் வலிமை இழத்தல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

நார்சத்தை நாம் எந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்

செரல் உணவுகள், கீரை மற்றும் பருப்புகளின் நார்சத்து அதிகமாக இருக்கும். இதைத் தவிர்த்து இதில் ஐயன் மற்றும் ஜிங்க் சக்திகளும் இருப்பதினால் உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை இது அளிக்கிறது. ஆனால் நார் சத்து இருக்கிறது என்பதற்காக நாம் தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதனால் பாதிப்புகள் உண்டாகாது, ஆனால் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகள் கழிவுகள் வழியாக வெளியேறிவிடும்.

வைட்டமின் டி யின் முக்கியத்துவம்

வைட்டமின் டி குறைபாட்டினால் நம்முடைய உடல் பல பாதிப்புகளை சந்திக்கும், இந்த பயத்தினால் ஏராளமான மக்கள் வைட்டமின் டி மாத்திரைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இது போன்ற மாத்திரைகள் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு உங்களுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்காது. இதனால் நம் வைட்டமின் டி சத்துகள் உள்ள பால், மீன் உணவுகள், முட்டை போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வேறு சிகிச்சையில் இருக்கும்போது எந்த உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்

நீங்கள் ஏற்கனவே ஏதாவது சிகிச்சைகளை பெற்று வந்தால் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் ஒரு சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு சில கீரை உணவுகளில் வைட்டமின் கே அதிகமாக இருக்கும், ஏற்கனவே நீங்கள் மருந்து மற்றும் மாத்திரைகளை எடுத்து வந்தால் வைட்டமின் கே சக்தியை அதிகரிப்பதன் மூலமாக உங்கள் இரத்தத்தை மென்மையாகி விடும். அதேபோல் புளிப்புத் தன்மை உடைய பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலமாக உங்கள் மருந்து மாத்திரையில் இருக்கும் மெட்டபாலிசத்தை உரிந்து விடும். அதேபோல் ஒரு சில உப்புகள் உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கி இருதயத்தை செயல் இழக்கவும் செய்துவிடும்.

மேலும் படிக்க – உணவு முறைகளே ஆரோக்கியத்தின் அடித்தளம்..!

எது போன்ற கொழுப்பு உணவுகளை நாம் எடுத்துக் கொள்ளலாம்

மீன், அவகோடா, நர்ஸ் போன்றவற்றை நாம் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு சில மாமிச உணவுகளையும் நாம் குறைந்த அளவு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நாம் வறுத்த உணவுகள் அல்லது பதப்படுத்திய உணவுகளையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். உயிரினங்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்களை நாம் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். உதாரணத்திற்குச் சீஸ் போன்ற உணவுகள், ஆனால் நாம் பால் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

உங்கள் உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவேண்டும். ஒரு சிலர் தேவையற்ற அறிவுரையினால் தேவையற்ற உணவுகளை எடுத்து தங்கள் உடலை முற்றிலுமாக சீரழித்து விடுகிறார்கள். இதுபோன்ற பிரச்சனையை தடுப்பதற்கு நீங்கள் ஊட்டச்சத்து நிபுணரை சந்தித்து அவரின் ஆலோசனைப்படி உங்கள் உடல் எடை மற்றும் வயதிற்கு ஏற்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன